அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
கேரளாவில் மதம் மாறிய இளம் பெண்ணை கடத்திய ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கைது!
Thiruvananthapuram சனிக்கிழமை, ஏப்ரல் 14, 11:22 AM IST
திரைப்படம்
திருவனந்தபுரம், ஏப். 14-
கேரள மாநிலம் காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்கேயன். இவருடைய மகள் நிம்மி (வயது 25). பி.எஸ்.சி. பட்டதாரி. இளம் பெண்ணான நிம்மி கடந்த சில மாதங்களுக்கு முன்பு முஸ்லிம் மதத்துக்கு மாறினார். அதன்பின்பு அவர் வீட்டில் இருந்து மாயமானார். காணாமல் போன நிம்மியை பெற்றோர், உறவினர்கள் தேடி வந்தனர். ஆனால் பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.
இந்த நிலையில் கொச்சி ஐகோர்ட்டில் ஹேர்பியஸ் மனு தாக்கல் செய்தனர். அம்மனுவை விசாரித்த நீதிபதிகள் நிம்மியை கண்டு பிடித்து போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். இதனையடுத்து எர்ணாகுளம் சுட்டிகாவு என்ற இடத்தில் வைத்து நிம்மியை கண்டு பிடித்த போலீசார் அவரை நேற்று ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில் தன்னை யாரும் கடத்தவில்லை என்று நிம்மி வாக்குமூலம் அளித்தார். அதன்பின்பு கோர்ட்டை விட்டு வெளியேறினார்.
அப்போது வெளியே வந்த நிம்மியை காரில் வந்த ஒரு கும்பல் கடத்த முயன்றது. இதை பார்த்த போலீசார் அவர்களை துரத்தினர். இதில் வடக்காஞ்சேரியை சேர்ந்த சரத் (25) என்பவர் மட்டும் போலீஸ் பிடியில் சிக்கினார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் என்பது தெரிய வந்தது.
மேலும் மதம் மாறிய நிம்மியை தண்டிக்கவே கடத்த முயன்றதாக கூறினார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்ற 3 பேரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
=================================================================================
"எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்.
No comments:
Post a Comment