Saturday, August 29, 2009

பிணக்கு

நீ + நான் = காதல்...

நான் - நீ = பூஜ்யம்
நீ - நான் = பிரபஞ்சம்...
நான் x நீ = நீ
நீ x நான் = நீ
நான் / நீ = பூஜ்யம்
நீ / நான் = வரையறுக்க முடியாது..

எனக்கும் உனக்கும்
உள்ள விகிதம்
பூஜ்யம் :: பிரபஞ்சம்...

நீ என்
வர்க்கம்தான் என்றாலும்
என்னைப் பிரிகையில்
வர்க்கமூலமாகிறாய்...

நான் அன்று
புரிந்துகொள்ளாத
கணக்குப்பாடத்தை
உன்னை வைத்து
புரிந்துகொள்ள முனைகிறேன்...
என்னை
பித்தன் என்கிறாய்...

பிச்சைப்பாத்திரத்துடன் நான்...
காதல்
பிச்சையிடக் காத்திருக்கும் நீ...
பிச்சையிடாதே...
உன் முன்
மண்டியிட்டுப்
பிச்சையேந்தவே நான்
விருப்பப்படுகிறேன்...

எப்படிவேண்டுமானாலும்
திட்டிக்கொள்...
பிச்சைக்காரனென்றும்
பித்தனென்றும்...
ஆனால்
அத்தனையும்
உன்னால்தான் என்பதை
ஞாபகம் வைத்துக்கொள்...

உன்னை நினைந்ததில்
மகிழ்வில் நனைந்ததில்
என் கணக்குகள்
பிணக்குகளாகிப்போயின...

--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி

No comments: