Wednesday, April 18, 2012

ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களால் ஆபத்தா?
Tuesday, April 17, 2012 Abdul Basith



ஆன்ட்ராய்ட் மொபைல்களின் சிறப்புகளில் ஒன்று இதற்கென அதிகமான அப்ளிகேசன்களும், விளையாட்டுக்களும் உள்ளது தான். கடந்த மார்ச் மாதம் வரை நாலரை லட்சத்திற்கும் அதிகமான அப்ளிகேசன்கள், விளையாட்டுக்கள் உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. அவற்றில் அதிகமானவைகள் இலவசமாக கிடைக்கின்றன.

இலவசங்கள் எதுவும் இலவசம் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லா இலவசங்களுக்கும் நாம் மறைமுகமாக ஏதோவொரு விலை கொடுக்கிறோம். இலவச ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களிலும் அப்படித்தான்.

கடந்த அக்டோபர் 2011-வரை கிட்டத்தட்ட 37 சதவீத அப்ளிகேசன்களை ஆன்ட்ராய்ட் மார்க்கெட்டிலிருந்து (Google Play) பல்வேறு காரணங்களுக்காக கூகுள் நீக்கியுள்ளது. அதில் 70 சதவீதம் இலவச அப்ளிகேசன்களாகும். நீக்கப்பட்டதில் அதிகமானது மால்வேர் அப்ளிகேசன்களாகும்.

பொதுவாக ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்கள், விளையாட்டுக்களை நிறுவும்போது சில அனுமதிகள் (Permissions) கேட்கும். அவற்றை ஏற்றுக் கொண்டால் தான் அவைகளை நிறுவ முடியும்.



ஆன்ட்ராய்டில் மொத்தம் 22 விதமான அனுமதிகள் இருக்கின்றன. அப்ளிகேசன்கள், விளையாட்டுக்களை நிறுவும் முன் அந்த அனுமதிகளை படிப்பது அவசியமாகும். முக்கியமான சில அனுமதிகள்,

Services that cost you money – make phone calls [உங்கள் மொபைலில் இருந்து மற்றவர்களுக்கு கால் செய்வதற்கான அனுமதி. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம்.]
Services that cost you money - send SMS or MMS [உங்கள் மொபைலில் இருந்து எஸ்.எம்.எஸ், எம்.எஸ்.எஸ் ஆகியவைகளை அனுப்புவதற்கான அனுமதி. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம்.]
Storage - modify/delete SD card contents [உங்கள் மெமரி கார்டில் சேமித்து வைக்கவும், அதில் உள்ளவற்றை மாற்றம் செய்வதற்கு, நீக்குவதற்குமான அனுமதி.]
இறைவன் நாடினால் அனைத்து அனுமதிகளைப் பற்றி தனி பதிவாக எழுதுகிறேன்.

அப்ளிகேசன்களை நிறுவும் முன் அவைகள் கேட்கும் அனுமதி அவசியமானதா? என்பதை பாருங்கள். Photography தொடர்பான அப்ளிகேசன் Storage அனுமதியை கேட்கும். ஆனால் அதுவே Phone Call செய்வதற்கான அனுமதியை கேட்டால் கவனமாக இருக்க வேண்டும்.

சில அப்ளிகேசன்களை நிறுவுவதற்கு எந்த அனுமதியையும் கேட்காது. "This application requires no special permissions to run." என்று சொல்லும். ஆனால் அது போன்ற அப்ளிகேசன்களாலும் மால்வேர்களை நிறுவி நமது தகவல்களை எடுக்க முடியும் என்று தற்போதைய ஆய்வு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பாக இருப்பது எப்படி?



தீங்கு விளைவிக்கும் அப்ளிகேசன்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு சிறந்த வழி, அந்த அப்ளிகேசன்/கேம் பற்றி அதை பயன்படுத்தியவர்கள் என்ன சொல்லியுள்ளார்கள் என்பதை "User Reviews" பகுதியில் படிப்பதாகும். அதை படித்தல் ஓரளவு நாம் தெரிந்துக் கொள்ளலாம். Rating-ஐ மட்டும் பார்க்க வேண்டாம். கருத்துக்களையும் படியுங்கள்.

முடிந்தவரை அப்ளிகேசன்/கேம்களை Google Play-வில் இருந்து மட்டுமே நிறுவுங்கள். தற்போது போலியான Angry Birds Space கேம் மற்ற தளங்களில் பரவி வருகிறது. இது Trojan Virus-ஐ நிறுவிவிடும்.

கவர்ச்சியான, ஆபாசமான அப்ளிகேசன்/கேம்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அவைகள் தான் அதிகம் மால்வேர்களை பரப்புகிறது.

நீங்கள் பார்க்கும் அனைத்து அப்ளிகேசன்களையும் நிறுவ வேண்டாம்.

இறைவன் நாடினால் ஆன்ட்ராய்ட் பாதுகாப்பு பற்றி மேலும் பார்ப்போம்.

ஆன்ட்ராய்ட் பற்றிய அனைத்து பதிவுகளும் இங்கே.

http://ping.fm/fRz7u
--


ALAVUDEEN

No comments: