சபாஷ் இந்தியா
சென்னை : இந்திய ராணுவத்திற்காக, சென்னை, ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் தயாரிக்கப் பட்டு, பீஷ்மா என்று பெயரிடப்பட்ட "டி-90' அதி நவீன பீரங்கிகள், நேற்று முறைப்படி, நாட்டின் பாதுகாப்பு பணிக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை வளாகத்தில் அதற்கான விழா, நேற்று நடந்தது. "பீஷ்மா டி-90' என்ற 10 அதிநவீன ரக பீரங்கிகளின் முதல் தொகுப்பை, மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பல்லம் எம்.எம்.ராஜு கொடி அசைத்து துவக்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பல்லம் எம்.எம்.ராஜு பேசியதாவது; நாட்டின் பாதுகாப்பு துறையில், உள்நாட்டு தொழில் நுட்ப வடிவமைப்புடன் கூடிய தளவாடங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கப்படுகின்றன. அவை இந்திய ராணுவம், கப்பல் படை மற்றும் விமானப்படைகளில் பயன்படுத்தப்படுகின்றன.ரஷ்யா நாடு நீண்ட காலமாக நமக்கு அளித்து வரும் ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு கருவிகள், தளவாடங்கள் மற்றும் தொழில் நுட்ப அமைப்புகளை, தளவாட தொழிற்சாலைகள் வாரியம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் உற்பத்தி செய்து வருகிறது. இதில், உள்நாட்டு தொழில் நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப் படுவதால், வெளிநாடுகளில் இருந்து தளவாடங்கள் இறக்குமதி செய்யப்படுவது, 5 சதவீதம் குறைந்துள்ளது. தளவாட உற்பத்தி துறையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். உள்நாட்டு தொழில் நுட்பங்களை அதிக அளவில் உருவாக்க வேண் டும். இந்த பீஷ்மா டி-90 பீரங்கி, 21ம் நூற்றாண்டுக்கு ஏற்ற அதி நவீன போர் கவச வாகனமாக திகழும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.
"பீஷ்மா டி-90 பீரங்கிகளை ஒப்படைப்பது தொடர்பான ஆவணங்களை லெப். ஜெனரல் விஜய் சர்மாவிடம், கவச வாகன கூடுதல் இயக்குனர் சந்திரசேகர் அளித்தார். பாதுகாப்பு உற்பத்தி துறை செயலர் ஆர்.கே சிங், தளவாட தொழிற்சாலைகள் வாரியத்தின் தலைவர் சரோஜ் வினாயக், பாதுகாப்பு அமைச்சகத்தின் இணை செயலர் சோமசுந்தரம், தரக் கட்டுப்பாட்டு தலைமை இயக்குனர் தில்லான், இயந்திரப் படைகள் தலைமை இயக்குனர் பரத்வாஜ் ஆகியோர் பேசினர். இவ்விழாவில் ரஷ்யநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
http://ping.fm/XYER3
டி.72 பீரங்கிகள் பார்திருக்கேன்.. டி.90 பீரங்கியை பார்த்ததில்லை.
ஒவ்வொரு சுதந்திர தினத்துக்கும் பீரங்கியில் விளையாடுவது தான் வேலை.
~காமேஷ்~
No comments:
Post a Comment