Thursday, August 27, 2009

கொட்டாவி விட்டவருக்கு 6 மாத சிறைத்தண்டனை

கொட்டாவி விட்டமைக்காக நபரொருவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விசித்திர சம்பவம் அமெரிக்க சிக்காகோ மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

போதைவஸ்து குற்றச்சாட்டுக்கு ஆளாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தனது மைத்துனர் ஜேஸன் மேபீல்ட்டிற்கு என்ன தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை அறிவதற்காக, கிலிப்டன் வில்லியம் (33 வயது) சிக்காகோவில் வில் எனும் இடத்திலுள்ள மேற்படி நீதிமன்றத்தில் காத்திருந்தார்.

இந்நிலையில் வில்லியத்தின் மைத்துனருக்கு 2 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி டானியல் ரொஸாக், அச்சமயம் கொட்டாவி விட்ட வில்லியத்துக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வில்லியம் நடந்ததாக நீதிபதி குற்றஞ்சாட்டினார். இந்நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை வில்லியமின் மன்னிப்புக் கோரலை நீதிபதி ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவர் விடுதலை செய்யப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Posted by எம்.ரிஷான் ஷெரீப்

No comments: