வைகறையை தவிர்க்காதே.
யாரடிச்சு........ நீயழற.......? அடிச்சவரைச் சொல்லியழு.....!!!
தாலாட்டில் தூளியாட்டிய காலமெல்லாம் கனவென்றாச்சு.....
அலாரம்......ஆறடித்தும்........போர்வையோடு.... போரடிக்கும்....
உனை... அர்ச்சனை செய்து துயிலெழுப்பும்......
கொடுமை....இங்கே....... கூத்தாடுது.....!!!!
அன்பின் கதிரவன் தன் கரம் தொட்டு தடவும் உன்
கண் ஜன்னல்....இந்நேரம்.....திறந்திட வேண்டாமோ??
இருளைப் போக்கடித்து அறை முழுதும் வியாபிக்கும்...
இளங்கதிரின் ஒளிக்கரங்கள்....நின் மனத் தாமரையை
தீண்டும் உணர்வு உனக்கில்லையோ?...
கிழக்கைத் தேடி பறக்கும் பறவைகளின்....
கீச்சொலியும்....நின் செவிக்குள்....புகவில்லையோ..?
போர்வைக்குள்....சுருட்டிய பாயாய்...... நீ உறங்க..
நம் வீட்டின் விடியலின் சுப்ரபாத அர்ச்சனைகள்....
பறவைகளுக்கென்ன...? பல் தேய்க்கணுமா..?
பள்ளிக்கூடம் தான் ஓடணுமா?......
பட்டம் வாங்கி பணம் சம்பாதிக்கணமா..?
இருந்தும்......நித்தமும் ஒருபோலே...அவை
கூட்டமாய்... பறந்து...தனை ஒவ்வொரு நாளும்...
புதுப்பித்து தன் இரை தேடும் பட்சி........!!
முதலெழுந்து... பறக்கும் பட்சிக்கே.....
மொத்தமாய்......கூட்டுப் புழு.....விருந்து...!!!
இதை அறிந்து....மகனே நீ.....
பறவைகளின் இயல்பில் வாழ்ந்தால்.....
வெற்றி வானில்..வாகை சிறகு விரித்து., பறக்கலாம்..
வைகறையை தவிர்க்காதே.....
வெறறு மனிதனாய்.......வீழ்ந்திடாதே......!!!
ஜெயஸ்ரீ ஷங்கர்
No comments:
Post a Comment