Sunday, April 15, 2012

ஐயோ எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா?
பால் விலை உயர்வு,முழு நேர மின் வெட்டு, கடுமையான விலையேற்றம், பெட்ரோல்,டீசல் விலையேற்றம்,மி கட்டண உயர்வு இப்படி பல கொடுமைகளை அனுபவிப்பது போதாதென்று,இந்த கடுமையான பஸ் கட்டண உயர்வு. அதுவும் ஆளாளுக்கு அவர்கள் இஷ்டத்திற்கு ஏற்றுகிறார்கள். மக்கள் விழி பிதுங்கியுள்ளனர். ஒன்று மட்டும் இவ்வேளை நினைவுக்கு வந்து தொலைகிறது. ஒருத்தன் கொடுமை,கொடுமை என்று கோவிலுக்குப் போனானாம்! அங்கும் ஒரு கொடுமை கும்மி அடித்துக் கொண்டிருந்ததாம். என்னங்க நான் சொல்றது சரிதானே! ஆமாம்! யாருக்குமே இல்லாத அக்கறை உனக்கு மட்டும் ஏன் என்று கேட்கிறீர்களா? பாதிக்கப்பட்டவன் நான்! தினமும் நேரிடையாக பாதிக்கப் படுபவன் நான்! பஸ்ஸில் ஏறியதும் தினமும் நடத்துனரிடம் சண்டை போடுவேன். சக பிரயாணிகள் அனைவருமே மவுனம்! மவுனம்!! மவுனந்தான்! நம்மைக் காப்பாற்ற யாருமே இல்லையா? யாராவது ஒரு சட்டமன்ற உறுப்பினர் கீழ் காணும் குறைகள் பற்றி சட்ட மன்றத்தில் பேச மாட்டாரா என கனவு காணும் ஒரு அப்பாவி பொது ஜனம்,
Engr.Sulthan

> தி மு க ஆட்சி இருக்கும்பொழுதே அரசு போக்குவரத்து பதினேழு சதவீதம் கட்டணம் மறைமுகமாக ஏற்றப்பட்டது அது அந்த அந்த கழகத்தின் எம்டிகளின் விருப்பபடி செய்யப்பட்டது அதுபோல் இப்போது தாறுமாறாக பயணக்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது இதை அரசு ஒழுங்குபடுத்த வேண்டும் அல்லது போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்க வேண்டும் தனியார் பஸ் கம்பெனிகள் எட்டு பஸ் நிர்வாகம் செய்ய இருவர் மற்றும் டிரைவர் நடத்துனர்கள் இருக்கிறார்கள் ஆனால் அரசு போக்குவரத்தில் ஒரு பஸ் நிர்வாகத்திற்கு எட்டு பேர்கள் உள்ளார்கள் எனவே செலவிற்கு கட்டண அதிகரிப்பு செய்து நம் தலையில் கட்டுகிறார்கள் இதுவே உண்மை நிலை
>

இப்ப சாதாரணமாக 200% இருந்து 400% வசூல் பண்ணுறாங்க



> தமிழக அரசின் மீது, மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்படும் வகையில், மாநிலத்தின் பல பகுதிகளில், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், தங்கள் இஷ்டத்துக்கு, பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.
>
>
> தமிழகத்தில், கடந்த 2001ல் அ.தி.மு.க., ஆட்சியில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம், மீண்டும் பத்தாண்டுகளுக்குப் பின், அதே கட்சியின் ஆட்சியில், கடந்த ஆண்டில், உயர்த்தப்பட்டது. மாநில அரசுக்கு உள்ள, ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன், போக்குவரத்துக் கழகங்களின் நஷ்டம் ஆகியவற்றை, முதல்வர் குறிப்பிட்டு, இந்த கட்டண உயர்வை அமல்படுத்தியதால், மக்களும் ஏற்றுக்கொண்டனர். ஆனால், முதல்வரின் உத்தரவுக்கு மாறாக, முந்தைய ஆட்சியில் செய்ததைப் போலவே மீண்டும், "மறைமுக கட்டண உயர்வை' போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அறிமுகம் செய்து, இந்த அரசின் மீது, மக்களுக்கு கடும் அதிருப்தியை, ஏற்படுத்தியுள்ளனர். இத்தகைய முறைகேடுகளை அரங்கேற்றுவதில், வழக்கம்போல் கோவை கோட்டம்தான், இப்போதும் முதலிடம் வகிக்கிறது.
>
>
> கடந்த தி.மு.க., ஆட்சியின்போதுதான், அரசு பஸ்களுக்கு "எக்ஸ்பிரஸ்', பாயின்ட் டூ பாயின்ட்', "எல்.எஸ்.எஸ்.' என, புதுப்புதுப் பெயர்களைச் சூட்டி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறையை, போக்குவரத்துக்கழக அதிகாரிகள், கண்டுபிடித்தனர். இதனை அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் கடுமையாக எதிர்த்தனர். இதற்குப் பதிலளித்துப் பேசிய, அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு, "அப்படி எதுவுமே இல்லை' என்று, "முழு பூசணிக்காயை' மறைக்கும் வேலையைச் செய்தார். ஆட்சி மாற்றத்துக்குப் பின், அரசே கட்டணத்தை உயர்த்துவது என்று, கொள்கை முடிவெடுத்த பின், கடந்த நவம்பரில், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. பஸ் கட்டணத்தை அரசே உயர்த்தி விட்டதால், இனிமேல் இத்தகைய மறைமுக கட்டண உயர்வுகள் இருக்காது என்றுதான், பொதுமக்களும் நம்பினர்; அதற்கு முற்றிலும் மாறாக, கடந்த ஆட்சியின்போது, சாதாரண பஸ்களாக இயங்கிய பஸ்களிலும், "எக்ஸ்பிரஸ்', "எல்.எஸ்.எஸ்.,' மற்றும் "டீலக்ஸ்' என புதுப்புது ஸ்டிக்கர்களை ஒட்டி, மறைமுக கட்டணமே, நிரந்தர கட்டணமாகி விட்டது. டவுன் பஸ்களில், குறைந்தபட்ச கட்டணமாக இருந்த, இரண்டு ரூபாயை, ஒரு ரூபாய் மட்டுமே அரசு உயர்த்தியது. ஆனால், அதே பஸ்சுக்கு, "எக்ஸ்பிரஸ்' என்று பெயர் சூட்டி, குறைந்தபட்ச கட்டணம், ஐந்து ரூபாய் என்று உயர்த்தியது போக்குவரத்துக்கழகம். இதில், அரசின் விதிமுறைகள் பலவும், எக்குத்தப்பாக மீறப்பட்டுள்ளன.
>
>
> தமிழ்நாடு மோட்டார் வாகனச்சட்ட விதிகளின் படி, "எக்ஸ்பிரஸ்' என்றால், 80 கி.மீ., தூர இடைவெளியில்தான், இயக்கப்பட வேண்டும். இதன்படி, டவுன் பஸ்களை, "எக்ஸ்பிரஸ்' என்று, சொல்லவே முடியாது. இதைப்பற்றியெல்லாம், போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கவலைப்படுவதே இல்லை. அவர்களுக்குத் தேவை, ஒரு சின்ன ஸ்டிக்கர் மட்டுமே.
> இத்தனைக்கும், இந்த பஸ்களின் பயண நேரம், எந்த வகையிலும், குறைவதில்லை. அதேபோல, "லிமிட்டடு ஸ்டாப் சர்வீஸ் (எல்.எஸ்.எஸ்.,)' என்ற பெயரில் இயக்கப்படும் பஸ்களும், குறிப்பிட்ட பஸ் ஸ்டாப்களில் மட்டும், நிறுத்தப்படுவதில்லை. நேரம், தூரம் எதுவுமே குறையாமல், அதே நேரம், அதே தூரத்துக்கு இயக்கப்படும் பஸ்களுக்கு, வாங்கப்படும் கட்டணம் மட்டும், அதிகம். இவற்றைத் தவிர்த்து, சொகுசு பஸ்கள் என்ற பெயரிலும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை, போக்குவரத்துக்கழக அதிகாரிகள், தனிக்கலையாகச் செய்து வருகின்றனர். ஐந்தாண்டுகளுக்கு முன், அறிமுகப்படுத்தி, இப்போது "டொரடொர'வென இயங்கும் ஓட்டை உடைசல் பஸ்களுக்கும், சொகுசு என்ற பெயரில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கொடுமை, தொடர்கிறது.
>
>
> இதில், மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, மறைமுகமாக, முறைகேடாக கூடுதல் கட்டணத்தை வசூலிப்பது, அரசு பஸ்கள் மட்டுமே. எந்த ஒரு தனியார் பஸ்சிலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதே இல்லை. இத்தனைக்கும், சொகுசு, வசதி, வேகம் என, எதிலுமே அரசு பஸ்களுக்கு, தனியார் பஸ்கள் குறைந்தவையில்லை. ஒரு பஸ் இயக்கப்பட வேண்டிய வழித்தடம், கட்டண அட்டவணை, கால அட்டவணை அனைத்துக்கும், அனுமதி தரும் பொறுப்பு, மாவட்ட போக்குவரத்து அதிகாரியான கலெக்டருக்கே உள்ளது. ஒரு பஸ்சை ,"எக்ஸ்பிரஸ்' என்று பெயர் மாற்றவும், கட்டணத்தை உயர்த்தவும், நேரத்தை மாற்றிக்கொள்ளவும், கலெக்டர் மட்டுமே அனுமதி தர முடியும். ஆனால், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், தங்கள் இஷ்டத்துக்கு பெயர்களை மாற்றி, கட்டணத்தை உயர்த்திக் கொள்கின்றனர். இதுபோன்ற எந்த அனுமதியையும், இவர்கள் வாங்குவதில்லை என்பது, பல முறை நிரூபணமாகியுள்ளது.
>
>
> கோவை வடவள்ளி பெரியார் நகரைச் சேர்ந்த வினோத் என்ற இன்ஜினியர், தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலமாக, இந்த முறைகேட்டை மீண்டும் அம்பலப்படுத்தயுள்ளார். வடவள்ளியிலிருந்து ஒண்டிப்புதூர் செல்லும் டவுன் பஸ்சுக்கு, அரசு நிர்ணயித்த கட்டணம், எட்டு ரூபாய் மட்டுமே; இந்த இளைஞர் பயணம் செய்த பஸ்சில், 12 ரூபாய் கட்டணம் வாங்கப்பட்டது. அதிக கட்டணம் வசூலித்தது பற்றி, தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, "நீங்கள் பயணம் செய்த பஸ், "எக்ஸ்பிரஸ்' என்பதால், 12 ரூபாய் வாங்கப்பட்டது' என்று பதில் வந்தது. ஆனால், அதற்கு கலெக்டரிடம், முறைப்படி அனுமதி பெறப்படவில்லை என்பதும், தெரியவந்தது. இதுபற்றி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு, வினோத் புகார் அனுப்பினார். அங்கிருந்து பரிந்துரைக்கப்பட்ட மனுவுக்கு, "அரசு உயர்த்திய கட்டணத்தின்படியே கட்டணம் வசூலிக்கப்பட்டதாக' முதல்வரின் தனிப்பிரிவுக்கே, கோவை போக்குவரத்துக்கழக அதிகாரிகள், தவறான தகவல், அனுப்பியுள்ளனர். உண்மையில், இந்த பதில் அனுப்பும் நாள் வரையிலும், அந்த பஸ்சில் வசூலிக்கும் கட்டண அட்டவணைக்கு, கலெக்டரிடம் அனுமதி பெறவேயில்லை.
>
>
> தமிழகம் முழுவதும் பரவலாக, இந்த கட்டண முறைகேடு நடந்து வந்தாலும், சென்னை மற்றும் கோவை நகரில்தான், இந்த முறைகேடு அதிகமாக நடப்பதாக குற்றம் சாட்டுகிறார், கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கதிர்மதியோன். இது தொடர்பாக, ஏராளமான தகவல்களையும், அவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் வாங்கி, ஆதாரங்களை அடுக்குகிறார். இவர் வாங்கிய தகவல்களின்படி, கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, கோவை நகரில் இயங்கிய, 588 டவுன் பஸ்களில், 422 பஸ்கள் சாதாரண பஸ்களாக இயக்கப்பட்டன; இது 72 சதவீதமாகும். மீதமுள்ள 166 பஸ்களும், எல்.எஸ்.எஸ்., எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் என, வெவ்வேறு பெயர்களில், இயக்கப்பட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அவற்றில், 33 பஸ்களுக்கு மட்டுமே, கலெக்டரிடம் முறையான அனுமதி பெறப்பட்டிருந்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பின், இதே தகவல்களை, அவர் வாங்கியுள்ளார். அதன்படி, கோவையில் இயங்கும் 558 டவுன் பஸ்களில், 187 பஸ்கள் மட்டுமே, சாதாரண பஸ்களாக இயக்கப்படுகின்றன; இது வெறும், 33 சதவீதம் மட்டுமே. பல வழித்தடங்களில், சாதாரண பஸ்களே இயங்குவதில்லை. மொத்தம், 338 பஸ்கள், வெவ்வேறு பெயர்களில் இயக்கப்பட்டு, கூடுதல் கட்டணம் வசூலிப்பதும், ஆனால், கூடுதலாக ஒரு பஸ்சுக்குக் கூட, கலெக்டரிடம் முறையான அனுமதி பெறவில்லை என்பதும், தெரியவந்தது. இந்த முறைகேடுபற்றி, போக்குவரத்துத்துறை செயலர், உள்துறை செயலர் என பலருக்கும், இவர் புகார் மனுக்களை அனுப்பியும், எதற்குமே பலன் இல்லை.
>
>
> இதற்கு முழுமுதற்காரணம், போக்குவரத்துக்கழகத்தின் உயரதிகாரிகள்தான். அரசாணைப்படியே, கட்டணம் வசூலிப்பதைப் போல, தவறான தகவல்களை, முதல்வர் மற்றும் அமைச்சருக்குக் கொடுத்து வருவது இவர்களே. கடந்த ஆட்சியைப் போலவே, தற்போதுள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும், "ஒன்றும் நடக்கவில்லை' என்று, பதிலளிப்பதும் இவர்களால்தான். மறைமுகமாக, அரசு பஸ்களில் உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்தால், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாடச் செலவு, அநியாயத்துக்கு எகிறியுள்ளது. மற்றொரு புறத்தில், தனியார் பஸ்களில், கட்டணம் குறைவு என்பதால், மக்கள் அவற்றைப் பயன்படுத்துவது அதிகரித்து, அரசு பஸ்களின், வருவாய் குறைகிறது. இதற்கு இணையாக, அரசின் மீதான மக்கள் அதிருப்தியும், அதிகரித்து வருகிறது. பஸ் கட்டணத்தை உயர்த்தியதை, மக்கள் எதிர்க்கவில்லை; பஸ் பெயர்களை மட்டுமே மாற்றி, அரசு உயர்த்தியதை விட, 150 சதவீதம் வரை, கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத்தான், மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. இவ்விஷயத்தில், முதல்வர் தலையிட்டு, அதிரடி முடிவெடுத்தால் மட்டுமே இந்த முறைகேடுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதே, இப்போதுள்ள நிலைமை.
>
>
> மானியம் தந்தது இதற்குத்தானா? மத்திய அரசின், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், இந்தியாவிலுள்ள, 63 மாநகராட்சிகளில், ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டம், முதற்கட்டமாக, நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, மக்கள் போக்குவரத்துக்கான வசதிகளை, மேம்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டது. சென்னை மற்றும் கோவை நகரங்களில், இத்திட்டத்தின் கீழ், ஏராளமான தாழ்தள சொகுசு பஸ்கள் வாங்கப்பட்டன; இந்த பஸ்கள் வாங்குவதற்கு, மத்திய அரசு, 50 சதவீதம் மானியமும், தமிழக அரசு, 20 சதவீதம் வட்டியில்லாக் கடனும், வழங்கியுள்ளன. மீதமுள்ள தொகையை மட்டுமே, போக்குவரத்துக் கழகம் செலவிட்டுள்ளது. இவ்வாறு, மத்திய அரசும், மாநில அரசும் தந்த நிதியில் வாங்கப்பட்ட, சொகுசு பஸ்களில்தான், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, பல மடங்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மானியம் எதுவுமின்றி, அரசே வாங்கிய பஸ்களில், குறைந்த கட்டணமும், 50 சதவீத மானியத்தில் வாங்கப்பட்ட பஸ்களில், கூடுதல் கட்டணமும், வசூலிக்கும் முரண்பாட்டை என்னவென்று சொல்வது?.
>
>
> அரசு ஆய்வு செய்ய வேண்டும்! அர�

No comments: