Sunday, April 15, 2012

மின் கட்டண உயர்வு: அதிர்ச்சியூட்டும் உண்மைகள், சதிகள், கொள்ளைகள்!

in அ.தி.மு.க, இந்திய தரகு முதலாளிகள், காங்கிரஸ், தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம், புதிய ஜனநாயகம் by வினவு, April 6, 2012 -

ஐந்துக்கும் பத்துக்கும் செல்போன் டாப்அப், 20, 30 ரூபாய்க்கு பெட்ரோல் போட எப்படி பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோமோ, அதேபோல மின்சாரச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கும் பழக்கப்படுத்தப்பட இருக்கிறோம்.
11
Share169



பதிவு
மறுமொழிகள்
மின் வாரியம் கூறும் கட்டணத்தைத் தரத் தயாராக இருப்பவர்களுக்கும் மின்சாரம் கிடைப்பதில்லை என்பதுதான் மின்வெட்டு என்று கூறப்படுகிறது. கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் இந்த மின்வெட்டை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக அரசு சொல்கிறது. மின் கட்டணத்தை உயர்த்துவதன் மூலமும் இந்தப் பற்றாக்குறையை ‘முடிவுக்கு’ கொண்டு வரலாம்.
பாட்டில் தண்ணீரும் கேன் தண்ணீரும் தண்ணீர் பஞ்சத்தை இப்படித்தான் ‘ஒழித்திருக்கின்றன’. குடிதண்ணீர் வாங்க காசில்லை என்ற பிரச்சினையை தண்ணீர் பற்றாக்குறை என்று யாரும் சொல்வதில்லை. அது பணப்பற்றாக்குறையாகிவிடுகிறது.
ஐந்துக்கும் பத்துக்கும் செல்போன் டாப்அப் செய்வதைப் போல, 20, 30 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக் கொள்வதற்கும் எப்படி இன்று பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோமோ, அதேபோல மின்சாரச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கும் பழக்கப்படுத்தப்பட இருக்கிறோம். மின்சாரம் என்பது கத்தரிக்காயைப் போல அன்றாடம் சந்தையில் விலை மாறும் சரக்காகி வருகிறது. இந்த மாற்றம் வெகு வேகமாக நம்மீதும் திணிக்கப்படுகிறது.
டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ‘ஸ்மார்ட் மீட்டர்’ என்ற மின்சார மீட்டரை அறிமுகப்படுத்தவிருக்கிறதாம். காலை, மதியம், மாலை, இரவு என ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில், ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை என்ன என்பதை இந்த மீட்டரைப் பார்த்து வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள முடியுமாம். அதாவது, வரவிருக்கும் காலத்தில் மின் கட்டணம் என்பது ஒரு மாதத்திற்கோ, ஒரு நாளுக்கோ கூட நிரந்தரமாக இருக்காது. மின்சாரச் சந்தையின் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஏறி இறங்கிக் கொண்டிருக்கும். மின்சாரத்தின் விலை அதிகமாக இருக்கும் நேரத்தில் மின்சாரப் பயன்பாட்டை தவிர்த்துக் கொண்டு, விலை குறைவாக இருக்கும் நேரத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மின் கட்டண செலவைக் கட்டுப்படுத்த முடியும். இது மின்சாரத்துறையில் செய்யப்படும் இரண்டாம் தலைமுறை சீர்திருத்தமாகும் என்று கூறியிருக்கிறார் டில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பி.டி.சுதாகர். (பி.டி.ஐ; 26.2.12)
மைய அரசு அமைத்திருக்கும் ‘இந்தியா ஸ்மார்ட் கிரிட் டாஸ்க் ஃபோர்ஸ்’ என்ற அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா, மின்சார மீட்டரை ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்துடன் இணைப்பதன் மூலம் உருவாக்கப்படும் இந்த ஸ்மார்ட் மீட்டர் கருவிகள் இந்தியா முழுவதற்கும் பத்து கோடி தேவையென்றும், அவற்றை மலிவு விலையில் உருவாக்கும் முயற்சி நடைபெறுவதாகவும் கூறியிருக்கிறார். இந்தியாவிலேயே முதன் முறையாக புதுச்சேரி நகரிலுள்ள 87,000 வீடுகளில் அடுத்த நான்கு மாதங்களில் இந்த மீட்டர்கள் நிறுவப்படும் என்று இந்த டாஸ்க் ஃபோர்ஸ் அமைப்பு அறிவித்திருக்கிறது. (ஐ.பி.என். லைவ், மார்ச் 3, 2012)
மின் விநியோகத்தின் மீதான மையப்படுத்தப்பட்ட நிர்வாகம், மின் திருட்டைத் தடுக்கும் முயற்சி, மின் செலவை மிச்சப்படுத்த மக்களுக்கு தரப்படும் வாய்ப்பு என்ற வார்த்தை ஜாலங்களால் இந்த திட்டத்தை நியாயப்படுத்துகிறது அரசு. உண்மை அதுவல்ல. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்வது என்ற முறையையே ஒழித்துவிட்டு, சந்தையில் மின்சாரத்தின் விலை என்னவோ அதைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்பதற்கு மக்களைப் பழக்குவதே இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் நோக்கம்.
28.3.2012 அன்று சட்டசபையில் மின்கட்டண உயர்வு தொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மாநில மின்வாரியம் கோராவிட்டாலும்கூட, கட்டணத்தை உயர்த்துகின்ற அதிகாரம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உண்டு என்று ஒரு விளக்கமளித்தார்.
தன்னுடைய அரசு அறிவித்திருக்கும் கட்டண உயர்வுக்கு, தான் பொறுப்பேற்றுக் கொள்ளாமல், வேறு யாரோ வைத்த செய்வினை போல ஜெயலலிதா சித்தரிக்கிறார் என்ற போதிலும், அப்படிப்பட்ட அதிகாரம் ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருப்பது உண்மையே.
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை தனியார்மயமாக்கும் நோக்கத்திற்காகவே உலக வங்கியின் ஆணைக்கேற்ப உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. கட்டண நிர்ணய அதிகாரம், உரிமம் வழங்கும் அதிகாரம் ஆகியவை மாநில அரசிடமிருந்து பிடுங்கி சுய அதிகாரம் பெற்ற அமைப்பான இதனிடம் வழங்கப்பட்டுவிட்டன. இதற்கான சட்டம் 1998இலேயே இயற்றப்பட்டுவிட்டது.
மின்சாரத்தைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தச் சட்டம் போதுமானதாக இல்லை என்பதால் 2003இல் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் மத்திய மின்சாரச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம், மின் உற்பத்தி கம்பிகள் மூலம் கொண்டு செல்லுதல் நுகர்வோருக்கு விநியோகித்தல் ஆகிய 3 பணிகளையும் மின்வாரியமே செய்வது திறமையின்மைக்கும் ஏகபோகத்துக்கும் வழிவகுப்பதால், வாரியங்களை மூன்றாக உடைக்கக் கூறியது. மின்சாரம் வணிக ரீதியில் விற்கப்படவேண்டும் என்றும், மின்சாரம் உற்பத்தி செய்ய அரசாங்க உரிமம் தேவையில்லை என்றும், தனியார் முதலாளிகள் மின்னுற்பத்தி செய்வதுடன் மின்சாரச் சந்தையில் ஊக வணிக சூதாட்டமும் நடத்தலாம் என்றும் அனுமதித்தது. மின்வாரியங்கள் சொந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு, தனியாரிடம் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யுமாறும், விநியோகத்தையும் அவர்களிடம் ஒப்படைக்குமாறும் வலியுறுத்தியது. தனியாரிடமிருந்து அரசு கொள்முதல் செய்கின்ற மின்சாரத்திற்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரமும் ஆணையத்திடமே தரப்பட்டது. கட்டண உயர்வுக்கு எதிராக யாரும் நீதிமன்றத்தை நாடவியலாதென்றும், இதற்கென உருவாக்கப்படும் ‘மின்சாரத்துக்கான மேல்முறையீட்டு ஆணையம்’தான் தீர்ப்பளிக்க முடியும் என்றும் இச்சட்டம் கூறியது.
மின் உற்பத்தியிலிருந்து மாநில மின்வாரியங்கள் திட்டமிட்டே அகற்றப்பட்டன. மின்சாரத் துறைக்கான நிதி, மாநில அரசுகளின் திட்ட ஒதுக்கீட்டில் 31.55 விழுக்காட்டிலிருந்து (199091) பத்தே ஆண்டுகளில் 15.25 விழுக்காடாக (200102) வீழ்ச்சி அடைந்தது. இலாபமீட்டி வந்த மின் வாரியங்கள் நட்டத்தில் விழத் தொடங்கின.
மின் வாரியங்கள் நட்டத்தில் விழுவதற்கான காரணமே, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்தான் என்ற கருத்தை அரசும், ஊடகங்களும் திட்டமிட்டே உருவாக்கியிருக்கின்றன. 1994-95இல் தமிழக மின்வாரியம் ஈட்டிய உபரி ரூ. 347 கோடி. 2007-08 ஆம் ஆண்டில் இது 3512 கோடி ரூபாய் பற்றாக்குறையாக மாறியது. 1994 இலும் சரி, 2008 இலும் சரி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுத்தான் வருகிறது. நட்டத்திற்கு காரணம் அதுவல்ல.
1994 இல் தனது மின்சாரத் தேவையில் 0.4 சதவீதத்தை மட்டுமே தனியாரிடமிருந்து கொள்முதல் செய்து வந்த தமிழக மின்வாரியம், 2008 இல் சுமார் 35% மின்சாரத்தைத் தனியாரிடம் வாங்கியது. இன்று தமிழக மின்வாரியத்தின் கடன் சுமார் ரூ.56,000 கோடி. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.
“போட்டி இருந்தால் விலை குறையும். சேவைத்தரம் உயரும்” என்பதுதான், அரசுத்துறைகளை ஒழிப்பதற்கும், தனியார் துறையை ஊக்குவிப்பதற்கும் சொல்லப்படுகின்ற காரணம். மின்சாரத்துறையில் தனியார் அனுமதிக்கப்பட்ட பிறகு கட்டணம் குறையவில்லை. மாறாக, ஏறிக்கொண்டிருக்கிறது. மின் வாரியத்தை நட்டத்திலிருந்து காப்பாற்றத்தான் இந்த கட்டண உயர்வு என்று அரசு கூறினாலும் உண்மை அதுவல்ல.
தனியார் மின் உற்பத்தியாளர்களுடன் மின்வாரியங்கள் போட்டிருக்கும் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களின்படி, அந்த முதலாளிகளுக்குத் தரவேண்டிய தொகையைத் தருவதற்கு கட்டண உயர்வு அவசியம் என்று மத்திய மின்சார அமைச்சகத்தின் 21.1.2011 தேதியிட்ட கடிதம் தெளிவாகக் கூறுகிறது. (ஆதாரம் : ‘மின்சாரக் கட்டணம் தனியார்துறையின் வேட்டைக்காடு’, சா.காந்தி, ஒய்வு பெற்ற பொறியாளர்)
மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் (Power Purchase Agreement) என்பதென்ன? தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கு மாநில மின்வாரியங்கள் போட்டுக் கொள்ளும் ஒப்பந்தங்கள் இவை. இவற்றின்படி, ஒரு யூனிட் மின்சாரம் என்ன விலை என்பதும் எத்தனை மாதங்களுக்கு அந்த விலையில் மின்சாரத்தை தரவேண்டும்/பெற வேண்டும் என்பதும் தீர்மானிக்கப்பட்டுவிடும். மின்சாரத்தின் விலையை இருதரப்பினரும் பேசித் தீர்மானிப்பர்.
