மலரும் நினைவுகளை அசை போடலாம் வாங்க
அக்கா கொடுத்த அழகான
மயிலிறகு குட்டியிடுமென
அட்டைக்குள் அடைகாத்தது
அம்மா பார்ப்பதற்குள்
அப்பாவை மதிப்பெண்
அட்டையில் ஒப்பமிடவைப்பது
அடுக்களையில் சென்று
அனைத்தையும் ஆராய்ந்து
அனைவரும் அறியும்முன்
கிடைத்தவற்றை விழுங்கியது
கிரிக்கெட் விளையாடி சிலபல
கண்ணாடிகளை களைந்து
கட்டுபாடற்ற காத்தோட்டமான
வீடுஅமைய பாடுபட்டது
சூடுகொட்டை தேய்த்து அருகில்
உள்ளவர்கள் தொடையில்
வைத்து அவர்களுக்கும் சூடு
சொரணை சொல்லிகொடுத்தது
மரக்கிளையில் கயிறுகட்டி
ஊஞ்சலாடி ஆணிவேரை
ஆட்டி மரத்தை மண்ணோடு
மண்ணாக மக்கச்செய்தது
ஆசிரியர் அறிவுறுத்தியும்
அடங்காமல் வகுப்பறையில்
அளவில்லா ஆனந்த்தத்துடன்
அலப்பறை பண்ணியது
கணக்கிலாமல் கணக்கில்
பூஜ்ஜியங்களை பூக்கச்செய்து
அம்மாவிடம் அர்ச்சனையுடன்
ஆயுதபூஜை ஏற்றுக்கொண்டது
No comments:
Post a Comment