Sunday, August 2, 2009

இருதய நலங்கள் ஆறு-The Six Heart Virtues-The Lyricus Teaching
http://ping.fm/eH5do

1. APPRECIATION
சமரச நாதம் கேட்டு
எங்கும் இறைந்திருக்கும்
ஆதி மூலம் போற்று!
2. UNDERSTANDING
எதிலும் ஒளிரும்
இறைத்துகள் கண்டு
ஞானங் கொள்!
3. COMPASSION
எப்போதும் பாயும்
உயிர்ப்பை நுகர்ந்து
தயவாய் இரு!
4. FORGIVENESS
பொழியும் பெருமன்னிப்பாம்
அருமருந்தைச் சுவைத்து
இருவினை நோய் தீர்ந்துப்
பெருவாழ்வில் நில்!
5. HUMILITY
உயிர்களின் துயர் துடைக்க
உதவும் எளியனாய்
மன இதத்தில் எழு!
6. VALOR
வீர திடமாய்
ஈர பூமி மேல் ஓங்கி
அபயம் அளிக்க
உயிர்களைத் தொடு!

நடுநிலை ஏழாம்
நின் இருதய வாய் திறக்கப்
பாயும் ஆறு இவை
அன்பின் ஆறு முகம்!
("வேணுவைப் பிளந்து" என்ற இழையில் இன்னும் விவரித்திருக்கிறேன்,
நிபந்தனைகள் ஏதுமற்ற பேரன்பு, இகத்தில் இந்த ஆறு இருதய நலங்களாக
வெளிப்படுகிறது, அச்செடுத்து சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,
தினமும் பல முறை இந்த ஆறு இருதய நலங்களை ஞாபகங் கொள்ளுதல், மிக எளீய சஹஜ
தியானம், மேலே ஆங்கில வளை தளத்தில், இதைப் பற்றிப் பல அற்புதமான
மின்னூல்கள் இலவசமாகக் கிடைக்கும், படித்துப் பயன் பெறுங்கள்!)

No comments: