ஆறாவது உலக கன்னட மாநாடு
பெங்களூரு: ஆறாவது உலக கன்னட மாநாடு அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் செப்டம்பர் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடக்கிறது. மாநாட்டை அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் துவக்கி வைக்கிறார்.
நியூஜெர்சி மாகாணத்தில் செயல்படும் பிருந்தாவன கன்னட கூடா என்ற அமைப்பு மாநாட்டை நடத்துகிறது. ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கர்நாடக மாநிலத்தவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஊர்வலமும் நடைபெறும். இத்தகவலை அமெரிக்க கன்னட கூடா சங்கத்தின் தலைவர் ரவி தன்கனிகோடே தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் கன்னட மொழி பேசுவோர் கலாசார அமைப்பின் ஆங்கிலப் பெயர்ச்சுருக்கம் "அக்கா'. இந்த அமைப்பின் கீழ் 36 கன்னட அமைப்புகள் செயல்படுகின்றன. அவற்றில் அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கன்னட மொழி பேசுவோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
http://ping.fm/AHklQ
நண்பர்கள் கலந்து கொள்ளவும்.
~காமேஷ்~
No comments:
Post a Comment