by raja
வணக்கம் நண்பர்களே,
என் சொந்த ஊர் : ராஜ மன்னார்குடி - மன்னர்கள் குடில் என்று இருந்தது கலப்போகில் மன்னார்குடின்னு மாறியதா ஊர் பெருசுங்க சொல்ல கேட்டு இருக்கேன் ,
ஊர் சிறப்பு : மன்னைக்கு மதிலழகு அப்படின்னு சொல்லுவாங்க .எங்க ஊர் ராஜ கோபால சுவாமி கோவில் ஏழடுக்கு மதில்கள் கொண்டது பார்க்கவே ஒய்யாரமாக மிக உயரமாக இருக்கும்.நான்கு கோபுர வாயில்களும் மிக பிரம்மாண்டமாக இருக்கும் .பங்குனி உத்சவம் மிக மிக பிரபலம் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இருந்து பக்த்தர்கள் ராஜ கோபாலனின் அலங்கார அழகை காண வருவர் ..பதினெட்டு நாள் திருநாள் இருபதுக்கும் மேல வகை வகையான அலங்காரங்களில் , வாகனங்களில் ஊரை வலம் வருவார்
கடைசி நாள் தேர் .நான்கு ராஜவீதிகளிலும் சுற்றி வரும் .அது முடிந்தது பதினைந்தாம் நாள் தமிழகத்திலேயே பரப்பளவில் மிகப்பெரிய கோவில் தெப்பக்குளத்தில் பிரமாண்ட தெப்பத்தில் குளத்தை வலம் வருவதும் வான வேடிக்கைகளும் பார்க்கவே கண்கொள்ளா கட்சியாக இருக்கும் .
பதினெட்டு நாள் திருவிழாவில் ஒவ்வரு நாளும் ஒவ்வொரு இன மக்கள் நடத்துவர் ..ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லையென்பது போல் இருக்கும் மண்டகப்படி ஏற்ப்பாடுகள் மற்றும் சுவாமி அலங்காரம் . அனைத்து பிரிவினரும் ஒத்துழைத்து ஒன்று சேர்ந்து கொண்டாடுவதால் பிரிவினைகள் அதிகம் வராமல் நல்லிணக்கம் வருவது இதன் சிறப்பு !
எத்திசை நோக்கிலும் கோவில்களாகவே தெரியும் அளவிற்கு அதிக அளவில் கோவில்கள் நிரந்த ஊர் . நவகிரக கோவில்களும் அருகாமையில் இருப்பது பெரும் சிறப்பு !
மாவட்டம் திருவாரூர் - ஆலயம் நிறைந்த ஊர் - மன்னையிலிருந்து 26 கீ மீ தொலைவில் இருக்கிறது தியாகராஜர் ஆலயமும் திருவாரூர் தேரும் உலக பிரசித்தி பெற்றவை
எங்கள் ஊருக்கென்று வட்டார வழக்கு மொழி கிடையாது ! தஞ்சைக்கு அருகாமையில் இருப்பதால் நல்ல தமிழ் மட்டுமே பேசுவோம். சுற்று வட்டார கிராமங்களில் ஒரு வகையாக சொற்க்களை நீட்டி முடக்கி பேசுவார்கள் அதுவும் அர்த்தம் மாறாது
இதுக்கு மேல இளன் வந்து சொல்லுவாரு ......
No comments:
Post a Comment