இந்த வகை ஒப்பந்தங்களில் மிகவும் இழிபுகழ் பெற்றது என்ரான் ஒப்பந்தம். 90களில் தபோல் மின்நிலையத்திலிருந்து ஒரு யூனிட் 8 ரூபாய் விலையில் மின்சாரத்தை வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் போட்டு விட்டு, அந்த விலைக்கு மின்சாரம் வாங்க முடியாமல், மின்சார உற்பத்தியை நிறுத்தி வைப்பதற்காக மாதந்தோறும் நிலைக்கட்டணம் செலுத்தியே திவாலானது மகாராட்டிர அரசு.
தமிழகத்தில் அப்போலோ (மருத்துவமனை) குழுமத்துக்குச் சொந்தமான பிள்ளைப்பெருமாநல்லூர் மின்நிலையத்திலிருந்து 2005-06 இல் தமிழக அரசு வாங்கிய மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ.17.78. சாமல்பட்டி பவர் என்ற நிறுவனத்திடமிருந்து யூனிட் ரூ. 8.74; மதுரை பவர் ரூ. 8.63. சென்னை பேசின் பிரிட்ஜில் மின் வாரியத்துக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்திருக்கும் ஜி.எம்.ஆர். என்ற தனியார் அனல் மின் நிலையத்திலிருந்து வாங்கப்பட்ட மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ.6.58. யூனிட்டுக்கு ரூ. 17.74 கொடுத்து அப்போலோ நிறுவனத்தின் மின்சாரத்தை வாங்க முடியாததால், மின்சாரம் வாங்கத் தவறியதற்குத் தண்டமாக, 2005-06 இல் மட்டும் நாளொன்றுக்கு ஒரு கோடி வீதம் 330 கோடி ரூபாயை கொடுத்திருக்கிறது மின்வாரியம்.(காந்தி, மேற்படிநூல்)
தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்யும் நீர்மின்சக்தியின் விலை யூனிட்டுக்கு 21 காசுகள். அனல் மின்சக்தியின் அதிகபட்ச விலை ரூ.2.14 காசுகள் என்பதையும் இங்கே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழக மின் வாரியத்தின் 56,000 கோடி ரூபாய் கடனும், அதனைக் கட்டுவதற்கு நாம் தரப்போகும் கூடுதல் கட்டணமும் அரசுக்குப் போகவில்லை. நேரே முதலாளிகளின் பணப்பெட்டிக்குத்தான் போய்ச் சேர்கிறது.
ஒப்பந்தம் செய்த விலையில் ஒப்பந்தப்படி மின்சாரம் வாங்கவில்லையென்றால், தங்களது மின் நிலையங்கள் இயங்காமல் சும்மா இருப்பதற்கே அபராதக் கட்டணம் வசூலித்து மின்வாரியத்தைத் திவாலாக்கும் கறார் பேர்வழிகளான தனியார் முதலாளிகள், தமது தரப்பில் ஒப்பந்தங்களை மதிக்கிறார்களா?
ஒரு யூனிட் 2.26 காசுக்கு மின்சாரம் சப்ளை செய்வதாக ஏலம் கேட்டு, டாடாவுக்குச் சொந்தமான முந்திரா அல்ட்ரா மெகா பிராஜக்ட் என்ற 4000 மெகாவாட் அனல் மின்நிலையம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. இதற்கான நிலக்கரியை இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்து வந்தது. இப்போது நிலக்கரியின் சர்வதேச விலை உயர்ந்துவிட்டதால், தான் ஏலம் கேட்ட விலையில் மின்சாரம் தர முடியாது என்றும் விலையைக் கூட்டவேண்டும் என்றும் கோருகிறது டாடா நிறுவனம். இந்தோனேசியாவில் உள்ள அந்த சுரங்கங்களும் டாடாவுக்கு சொந்தமானவையே என்பதால், மின்சாரத்தின் விலையைக் கூட்ட மறுக்கின்றன மாநில மின்வாரியங்கள்.
“மின்சாரத்தின் விலையைக் கூட்டித்தர மறுத்தால் மின்நிலையத்தை மூடுவோம். திவாலாகப்போவது நாங்க

No comments: