Saturday, August 15, 2009

சொந்த வீடு.........

பல கோடி படிகள் மறைந்த....உச்சி வீடு அது....!!
ஏணி ஏதுமில்லா திறந்திருக்கும் மச்சு வீடு அது....!!!
யுகங்கள் பல கடந்தும்.......இன்னும் வாசல் திறக்குது.....!!
ஜென்மம் பல காத்திருந்தும்......கிடைப்பதில்லை...இந்த வீடு....
விதி கடந்து...வினை கடந்து......படி படியாய் பலன்கள்...!!
மனிதன் பிறவி கடக்கவென்றே...கால் கடுக்க தவங்கள்...
பொருள் களைந்து....துயர் களைந்து...பொருள் உணர்ந்து......
வருவோர்......கோடிக்குள் ஆயிரமாய்......படி ஏறி...நிற்பார்...
வீடுபேற்றுப் படிகள் இவை........ஊறு செய்யாது....
ஏணிபோல் ஏறி.........பாம்பு கடித்து வழுக்கி விழ.....
பரமபத படிகள் இல்லை இந்த படிகள்............!!
பந்தத்தை உதறி களைந்து......ஆதிமூலம் அடி பற்றினால்...
ஊழ்வினை அகன்று....அருள் கிட்டிட....
லாவகமாய்த் தாண்டிடலாம்.....கோடிப் படியதனை....!!!!
வாசல் தாண்டி சென்று விட்டால்.......அய்யா..
ஜென்ம வாசமும் ...நம்மைத் தாண்டி விடும்...
மீண்டுவிட்டால்.....
மீண்டும் கருவில் சிறையில்லை.....
பிறப்பு எனும் விலங்கில்லை...
ஆசை என்ற உலகில்லை....
"ஞானம்"......தேடத் தேவையில்லை....
"ஈசனின்"......அடியில்.....வாடா மலராய்......!!!
சொந்த வீட்டில் இருக்கலாமே.....!!!

ஜெயஸ்ரீ ஷங்கர்......

No comments: