Saturday, August 15, 2009

கிணற்று மனசு......

யாருமேஇல்லாத இதயவீடுக்குள்ளே.....
இறைவன் இருக்கக் கண்டேன்.....
இறைவனை இருத்திய இதயத்துள்ளே....
யாதொரு நினைவும் நழுவக் கண்டேன்.....
நித்தம் நித்தம் நான் மட்டும் நுழைந்து....
நுழைந்ததும் தொலையும் என்னை நானே...
அங்கே...... அடிக்கடி..... தேடக் கண்டேன்......
ஜென்ம ஜென்மமாய்.....ஒட்டடை படிந்த ஆன்மா....
தேடுதலில்......நிர்மலமாய்..........விஸ்தாரமாய்....
நான்முகனிடம் நான் வாங்கிய வரம்....
நான்கும்.......அருள்....பொருள்....இன்பம்...வீடென.....
இறைவனே...உன்னோடு வாழும் போது தான் தெரிகிறது...
வெளியுகம்...எத்தனை சிறிதென்று....!!!!
பொதி சுமக்கும் கழுதை மனசை.......
கழட்டி வைக்கத் தெரியாத மனிதனுக்கு.....
கண்டுகொள்ளக் கற்றுக்கொடு.......
அவர் தமக்குள் ஊறும்...
கிணற்று மனசை......!!!!


ஜெயஸ்ரீ ஷங்கர்....

No comments: