அடக்கம்
மாரிக்காலம் வந்திடவே
ஏரி குளம் எங்கும் தண்ணீர்
கல்மேல் அமர்ந்தே கத்தியதோர் தவளை
“நானே ராஜா எனதே நாடு” என்றே முழங்க
உழவருக்கோர் ஆணை யிதோ
“ஏர் கட் மாட் ஓட்... ஏர் கட் மாட் ஓட்”
என்ற தாண் தவளை தன் அரியணை மீதமர்ந்து
பன்னிரு தவளைக்கு தானே கணவன்
ஆயிரம் தவளைக்கு தானே தந்தை யென்னுமிறு மாப்புடனே
வானில் பறந்த பருந்தொன்று
வீணில் கத்திய தவளைதனை
கவ்விச் சென்றது கதறக் கதற
தண்ணீருள்ளோ எண்ணற்ற தவளைகள்
கஷ்டம் ஏதும் துளியு மின்றி
கண்ட மனம் கேட்ட கேள்வி
இதைத்தான் சொன்னானோ வள்ளுவன் அன்று
“அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்” என்று?
நடராஜன் கல்பட்டு
No comments:
Post a Comment