எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே
வெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத பார்த்தாலும் வாந்தி வரும் கிச்சனை பார்த்தாலே கொமட்டும்.
லைட்டான உணவா எடுத்து கொள்ளலாம்.
ஜூஸ் வகைகள் பழங்கள் நிறைய சாப்பிடலாம். புளிப்பு சுவையுடைய குழம்பு வகைகள் வாய்க்கு ருசிபடும். எத சாப்பிட்டாலும் வாமிட் வருதுன்னு சாப்பிட பயந்து ஒன்றும் சாப்பிடாமல் இருப்பது கேஸ் டிரபுள் வந்து, தெம்பிழந்து. குளுக்கோஸ் ஏற்றும் நிலையில் கொண்டு போய் விடும்.
முதலில் இருந்தே எப்போதும் ஆரஞ்சு ஜூஸ், லெமன் ஜூஸில் கொஞ்சம் குளுக்கோஸ்,ஒரு பின்ச் உப்பு போட்டு குடிக்கலாம். இது நல்ல எனர்ஜி மயக்கத்தை கேட்கும்.மாதுளை பழம் வாய்க்கு ருசி படும், வாய் கசப்பிற்கு ஆல் பகடாவை வாங்கி வயில் அடக்கி கொள்ளலாம்.
அதிக வெயிட் தூக்க கூடாது வேக மாக மாடிப்பறி ஏறி இரங்கக்கூடாது.
4 ஆம் மாதம் வாந்தி நின்று கொஞ்சம் தெளிச்சல் ஏற்படும், அப்போது நல்ல இரும்பு சத்துள்ள காய் கறிகள், முக்கியமாக புரோக்கோலி மிகுந்த இரும்பு சத்துடையது. புரோகோலி சூப் மற்றும் புரோக்கோலி மட்டன் வறுவல் சாப்பிட்லாம். 4 லிருந்து 6 மாதம் வரை நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இருப்பு சத்துள்ள உணவு எடுப்பதால் டெலிவரி சமையத்தில் குறையும் ஹிமோகுளோபின் அளவை சரியாக வைத்து கொள்ளலாம்.
மன்பத்தையில் ஆட்டு பார்ட்சில் ஒன்றான மண்பத்தையில் அதிக இரும்பு சத்து உள்ளது அதை மிளகு இஞ்சி பூண்டு சேர்த்து சுட்டு சாப்பிடலாம்.
சிலர் எண்ணை அதிகமுள்ள அயிட்டம் எடுக்க வேண்டாம் என்று டயட் செய்பவர்கள் சாப்பிடும் எண்ணையில்லா சப்பாத்தியை கர்பிணிகள் உட்கொள்ள வேண்டாம்.
நெல்லிக்காய் அவித்து அதில் உப்பு ஊறுகாய் அல்லது தேன்,சர்கக்ரை பாகு, வெல்லப்பாகில் ஊறவைத்து சாப்பிடலாம்.
ஒன்றும் பிடிக்கலைன்னு சிலர் வெரும் தயிர் மட்டும் போட்டு சாப்பிடுவார்கள்.ஓரளவிற்கு தான் சேர்த்து கொள்ளனும், அதிக புளிப்பு அயிட்டம் சப்பிடுவதால் கர்பத்திலேயே குழந்தைகளுக்கு சளி ஏற்படுகிறது,
இது குழந்தை பிறந்ததும் ரொம்ப சளியா இருக்குன்னு உடனே ஆன்டிபயாட்டிக்க கொடுப்பாங்க, வெரும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு எப்படி சளி பிடிக்கும், கர்பிணிகள் கர்ப காலததிலும், பிள்ளை பெற்றதும் சாப்பிடும் உணவு சரியானதாக இருக்கவேண்டும்.
சிலருக்கு எதுவுமே பிடிக்கலையின்னு ஊறவைத்த அரிசி, புட்டரிசி மாவை அள்ளி சாப்பிடுவார்கள் அது இரத்த சோகை ஏற்படும், குழந்தையின் தலையில் மாவு போல் ஒட்டி கொண்டு பிள்ளை பெறும் நேரத்தில் மிகவும் சிரமம் ஆகிவிடும்.
இரத்த சோகைக்கு சுவரொட்டி என்னும் மண்பத்தை ஆட்டு பாட்ஸில் ஒன்று இதை கர்பிணி பெண்கள் கர்பகாலத்தில் வாரம் முன்று முறை சாப்பிட்டால் ஹிமோ குளோபின் அள்வு அதிகரிக்கும்.
பாயிஜாவின் சுவரொட்டி பிரையை பார்க்கவும்.
கிட்னி பிரை, ஈரல் கூட்டு இதையும் கர்பிணிகள் அடிக்கடி சாப்பிடாலாம். ஹெல்த் மற்றும் அயர்ன் டானிக்கு பதில் இந்த பக்க உணவை சேர்த்து கொள்ளலாம்.
தங்கைக்கு ஹிமோகுளோபின் அள்வு 6 ஆக குறைந்து விட்டது , ஓரளவிற்கு இதெல்லாம் செய்து கொடுத்து கரெக்டாக பிள்ளை பெறும் நேரத்தில் 10 க்கு கொண்டு வந்தாச்சு, டாக்க்டருக்கே ஆச்சரியம்.
சரியாக ஓவ்வொருவருக்கும் அவர்களுடைய ஹிமோகுளோபின் அளவு 12 இருக்கனும். நம் நாட்டு பெண்கள் அதிக உழைப்பாளிகள் 10 க்கு மேல் ஏர சான்ஸ் இல்லை
7 மாதத்தில் சில பேருக்கு கால் பொத பொத வென பன் மாதிரி வீங்கும், அது கர்ப காலத்தில் வரும் பிரஷரினால் வருவது.
அதற்கு உப்பு சிறிது கம்மியா போட்டு சமைத்து சாப்பிட்டால் போதுமானது.
கால் வீக்கத்துக்கு பார்லி வேக வைத்த தண்ணீர் குடிக்கனும், வெரும் பார்லிய ஊறவைத்து அதை வேகவைத்து வடிகட்டிய தண்ணீர் இது போல நிறையதினம் இரண்டு டம்ளர் அளவிற்கு குடிக்கலாம்
தினம் பார்லி தண்ணீர் குடிக்க முடியாது.
பார்லி காய்கறிகள் எல்லாம் மொத்தமாக வேக வைத்த சூப் செய்து குடிக்கலாம்.
பார்லி அடை கூட சாப்பிடாலாம், சாதா பருப்படை போல் அதில் பார்லியும் கலந்து ஊறவைத்து அரைத்து சுட்டு சாப்பிடலாம்.பார்லி குறிப்புகள் நிறைய மேனகா, கீதா ஆச்சல் பதிவுகளில் இருக்கு, அதை சென்று பார்க்கவும். என் தங்கைக்கு அப்படி தான் செய்து கொடுத்தேன்.காலை கீழே தொங்க போட்டு உட்கார வேண்டாம் வீக்கம் குறையாது.
பெட்டில் உட்காரரும் போதும் காலை நல்ல நீட்டி உட்காரனும்.சேரில் சோபாவில் உட்காரும் போது காலுக்கு ஒரு சின்ன ஸ்டூல் போட்டு உட்காரவும்.தூங்க்ரொம்ப நேரம் நிற்க ,நடக்க வேண்டாம்..
முக்கியமாக படுக்கும் போது மல்லாக்க படுக்கக்கூடாது ஏதாவது ஒரு புறம் சரிந்து வயிற்று பக்கம் ஒரு தலையணையும் இரண்டு காலுக்கிடையில் ஒரு தலையனைவைத்து படுப்பது நல்லது.குழந்தைகள் அதிகம் உள்ள வீட்டில், எதிரில் வந்து இடித்து விட வாய்பிருக்கு எப்போதும் நடக்கும் போது நிற்கும் போது இரண்டு கைகளையும் வயிற்றுக்கு முன்புறம் வைத்து கொள்வது நல்லது.அதே போல் சோபா சேரில் உட்காரும் போது வயிற்றின் முன் ஒரு சிறிய தலையனை வைத்து கொள்ளவேண்டும்.
இரவு தூங்க போகும் போது வெது வெதுப்பான வெண்ணீரில் காலை சிறிது நேரம் வைக்கவும்ஹை ஹீல்ஸ் போடக்கூடாது, சாதராண ஷாப்ட்டான செருப்பை பயன் படுத்தவும்.
ஏழாம் மாதத்திலிருந்து தினம் இரவில் பாலை நன்கு காய்ச்சி, அதில் இரண்டு இதழ் குங்குமப்பூ உரைத்து சேர்த்து கலந்து குடிக்கவும். இது கர்பிணிகளுக்கும்,கர்ப காலத்தில் குழந்தைகளுக்கு சேரும் சளியையும் கட்டுப்படுத்தும், பாட்டிமார்கள் அந்த காலத்தில் ஒழுகாக சாப்ரான் பால் குடிக்கனுமே என்று இதை குடித்தால் குழந்தை நல்ல கலராக பிறக்கும் என்று கட்டி விட்டதால் இன்னும் எல்லோரும் குங்குமப்பூ (சாப்ரான்) பால் குடித்தால் குழந்தை சிகப்பாக பிறக்க்கும் என்ற எண்ணம் தான் எல்லார் மனதிலும் இருக்கு.(இது சாதாரனாமாக நாமும் சாப்ரான் பால் சளிக்கு குடிக்கலாம்) நான்ன் பிள்ளைகளுக்கு அடிக்கடி கொடுக்கிறேன்.
எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே என்பார்கள் அந்த கால பாட்டி மார்கள்.
எட்டுமாதத்தில் கர்பிணி பெண்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும், மாடிப்படி இரங்கும் போது, பாத்ரூம் கழுவும் போது , பாத்ரூமிற்குள் நுழையும் போது பார்த்து போகனும் சோப்பு நுரை ஏதும் இருந்தால் வழுக்கி விடும்.இப்ப எல்லா வீடுகளிலும் டைல்ஸ் தான் வீடு துடைத்து இருந்த இடத்தில் கொஞ்சமா தண்ணீர் இருந்தாலும் வழுக்கி ஆபத்தை எற்படுத்தும்.எதாவது பொருட்கள் உயரத்தில் இருந்தால் அதை கிட்ட தானே இருக்கு என்று முயற்சிக்க வேண்டாம், கண்டிப்பாக கீழே விழ சான்ஸ் இருக்கு.
//இப்படி தான் ஒரு வீட்டு பங்க்ஷனில் எட்டு மாத கர்பிணி பெண் டீ போடும் போது இவங்க கீழே உட்கார்ந்து பங்க்ஷன் என்பதால் பெரிய குடம் நிறைய டீ, வடிகட்டியை பிடிக்க, எதிரில் நின்று பெரிய பானையோடு டீயை ஊற்றும் போது கை தவறி அந்த பெண்ணின் வயிற்றில் விழுது பிள்ளை தாச்சிக்கு டீ குளியல் அவள் துடித்து போனால். தோலெல்லாம் உறிந்து அந்த குழ்ந்தை ய பெற்றுடுக்கும் கஷ்டத்துடன் இந்த புண்களோடும் வயிற்றிலிருந்து கால் முழுவதும் கொப்புளங்கள்.அத்துடன் அந்த குழந்தையை பெற்றெடுத்தாள். , எத்தனை கழ்டம் அந்த பெண்ணிற்கு.குழந்தையும் நார்மல் டெலிவரி கிடையாது சிசேரியன் (இது எங்க குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவம்)//
9 மாதம் நல்ல நடை பயிற்சி செய்யுங்கள்.சுக்கு பால், பூண்டு பால், உளுவா கஞ்சி , சோம்பு தண்ணி, முட்டை மிளகு சோறு இதை சாப்பிடால் வாயு கலைந்து சுகப்பிரசம் ஆகும்.
ஒன்பதாம் மாதம் வெது வெதுப்பான வெண்ணீரை இடுப்பில் தினம் ஊற்றவேண்டும்.
கர்பகாலத்தில் மற்றசிந்தனைகள் மற்ற பிரச்சனைகளை மனதில் போடமால் குழ்ந்தைய நல்ல படியாக பெற்றெடுக்கும் நினைவோடு மட்டும் இருங்கள்.
என்னேரமும் திக்ரு , மொழிந்த வண்ணம் இருக்கங்கள். தொழுகை வணக்கங்களில் மனதை செலுத்தவும். நல்ல இனிமையான இசையை கேளுங்கள். அதிரடியான படங்களை பார்க்க வேண்டாம்.
எனக்கு தெரிந்ததை எழுதி இருக்கிறேன், இது தாயகப்போகும் கர்பிணிகளுக்கு பயன் படும் என்று நினைக்கிறேன்.
பிறகு என்ன சுகப்பிரசவ்ம் தான். குழந்தை கையில் வந்து விட்டால் அவர்களை வளர்பதே பெரிய பாக்கியாமாக நாட்கள் சுவரஸியமாக நகரும்.
ஸாதிகா அக்காவில் இந்த அறிவான சந்ததிகளையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.அதோடு, இதில் நான் குழந்தை வளர்பு டிப்ஸ்+குழந்தை உணவையும் போட்டுள்ளேன். ஒவ்வொன்றாக கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.
Posted by Jaleela Kamal at 8:00 AM 60 கருத்துகள்
Labels: கர்பிணி பெண்களுக்கு, பெண்கள் பகுதி
Sunday, January 10, 2010
தாய்மை ஒரு இனிய பயணம்
வாங்க தோழிகளே இங்கு ஒரு தோழி கர்பிணி பெண்களுக்காக தன்னுடைய அனுபவத்தை பதிவுகளாக போட்டு இருக்காங்க.
புதுசா கல்யாணம் ஆகப்போகிறவர்களுக்கு, புதுசா கல்யாணம் ஆகி குழந்தையை எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு இந்த பிலாக் உதவும்.
இன்று தான் இந்த பிலாக் என் கண்ணில் பட்டது
தாய்மை ஒரு இனிய பயணம் இதில் சென்று படித்து பயணடைந்து கொள்ளுங்கள்.
Posted by Jaleela Kamal at 6:05 PM 2 கருத்துகள்
Labels: கர்பிணி பெண்களுக்கு
Tuesday, June 16, 2009
கர்பிணி பெண்களுக்கு 2
கர்பிணி பெண்களுக்கு எடை குறைவு மற்றும் இரத்ததின் அளவு கம்மியாகி
விட்டால்
1. இரவு இரண்டு வேலையும் அத்தி பழம் இரண்டு பேரிட்சை இரண்டும், காய்ந்த திராட்சை ஸ்வீட்டுக்கு பயன் படுத்துவது இது முன்றையும் தினம் காலையில் சாப்பிடவேண்டும்.இது முன்றையும் சேர்த்து ஹல்வாவாகவும் செய்து சாப்பிடலாம்.
2.புரோகோலி சூப், பொரியல்,புரோகோலி பீஃப் போன்றவை சாப்பிடலாம்.இந்த புரோகோலியில் அதிக இரும்பு சத்து உள்ளது.
3.ஏதாவது ஒரு கீரை சிறு பருப்பு சேர்த்து கூட்டு வைத்து (அ) பிரட்டியோ கறியுடன் சேர்த்தோ சாப்பிடலாம்.
4.மண்ணீரல் சுட்டு அல்லது பொரித்தோ சாப்பிடலாம். இது வாரம் முன்று முறை சாப்பிடாலே ஹிமோகுளோபின் அளவு கூடும்.
5.சாலட் நிறைய செய்து சாப்பிடலாம்.
6.கொத்துமல்லி, கருவேப்பிலை அரைத்து ,துவையலாக (அ) ரசம் வைத்து சாப்பிடலாம்.
7.பயிறு வகைகளை ஊறவைத்து அடையாக சுட்டு சாப்பிடலாம்.
8. கேழ்வரகில் பானம், புட்டு,இனிப்பு அடை போன்றவை சாப்பிடலாம்.
9.பீட்ரூட் ஜூஸ், ஹல்வா, பொரியல், சாலட், பீட்ரூட் வித் கீமா கடலைபருப்பு சேர்த்து கறி பண்ணி சாப்பிடலாம்.
10. இரவில் மட்டும் லேசான ஆகாரங்கள் உண்பது நல்லது அதுவும் 7 லிருந்து 8 மணிக்குள் இரவு சாப்பாட்டை முடித்து கொள்ளவும்.
ஏன் உடல் எடை குறைகிறது என்றால் மசக்கை காரணமாக இரவில் லைட்டாக சப்பாத்தி சாப்பிட்டு வருவதால் நாளடடைவில் பிள்ளை பெறும் நேரத்தில் எடை குறைந்து விடுகிறது. ஒரு நாளைக்கு முன்று டம்ளர் பால் அருந்துவது நல்லது. இது குழந்தை வளரும் சமையத்தில் அவர்களுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைத்து விடும்.
அதே போல் தாய்மார்கள் சாப்பிடும் ஓவ்வொரு உணவும் குழந்தையை போய் தான் அடைகிறது என்பதை மனதில் கொண்டு நேரம் தவராமல் சாப்பிடவேண்டும்.
இரண்டு மாததிலிருந்து ஐந்து மாதம் வரை எவ்வளவுக்கு எவ்வளவு சத்தான ஆகரம் சாப்பிடுகிறீர்களோ அவ்வளவு நல்லது.
Posted by Jaleela Kamal at 7:42 PM 1 கருத்துகள்
Labels: கர்பிணி பெண்களுக்கு
Tuesday, May 26, 2009
உளுவா கஞ்சி (சுகப்பிரசவத்திற்கு)
தே.பொருட்கள்
**************************
அரிசி = கால் கப்
வெந்தயம் = ஒரு மேசை கரண்டி
பன�
No comments:
Post a Comment