Saturday, August 15, 2009

மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள் !



மூளைக்குச் சரியான உணவு கிடைத்தால்தான் ஞாபக சக்தி ஒருமுகக் கவனத்துடன் செயல்படும் ஆற்றல் முதலியன நமக்குக் கிடைக்கும்.

மூளைக்கு உதவும் சரியான உணவைத் தேர்ந்தெடுக்க ஓர் எளிய வழி உண்டு. பளபளப்பாக ஒளிரும் நிறத்தில் இருக்கும் உணவு வகைகள் பெரும்பாலும் மூளையின் பசியைப் போக்கும் முக்கிய உணவுகளாகும். ஏனென்றால் இந்த உணவு வகைகளில் போதுமான அளவு வைட்டமின்கள் தாது உப்புகள் பைட்டோ கெமிக்கல்கள் முதலியன உள்ளன.

இவை மூளையின் செயல் திறமை பாதிக்கப்படாதபடி பராமரித்து வருகின்றன. திராட்சை ஆரஞ்சு தக்காளி காரட் செர்ரிப் பழங்கள் முதலியன இந்த வகையில் மூளைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் நல்ல உணவுகளாகும். இவற்றில் மூன்று ஆ-கள் உள்ளன. நல்ல மனப்பாங்கு (ஆழழன) எப்போதும் செயல் நோக்கமாயிருத்தல் மன உறுதியாக எடுத்ததைச் செய்து முடித்தல் (ஆநவெயட Pநசகழசஅயnஉந) ஆகிய செயல் விளைவுகளை இந்த உணவுகள் ஏற்படுத்தியே தீரும்.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும் காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது காரட் சாப்பிட்டவர்களின் அறிவாற்றலும் ஆர்வமும் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது வர்ஜீனியா பல்கலைக் கழகத்தின் மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள்.

இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின்இ அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பதால் மேற்கண்ட மூன்று ஆ-களும் நம்மிடம் எப்போதும் தொடரும்.

மூளைக்கு எப்போதும் ஞாபக சக்தித்திறன் இருக்க வேண்டும். அதற்குத் தேவை கொழுப்பு. வெண்ணெய் நெய் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் கொழுப்பு தீங்கானது. மீனிலிருந்தும் மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. மீன் உணவு சாப்பிட இயலாது எனில் மீன் எண்ணெய் மாத்திரை இரண்டு மட்டும் சாப்பிடுவது நல்லது என்கிறார் ஒரிகான் உடல்நல விஞ்ஞானப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறைப் பேராசிரியர் வில்லியம் கான்னர் என்பவர். மூளையில் ஏற்படும் ஓட்டையைத் தையல்காரர்போல் சிறப்பாகதத் தைத்து மூளையை ஒழுங்காகச் செயல்படுத்துபவைஇ மீனும் மீன் எண்ணெயும் என்கிறார் இவர். திடீர் முடிவுகளை எல்லோருக்கும் நன்மையாக முடியும் விதத்தில் எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.

‘மீனா? உவ்வே!’ என்பவர்கள் சோயா எண்ணெய் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி வந்தால் போதும்.

உடலில் எந்த உறுப்பையும்விட அதிகமாக ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்வது மூளைதான். எனவே மூளையின் செல்கள் அழிந்துவிடாமல் இருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம் குழப்பம் நோய்த்தாக்குதல் அல்ஜிமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி ஏ ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

இவற்றை எல்லாம் பார்த்துச் சாப்பிடவும் ஓர் எளிய வழி உண்டு. மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.

அரிசி ரொட்டி கோதுமை உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும் காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும் பெர்சி மற்றும் செர்ரி பழங்கள் அப்ரிகாட் பீச் அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.

மனதை அமைதிப்படுத்தி தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவேஇ ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

மேற்கண்ட உணவு வகைகள் தினமும் இடம் பெற்றால் வைட்டமின்களுடன் உடலுக்கு பைட்டோ கெமிக்கல் என்ற இராசயனப் பொருளும் கிடைக்கும். அறிவாற்றல் பத்து வயதில் இருந்து எண்பது வயதிலும் கூட மிகச்சிறப்பாக இருக்கும்.

எனவே சோர்வான மனநிலை தொடர்ந்தால் மூளைக்குப் பசி எடுக்கிறது என்று தெரிந்து கொண்டு மேற்கண்ட உணவு வகைகளை எல்லா வயதுக்காரர்களும் பின்பற்றுவார்கள்.



--

||^அன்புடன்^||

தமிழினியன்

No comments: