தத்தளிப்பு
வாருங்கள் வாருங்கள் என்றே
வாய் விட்டு அழைத்திட்டார்
சேருங்கள் சேருங்கள் தமிழ்த் தென்றலோடு
ஆடுங்கள் ஆடுங்கள் விளையாடுங்கள் என்றார் அவர்
ஆட்டத்தில் என்னையும் சேர்த்திட
ஆள் உண்டோ இவ்வுலகில்
என்று களித்தே குதித்திட்டேன்
குதித்தபின் கண்டேன் நீரை விட்டு வெளியே
குதித்த மீன் நானென்று
முழு நிலவோ
நிலவிலா வானின் விண் மீனோ
மண்ணோ மரமோ
ஆன்மீகமோ வான் மேகமோ
காதலோ சாதலோ
கொட்டுகின்றார் மழையெனவே
கட்டுரையும் கவிதைகளும்
தமிழ்த் தென்றலிலே
ஆன்றோரும் சான்றோரும்
காவியமோ காப்பியமோ
புராணமோ இதிகாசமோ
இன்று வரை படித்தி்லை நான்
கரை இருந்து நீரடையத் தத்தளிக்கும் இம் மீனுக்கு
இறைவா நீர் காட்டும் வழியதனை
நடராஜன் கல்பட்டு
No comments:
Post a Comment