Wednesday, August 5, 2009

நாணமோ இன்னும் நாணமோ

ஏறுமோ இன்னும் ஏறுமோ?-
மும்பைப் பங்குச் சந்தையில் புள்ளி
முன்பு போல தினசரி துள்ளி
ஏறுமோ ஏறுமோ?

மாறுமோ நாளை மாறுமோ?
நம்மை மாறுகால்கை வாங்கி
நடமாடச்செய்யுமோ ஏங்கி
மாறுமோ மாறுமோ?

காளைகள் ஆட்டங்கள் தொடங்கிடுச்சோ-இன்று
கரடிகள் குகைக்குள்ளே ஒடுங்கிடுச்சோ?
காலையில் ஏறுது மாலையில் இறங்குது
காசுகள் எவருக்கு முடங்கிடிச்சோ?

அது எது..?

வால்தெரு நிலவரம் என்னானதோ?-பங்கு
வாங்க இன்னேரம் பொன்னானதோ?
காத்திருந்தால் வரும் ராஜ்ஜியமோ?
கடைசியில் கிடைப்பது பூஜ்ஜியமோ?

அது எது..?

ஏறுமோ இன்னும் ஏறுமோ?-
மும்பைப் பங்குச் சந்தையில் புள்ளி
முன்பு போல தினசரி துள்ளி
ஏறுமோ ஏறுமோ?

வயிற்றிக்குள் பறக்குது பட்டாம்பூச்சி!-பங்கு
வணிகமே ஒருவிதக் கண்ணாமூச்சி!
அரசனை மாற்றுது ஆண்டியாய் ஆக்குது!
அடிவயிற்றில் தினம் அச்சம் ஆச்சு!

அது எது?

கூரையைப் பிரித்தும் கொடுத்துவிடும்-நம்
குடுமியைப் பிடித்தும் உலுக்கிவிடும்
பொன்மகள் சிலநாள் வருவதுண்டு
போனால் அவரவர் தலையில்துண்டு!

அது எது?

ஏறுமோ இன்னும் ஏறுமோ?-
மும்பைப் பங்குச் சந்தையில் புள்ளி
முன்பு போல தினசரி துள்ளி
ஏறுமோ ஏறுமோ?

மாறுமோ நாளை மாறுமோ?
நம்மை மாறுகால்கை வாங்கி
நடமாடச்செய்யுமோ ஏங்கி
மாறுமோ மாறுமோ?

தமிழன் வேணு

No comments: