Saturday, August 15, 2009

62 கால சுதந்திர இந்தியாவில் தலித்துகளின் நிலை
காலை எழுந்தவுடன் தொலைக்காட்சி சேனல்களில் என்னென்ன நிகழ்ச்சிகள் போகின்றன என்று பார்த்தேன். சினிமா மற்றும் அத்துறையைச் சார்ந்தவர்களை வைத்து எல்லோரும் வியாபாரம் செய்து கொண்டிருக்க, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதல் குரல் நிகழ்ச்சி என்னை வழக்கம் போல் ஈர்த்தது. 62 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் நிலை எப்படி இருக்கிறது என்ற ஒரு விவாதம்.

இன்றைக்கும் நாம் தலித்துகளை எவ்விதம் நடத்துகிறோம். அவர்களில் நிலை என்ன என்பது பற்றி விவாதித்தனர்.

படித்து முடித்து எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர் தாழ்த்தப்பட்டவராக இருப்பின் அவர் மற்றவர்களால் மதிக்கப்படாமலேயே இருக்கிறார். மற்ற சாதிக்காரர் தவறு செய்தால் இதெல்லாம் சகஜம் என்று சொல்லும் மக்கள், ஒரு தலித் தவறு செய்தால் அவன் சாதி புத்திய காட்டிட்டான் என்று சொல்கிறது இந்தச் சமூகம். இரட்டைகுவளை முறை, உயர்த்தப்பட்ட மக்களின் தெரு வழியே செல்ல முடியாது, அப்படிச் சென்றால் செருப்பு அணியக்கூடாது, மிதிவண்டியில் சென்றாலும் இறங்கி செருப்பைக் கழட்டி கையில் வைத்துக் கொண்டு மிதிவண்டியையும் தள்ளிக் கொண்டு செல்ல வேண்டும், அடக்கம் செய்யப்பட அல்லது எரியூட்ட பொதுவான இடம் இல்லாமல் இருப்பது, மதம் மாறி கிறிஸ்தவாரக ஆனாலும் சாதிக் கொடுமை தொடர்வது போன்றவை பற்றி பேசினர்....

நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ளவேண்டும். நாம் எப்படி இருக்கிறோம்??? நாம் எப்படி தலித்துகளிடம் நடந்து கொள்கிறோம். என்ன தான் நான் அப்படி சாதி வித்தியாசம் எல்லாம் பார்ப்பது இல்லை என்று வசனம் பேசினாலும், நம் பிள்ளைகளுக்கு வரன் தேடும் போது நம் சாதி, உட்பிரிவு இவற்றிற்குள்ளே தானே பார்க்கிறோம்.... கொஞ்சம் யோசிக்கலாமே





--
நட்புடன்

மழைக்காதலன் - சார்லஸ்
http://ping.fm/SoRGe
http://ping.fm/5TxYJ

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி. சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

No comments: