Saturday, April 28, 2012

Source: http://ping.fm/6TgMQ

தினம் ஒரு கப் காரட் ஜூஸ்

Posted by Sathik Ali

இதை விட சிறந்தது இல்லை எனும் அளவு காரட் ஜூஸ் சிறப்பு வாய்ந்தது.
உயிர் சத்துகள் நிறைந்த காரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது. செலவு குறைந்த சத்துணவு இது. புதிய காரட்டுகளை மிக்ஸியில் உடனுக்குடன் அரைத்து அருந்துவதே நல்லது.
குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் யாவருக்கும் நல்லது.
காரட் சாறுடன் எலுமிச்சம் பழமும் புதினாவும் கலந்து உப்பு சேர்க்காமல் அருந்தினால் மலச்சிக்கல் மாறும்.
காரட்டில் அதிக அளவு காணப்படும் வைட்டமின் A கண்களுக்கு நல்லது. தினமும் அருந்தினால் கண் எரிச்சல், தளர்ச்சி நீங்கி பார்வை ஒளி பெறும்.
ஞாபக சக்தி அதிகரிக்கும், புத்திகூர்மை உண்டாகும். காரட் சாறுடன் ஏழு எட்டு பாதாம் பருப்புகள் உண்டு வந்தால், மூளை விழிப்புடன் இருக்கும். மூளைக்கு நல்லது. பைத்தியம் குறையும்
முடி கொட்டாது நீளமாக வளரும்.
வைட்டமின் B அதிகம் உள்ளது. எளிதில் ஜீரணமாகும்.
நெஞ்சு எரிச்சலுக்கு தினமும் காரட் சாறு பருகுவது நல்லது. வாய்வு பிடிப்பு நீங்கும். வயிற்றை சுத்தமாக்கும்.
குடல்வால் நோய் வராது. கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் அல்லது புண்கள் இருந்தால் காரட் ஜூஸ் நல்ல மருந்து.
இதயத் துடிப்பைச் சீராக்கும். இரத்தம் உறைந்து இதய அடைப்பு ஏற்படுவதிலிருந்து காக்கும்.
மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக தினமும் காரட் சாறு அருந்துவது நல்லது.
இரத்தப் புற்றுக்கு தினமும் காரட் சாறு அருந்த ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தலை சுற்று, மயக்கம் வராமல் காக்கும்
வயிற்றில் பூச்சிகளை மருந்தின்றி வெளியேற்றும், தோல் வரட்சி நீங்கி பளபளப்பாகும், முகப்பரு பருக்கள் மறைந்து சிவப்பழகு கூடும்.
நெஞ்சுவலி, மூட்டு வலி முதுகுவலி மறையும்.
சூதகக் கட்டு ஏற்படாமலிருக்கவும், மாத விலக்கு சரியான கால இடைவெளியில் ஏற்படவும் தினமும் ஒரு டம்ளர் காரட் சாறு அருந்தவும்.
தரமான தாய்ப்பால் தொடர்ந்து கிடைக்க காரட் சாறு அருந்தவும்.
ஒல்லியானவர்கள் மற்றும் இரத்த சோகையுள்ளவர்கள் தினசரி அருந்தவும்.
தேவை இல்லாத யூரிக் அமிலத்தை காரட் சாறு இரத்தத்தில் கட்டுப் படுத்துகிறது. இதனால், மூட்டுவீக்கம் மற்றும் வாத நோயாளிகள் வலிநீங்கி குணம் பெறுகிறார்கள்.
உருளைக் கிழங்கை விட 6 மடங்கு அதிக சுண்ணாம்புச் சத்து காரட்டில் உள்ளது. இது எளிதில் ஜீரணிக்கப்படுவதால், எலும்புகள் உறுதி பெறுகின்றன. பெண்கள் எலும்பு மெலிந்து உடைந்து போகும் நோயில் இருந்து தப்பிக்கலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு காரட்டிலுள்ள Tocokinin என்ற பொருள் இன்சுலின் போல் இருந்து உதவுகிறது.
காரட் ஜுஸில் உள்ள வைட்டமின் ‘ஈ’ மலட்டுத் தன்மையை மாற்றும்.
கர்ப்பிணிகள் தினமும் 25 gm காரட் பச்சையாக உண்டால் மலக்கட்டு, போலி வலி,களைப்பு நீங்கி குழந்தை நிறமாக வலுவாகப் பிறக்கும்.
காரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி, பசும் பாலில் போட்டு அவித்து, சிறிது தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் இளைப்பு நீங்கும்.உடல் வலுப்படும் .எடை கூடும்.நோய் வராது.
காரட் துண்டுகளை பசும்பாலில் அவித்து அதோடு உலர் திராட்ச்சையும், தேனும் கலந்து பெரியவர்களுக்கு கொடுக்க உடல் வலுவாகும்.வயிற்று நோய்கள் மாறும்.
தோல் நீக்கி நறுக்கிய காரட்டுடன் ,பச்சைக் கொத்த மல்லி,இஞ்சியை தேவையான அளவு சேர்த்து தயிரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து உண்ண வயிறு தொடர்பான நோய்கள் மாறும்.வரட்சி நீங்கி முகம் பொலிவாகும். மூளை பலப்படும்.
இத்தனை சிறப்பு நிறைந்த காரட் ஜுஸை தினமும் ஒரு கிளாஸ் அருந்தினாலே போதும். அதிகம் அருந்தினால் மூலத் தொந்தரவுகள் வர வாய்ப்புண்டு.

காரட் மில்க் ஷேக் 1:
ஒரு கப் தேங்காய் துருவல் ஒரு கப் காரட் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கால் தேக்கரண்டி ஏலக்காயும் சேர்த்து வடிகட்டவும்.அதோடு தேவையான அளவு தண்ணீர், சீனி கலந்து பரிமாறவும். தேங்காய்க்கு பதில் பாலும் பயன் படுத்தலாம்


காரட் மில்க் ஷேக் 2:
இரண்டு காரட்டை துருவி தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். 4 பாதமை ஊற வைத்து தோல் நீக்கவும். ஒரு டம்ளர் பால் எடுத்து வைக்கவும். அவித்த காரட் துருவல் மற்றும் பாதாமுடன் சிறிது பால் சேர்த்து விழுதாக அரைத்து அதோடு மீதியுள்ள பால் மற்றும் ஒரு மேசைக்கரண்டி வெனிலா ஐஸ் கிரீம், இரண்டு ஐஸ் க்யூப்கள், ஒன்றரை மேசைக்கரண்டி பொடித்த சீனி, ஒரு சிட்டிகை குங்குமப் பூ சேர்த்து கலந்து பரிமாறவும்.

No comments: