Thursday, August 6, 2009

இன்றைய செய்தி குடி மயக்கத்தில் இருந்த வாலிபரின் கையை உயிரியல் பூங்காவின் வெள்ளைப்புலி கடித்துக் குதறியது.

ஹைதராபாத் – 5/8/09: உயிரியல் பூங்காவில் இன்று மாலை பார்வை நேரம் முடிந்து கதவுகள் அடைக்கப் பட்டு மிருகங்கள் அவற்றின் இரவு நேரக் கூண்டுகளுக்குள் அடைக்கப் பட்ட பின் குடி மயக்கத்தில் இருந்த ரமேஷ் என்ற வாலிபர் வெள்ளைபுலி ஒன்றின் கூண்டருகே சென்று ஜன்னல் கம்பி வழியே தன் கையை விட்டிருக்கிறர். புலி அவர் கையைக் கடித்துக் குதறியது. ரமேஷின் அலறலைக் கேட்டு ஒடி வந்த உயிரியல் பூங்கா ஆட்கள் மிகுந்த சிரமப் பட்டு அவர் கையை விடுவித்தனர்.

மிகுந்த ரத்த சேதம் எற்பட்ட அவர் மருத்துவ மனைக்கு ஆபத்தான நிலையில் கொண்டு செல்லப் பட்டார். வைத்தியர்கள் பல மணி நேரம் போராடி அவர் உயிரைக் காப்பாற்றினர்.

ரமேஷ் முதலில் தன் உயிரை விடுவதற்காகவே அப்படிச் செய்ததாகக் கூறினார். பின்னர் போலீஸ் வந்து விசாரிக்க ஆரம்பித்ததும் தான் புலிக்கு உணவாக புல் கொடுக்க முனைந்த போது புலி தன் கையைக் கடித்து விட்டது என்றார்.

இதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெரிகின்றது அல்லவா?
ஒன்று: வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
இரண்டு: புலி பசித்தாலும் புல் தின்னாது.

கூடவே புதிய குரளும் பிறக்கிறது.

கையா லாகாத காரியம் ஒன்றுண்டேல்
தலையாலதைச் செய்திடல் நன்று

நடராஜன் கல்பட்டு

No comments: