வளர்ந்துள்ளேன் மனதளவில் அவ்வளவே
இன்று சென்றேன் மருந்துக் கடை
பில்லில் குறைத்தார் பத்து சதம்
கேட்டால் சொல்கிறார் நீங்கள்
வயது முதிர்ந்தக் குடிமகன் என்று
குடி மகனும் அல்ல வயது முதிர்ந்தவனும் அல்ல
சற்றே மனவளர்ச்சி பெற்றவன் நான்
உணவருந்த ஓட்டல் சென்றேன்
கொடுத்த பில்லில் சாப்பிட்ட காபியைக் காணோம்
கேட்டால் சொல்கிறார் எங்கள் ஓட்டலில்
வயதில் முதியவருக்குக் காப்பி இனாம் என்று
வயதில் முதிர்ந்தவன் இல்லை நான்
சற்றே மனதில் வளர்ந்தவன் அவ்வளவே என்றேன்
பத்திரிகை படிக்க நினைத்தால் முடிவதில்லை
பிறர் பேசுவதோ காதில் விழுவதில்லை
வயதல்ல குற்ற வாளி நாளுக்கு நாள்
சிறுத்துக் கொண்டே போகும் எழுத்துக்களும்
பிறரின் மெல்லப் பேசும் குணமுந்தான் குற்றவாளி
என் பற்கள் கடவுள் தந்தவை
வைத்தியர் வைத்தவை அல்ல
கண்ணுக் கணியும் கண்ணாடியோ
உங்களை அடையாளம் கண்டு கொள்ளத்தான்
ஒத்துக் கொள்கிறேன் சற்றே நிதானம்
வந்து விட்டது என் வாழ்வில் ஆனால் நான்
வயது முதிர்ந்தவன் அல்ல சற்றே
மன வளர்ச்சி அடைந்தவன் அவ்வளவே
தலை மயிரின் கருப்பு மறைந்தது
சூரியன் சதியோ அன்றி நீரில் உள்ள
குளோரின் செய்யும் பணியோ
அழைக்காதீர் அதனை நீர் நரையென்றே
தங்கத்தினும் விலை உயர்ந்த
பிளேடினம் நிறமென் றழைத்தால்
உள்ளம் குளிர்ந்திடுவேன் மீண்டும் சொல்வேன்
வயது முதிர்ந்தவன் அல்ல நான்
மன வள்ர்ச்சி அடைந்தவன் என்றே
என் காருக்கு நான் வாங்கிய கடன் தீர்ந்து
ஆகிறது வருஷம் நாற்பது
வண்டியிலே ஒரு கீரல் இல்லை
சாலையில் ஒடும்போது என்றுமே நிற்பதில்லை
இருப்பினும் சொல்கிறான் இளைஞன் ஒருவன்
ஏய் சாவு கிராக்கி காரு ஓட்டுறியா
கட்ட வண்டி ஓட்டுறியா
ஒண்ணு வேகமாப் போ இல்லே
ஓரமாப் போன்னு
அவன் மீதில்லை எனக்குக் கோபம்
இளசுக் கெங்கே புறியும் பழசின் மீதான மோகம்
என் நண்பர்கள் உடலெல்லாம் சுருக்கம் ஆனால்
என் முகத்தில் மட்டுமே சிலவரிகள்
அவையும் வயதின் முதிர்ச்சி காட்டும் வரிகளல்ல
மனதின் முதிர்வு காட்டும் அழகுக் கோடுகள்
நான் வயது முதிர்ந்தவன் அல்ல
மனது முதிர்ந்தவன்
இன்றைய வீடுகளில் படிகளைக் கட்டுகிறார் உயர்த்தி
அதனால் தான் சற்றே தடுமாறுகிறேன் மாடிப் படிகளேற
தெருக்களிலும் அதிகம் ஏற்ற இறக்கம்
அதனால் தான் வாங்குகிறது சற்றே மூச்சு
நான் வயது முதிர்ந்தவன் அல்ல
மனது முதிர்ந்தவன்
வருடங்கள் ஓடினாலும் என் பின்னே
என்றுமே ஓடுவேன் இளைஞர்கள் முன்னே
டப்பாங் குத்து ஆட்டமா டென்னிஸு ஆட்டமா
No comments:
Post a Comment