ஆடி வந்துடுத்தா அதுக்குள்ள?
ஜூலை 15:
தினசரியைத் திறக்கிறேன் செய்திகள் படிக்க. எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் அதில் ஒரு ஆடித் தள்ளுபடி விளம்பரம்.
“ஐயையோ அதுக்குள்ள பொறந்துடுத்தா ஆடி?”
“ஆடி பொறந்தா என்ன? அதுக்கு ஏன் இப்படி ஆடிப்போறேள்னு கேக்கறேளா?” காரணம் இருக்கே.
“என்ன காரணம் இருக்கு சொல்லுங்கோ கேக்கறோம், ஏதோ ஒண்ணு சுவாரஸ்யமா இருந்தா சரி.”
ஆடி பொறக்கறதுன்னா எனக்கு எப்பொவும் ஒரு கிலி. ஏன்னா என்னிக்கும் பேருக்கேத்தாப்ளெ சாந்தமா இருக்கெற என் மனைவி ஆடி பொறந்தா ஆட ஆரம்பிச்சூடுவா.
“என்ன பொடவையோ நகையோ புதுசா வேணும்னு கேக்க ஆரம்பிச்சுடுவாளோ?”
“ஐயோ அதெல்லாம் ஒண்ணும் இல்லெ. அப்படி இருந்தா பேசாமெ ஒரு பொடவையோ நகையோ வாங்கிக் கொடுத்தா போருமே.”
“பின்னெ ஏன் நீங்க ஆடி பொறந்தா ஆடிப் போகணும்?”
“அது தெரிஞ்சுக்கணும்னா என் ஸ்னேகிதன் உமாபதி மாதிரி அசரீரியா வந்து என் வீட்டுலெ நடக்கறதெப் பாக்கணும் நீங்க.”
“அதுக்கென்ன. வந்து பாத்துட்டாப் போச்சு.”
“ஏன்னா பஞ்சாங்கத்தெப் பாத்து சொல்லுங்கோ ஆடி எப்பொ பொறக்கறதுன்னு.”
“ஏண்டி அதான் சமையல் உள்ள டெய்லி கேலண்டர் மாட்டி இருக்கேனே ஒனக்கு சௌகரியமா இருக்கும்னு. அதுலெ பாத்துக்கோயேன்.”
“அதுலெ பாக்கறது கஷ்டமா இருக்குன்னா. கட்டையாட்டம் இருக்கு அது. பக்கத்தெப் பொறட்டிப் பாக்கறதுக்குள்ள அதுலெ இருக்குற மூணு ஆணிலெ எதாவது ஒண்ணு கைலெ குத்திடறது. நீங்க பஞ்சாங்கத்தெப் பாத்து சொல்லுங்கோ.”
“சரி கொண்டா பஞ்சாங்கத்தெ. பாத்து சொல்றேன்.”
பஞ்சாங்கம் வருகிறது.
“ஜூலை பதினேழாம் தேதி ஆடி பொறக்கறது.”
“வரலக்ஷ்மி நோம்பு எப்பொ வறது?”
“ஜூலை முப்பத்தொண்ணு வரது.”
முடிஞ்சுது கதைன்னு நெனெச்சுக்காதீங்கோ.
ஜுலை 21:
“ஏன்னா இப்படி அறுபது நாழியும் கம்ப்யூடரெக் கட்டிண்டு ஒக்காந்திருந்தா எப்படி? நோம்பு வரது. பூஜெ உள்ளேந்து பூஜெ மண்டபத்தெ வெளிலெ எடுத்து அதுலெ இருக்கற சின்னச் சின்ன விக்ரகங்களெ எல்லாம் எடுத்து வெளிலெ வெச்சூட்டு மண்டபத்தெ நன்னா தொடச்சு வெச்சூடுங்கோ. இப்பொவே பண்ணலேன்னா அப்புறம் கடைசீ நிமிஷத்துலெ தூசி படிஞ்ச மண்டபத்தெ வெச்சுப் பூஜெ பண்ணும்படியா வந்தூடும்.”
“பண்றேன்.”
“எப்போ பண்றேள்? நாளைக்கா? இப்படித்தானே ஒண்ணொண்ணயும் தள்ளிப் போடுவேள் நீங்க. இப்பொ நீங்களா கம்ப்யூடரெ ம
No comments:
Post a Comment