என் இதயத்தை எடுத்துக்கொண்டு
கிறங்க வைக்கும் உன் முத்தத்தால்
உன்னைக் காதலிக்கும் என்
ஆன்மாவை ஆசீர்வாதம் செய்!
இந்தக் காதல் காய்ச்சல்
புதிதல்ல அன்பே
ஆதாம் ஏவாளை
அணைத்த பொழுது
பற்றியெரிந்த அதே தீ தான்
கொதிக்கும் அதே காய்ச்சல் தான்
இப்போது எனக்கும்
நீ இறுக என்னை
அணைக்கும்போது
உன் இதழ்களை ஒற்றி
முத்தமிடும்போது
தோன்றும் இந்த காய்ச்சலை
அனுபவிக்க வேண்டுமடி!
போதை தரும் இந்த காய்ச்சலோடு
வாழ வேண்டுமடி பெண்ணே!
காதல் காய்ச்சலில், தகிக்கும் உடம்பு சூட்டில்,
உன் நினைவுகளில் புலம்ப,
இப்படி ஒரு இனிமையான வழியா???
No comments:
Post a Comment