Monday, August 3, 2009

கு(ரு)றும்பா :

1) ஆடிப் பெருக்கு : (03-08-09)


ஆற்றுப் படுகை.
குழிவெட்டி குளிக்கும் மக்கள் :
இன்று ஆடிப் பெருக்கு







2) இடம் மாறிய வெள்ளம்:

வரண்டஆற்றின் நடுவே விவசாயி.
பெருக்கெடுக்கும் வெள்ளம்:
கண்களில்








3) ஆடியில் .... :

வராத நதியில் வருடம்
முழுவதும் தண்ணீர்:
கானல்







குமுறல் பா :

ஆடிப் பட்டம் தேடி விதைச்சாச்சு ....?! :

அணை திறந்தவுடன் ஆர்வமாய்
ஆர்ப்பரித்து ஓடிவந்த தண்ணீர்
மணலுக்குத் தோண்டிய பள்ளத்தில்
வழுக்கி விழுந்தது மறுபடியும்
மேலே வரவே இல்லை - இதுவரைத்
தன்தரையைத் தொடவே இல்லை

கடைமடையில்
கனவுகளோடு காத்திருக்கிறது
இலவுகாக்கும் (இழவுக்காகவும்)
கிளிக்கூட்டம் இரண்டு

விவசாயியின் வயிறும்...
விளைநிலத்தில் பயிறும்....

--

என்றும் அன்புடன்
-- துரை
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://ping.fm/6aB6g
ஹைகூ : 'வானம் வசப்படும்' : http://ping.fm/YE25A
பதிவுகள் : 'வல்லமை தாராயோ' : http://ping.fm/VjD1F
கதைகள் : 'நானோ கனவுகள்' :http://ping.fm/ZzmEq
குழுமம் : 'தமிழ்த் தென்றல்' :http://ping.fm/E3JtQ



--

என்றும் அன்புடன்
-- துரை

No comments: