அவர்கள் அறிவதில்லை.......
கழுத்தில் ஜம்பமாய்....புதிதாய்... பதவியேறிய..
பத்துப் பவுன் தாலிக்கொடி.....!!!
நெஞ்சமெல்லாம்...... தான்....
இன்னாரின் மனைவி என்ற
யௌவன கர்வம்....கனக்க...
கிடைத்த பதவிக்குப் சான்றாய் ....
பலவிதத்தில்.....சொர்ணம்......
அவளை அணிந்திருக்க....
கூடிய எடையோடு.....
இடை பிடித்து.... அவரின் தோளில்..
முகம் புதைத்து....எதையோ பேசி....
எதற்கோ சிரித்து....மகிழ்ச்சியை...பகிரங்கமாக்கி .......
காற்றுக்கு ...கிண்கிணிகளை ,,,,வாரி இறைத்து....
கூத்தாடும் மனசோடு......பத்து மைல் தள்ளிப் போய்.....
பாடாவதி சினிமா பார்க்க...கருப்பில் நுழைவுச்சீட்டு வாங்கி......
உலக உருண்டையை எட்டி மிதித்து விளையாடும் ...
பாவனையில் அவர்கள்.....!!!
புது மணத்தம்பதிகளை......
திரைப்படத்திற்கு அனுப்பிவிட்டு...
அரற்றும் மனசுக்குள் ஆறுதலாய்.....
மீண்டும்......மீண்டும்......தலைக்கு மீதேறிப் போன
கடன் கணக்கை.....மாசத் தவணை கழுத்தை நெறிக்கும்..
கனாக் கண்டு......நெஞ்சம் கலங்கி....
அடகுக்குப் போன தன் வீட்டின் சுவரை வாஞ்சையோடு....
தடவித் தந்தவரின்......மனசின் தவிப்பை.......
'என் மகளை மணமகளாக்கி எனை மீட்டாய்...... நானும்...
உனை மீட்கும் காலம் என்று வருமோ...?".....
அவர்கள் அறிவதில்லை..........!!!!!
ஜெயஸ்ரீ ஷங்கர்....
No comments:
Post a Comment