ஊசிப் பட்டாசு
உருவத்தில் சிறிசு
சத்தத்தில் பெரிசு
என்றுமே ஊசிப் பட்டாசு
விடிந்தால் பொழுது எழுப்புதல் கஷ்டம்
பால் கொடுத்தால் பாதி அதில் நஷ்டம்
உணவளிப்பதோ அதை விடக் கஷ்டம்
ஏனிந்தக் கோணங்கி என்றே கேட்டால்
கோணலானாலும் குறும்பானாலும் நான்
என்றுமே உன்னுடையதாக்கும்
என்றே சொல்லி ஓடுதையா தெருவினிலே
எங்கள் வீட்டு ஊசிப் பட்டாசு
by நடராஜன் கல்பட்டு
No comments:
Post a Comment