இறைவன் தந்த ஒளி விளக்கு
பரந்ததோர் ஏரி
சுற்றிலும் மரங்கள்
பகலிலே பசுமை
இரவிலே கருமை
பார்த்தான் இறைவன்
வேண்டுமம் மரங்களுக்கே என்றே எண்ணி
ஆயிர மாயிரம் விளக்குகள் படைத்தான்
மின் மினி யென்னும் பூச்சிகள் வடிவிலே
போத்தின மரங்கள் வைரங்கள் பதித்த
போர்வை தனையே மின்னின
அவை விட்டு விட்டு
வியந்த விஞ்ஞானிகள்
விரைந்தனர் காரணம் கண்டிட
கண்டனர் பதிலும் அவர்கள்
மின் மினி அடி வயிற்றில் விளக்கு
அது எரிவதோ ஒரு ரசாயனக் கலப்பு
மின் மினி மின்னுவது ஆணை அழைக்க என்றனர் பலர்
இல்லை அவை பளிச்சிடுவது இரைதனை ஈர்க்க என்றனர் சிலர்
இறைவன் சித்து இத்தனை எளிதோ
மின் மினி ஆயிர மாயிரம் இருந்தாலும்
எல்லாமே ஒரே கணம் மின்னுவதேன்
அடுத்த கணம் அணைவதேன்
விஞ்ஞானிகள் கண்டிலர் இன்று வரை பதில்
அங் ஞானிகள் தான் காண வேண்டும் விடை அதற்கே
No comments:
Post a Comment