சென்னைவாசிகளே உஷார்
2009 ஆகஸ்ட் 26
by vizhiyan
இது பெங்களூரில் மட்டும் தான் நடக்கின்றது என நினைத்த எனக்கு, பைக் திடுதிடுப்பென ஓர் நாள் நடுவழியில் நின்ற போது தான் தெரிந்தது.
சென்னையில் அனேக பெட்ரோல் பங்கிலும் இந்த கொள்ளை நடந்து கொண்டு தான் இருக்கின்றது. நீங்கள் பெட்ரோல் போட சென்றதும் 200 ரூபாய்க்கு போடுங்கள் என்றால், உடனே ஒருவர் கேஷா கார்டா சார் என கேட்பார். இப்படி திரும்பி, மீட்டரை பார்ப்பதற்கும் 100ரை தாண்டி இருக்கும். அதற்குள்ள இவ்வளவா என்பதற்கும் 200ரை தொட்டு காசுக்கு கை நீட்டிக்கொண்டிருப்பார் ஒருவர். காரில் இருந்து பெட்ரோல் போட சொன்னால் அவர்களுக்கு அல்வா தான். சென்னையில் நிறைய பெட்ரோல் பங்குகளில் இந்த குற்றம் நடக்கின்றது. உண்மையில் பெட்ரோல் போட ஆரம்பிப்பது 100ரில் இருந்து தான். ஆனால் வசூலிப்பது 200 ரூபாய். இப்படி ஒரு வடிக்கையாளரிடம் இருந்து 50ரூபாய் முதல் 200 - 300 வரை களவாடப்படுகின்றது. திட்டமிட்டு செயல்படுகின்றார்கள். பெங்களூரில் மடிவாளாவில் ஒவ்வொருமுறையும் பிரச்சனையுடன் தான் பெட்ரோல் போட்டு வந்தேன். சென்னை வந்ததும் சரியாகிடும் என்றால் இங்கேயும் அதே கொடுமை. இன்னும் சில பங்குகளில் நிர்வாகத்தின் துணையுடன் கலப்படம் நடக்கின்றதாம். மெக்கேனிக்குகளிடம் கேளுங்க எங்கே போடலாம் எங்கே வேண்டாம் என்பார்கள்
என்ன தான் உஷாராக இருந்தாலும் அதை முறியடிக்க அதை விட சிறப்பான திட்டங்கள் இருக்க தான் செய்கிறது. எப்படியும் திசை திருப்பி விடுகின்றனர். நமக்கு முன்னால் இருப்பவரை எவ்வளவு தான் நாமும் உஷார் செய்வது. கண்முன்னே திருட்டு நடக்கின்றது என்ன செய்ய?
(நன்றி: ஹிந்து)
அடுத்த முறை பெட்ரோல் பங்க் செல்லும் போது கவனிக்க வேண்டியவை
- தவறாமல் மீட்டர் 0.00யில் இருந்து ஆரம்பிக்கின்றதா என கவனிக்கவும். நிறைய கதைவிடுவார்கள் நம்பாதீர்கள்.
- எவ்வளவு லிட்டர் வேண்டும் என தெளிவாக சொல்லவும்
- சில சமயம் 100ரூபாய் என்றால் 200ரூபாய்க்கு போடுவார்கள். நிஜமாக அது 100ரில் இருந்து தான் ஆரம்பித்து இருக்கும்.
- தவறு நடக்கின்றது என தெரிந்தால் உடனே தட்டிக்கேளுங்கள். பலர் தட்டிகேட்காததால் குற்றம் அதிகரித்துக்கொண்டே போகின்றது.
- மேல்நிர்வாகத்திடன் தெரிவியுங்கள்.
- நண்பர்களிடத்தில் அந்த பெட்ரோல் பங்க் பற்றி தெரிவியுங்கள்
சட்டப்படி ஏதாவது செய்யலாமா? எப்படி இவர்களை சட்டத்தின் கீழ் கொண்டுவருவது?
- விழியன்
No comments:
Post a Comment