Thursday, August 6, 2009

"சூனியக்காரர்' வேலைக்கு நேர்முகத் தேர்வு


தென் மேற்கு இங்கிலாந்திலுள்ள வரலாற்று முக்கியத்துவம் மிக்க குகைகளில் கொடூர சூனியக்காரராக பணியாற்ற ஆண்கள்,பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

விண்ணப்பதாரி சூனியக்காரர் போன்று வேடமிட்டு அச்சம் ஊட்டும் வகையில் அலறக் கூடியவராக இருப்பதுடன் பூனைகளுடன் பழகுவதில் ஒவ்வாமைக்கு உள்ளாகாதவராகவும் இருக்க வேண்டும் எனவும் ஒரு வருட சம்பளமாக 50,000 ஸ்ரேலிங் பவுண் வழங்கப்படும் எனவும் விளம்பரம் செய்யப்பட்டது.

மேற்படி குகைகளில் சூனியக்காரியாக வலம் வந்த ஜேன் பிரேன்னர் ஓய்வு பெறுவதையொட்டியே இந்த நேர்கத் தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வேலைக்கு 3000க்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 400 பேர் தெவு செய்யப்பட்டு நேர்கத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

அவர்களுக்கான நேர்முகத் தேர்வு சமர்ஸெட்டிலுள்ள வூகி ஹோல் குகைகளில் திகிலூட்டும் சூழ்நிலையில் நடைபெற்றது.

இறுதியில் ஷெப்டன் மாலட் எனும் இடத்தைச் சேர்ந்த கரோல் போஹனன் (40 வயது), இந்த சூனியக்காரர் வேலைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் விடுமுரிறை காலங்களில் சூனியக்காரியாக வலம் வந்து உல்லாசப் பயணிகளை திகிலூட்டவுள்ளார்.

Posted by எம்.ரிஷான் ஷெரீப்

No comments: