அறிவோம் அரிச்சுவடி- ஓ,ஓள,ஃ
ஓ தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இது பதினோராவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ஓகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஓவன்னா" என்பது வழக்கம்.
"ஓ" யின் வகைப்பாடு
தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ஓ உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது நெட்டெழுத்து எனப்படுகின்றது. நெட்டெழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் இரண்டு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]
இனவெழுத்து
எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. இம்மூன்று வித அடிப்படையிலும், ஓ என்பது ஒ க்கு இன எழுத்தாக அமையும்[2].
சொல்லில் ஓகாரம் வரும் இடங்கள்
'ஓ' எழுதும் முறை
தனி ஓ சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம், ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் ஓ சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்[3]. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙோ, ஞோ, டோ, ணோ, யோ, ரோ, லோ, வோ, ழோ, ளோ றோ, னோ ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும், தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் டோ, யோ, ரோ, லோ போன்ற எழுத்துக்களும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். டோக்கியோ, யோவான், ரோடு, லோரன்ஸ் (இலங்கை வழக்கு) என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.
ஓகாரம் தனித்து நின்றும், மெய்களோடு சேர்ந்தும் சொல்லுக்கு இறுதியில் வரும். ஆனால் ஞகர மெய்யுடன் ஓகாரம் சொல்லுக்கு இறுதியில் வராது[4]. ஏகாரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்.
"ஓ" வும் மெய்யெழுத்துக்களும்
ஓ வுடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து ஓகார உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன. [5]. இதனால், ஓகார உயிர் மெய்களை வரிவடிவில் குறிக்கும்போதும் அகரமேறிய உயிர்மெய் எழுத்துடனேயே ஓகாரத்தைக் குறிக்கும் இரட்டைக் கொம்பு குறியீட்டையும் கால் குறியீட்டையும் சேர்த்து எழுதுவது மரபாக உள்ளது.
18 மெய்யெழுத்துக்களோடும் ஓகாரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.
மெய்யெழுத்துக்கள் சேர்க்கை உயிர்மெய்கள்
வரிவடிவம் பெயர் வரிவடிவம் பெயர்
க் இக்கன்னா க் + ஓ கோ கோவன்னா
ங் இங்ஙன்னா ங் + ஓ ஙோ ஙோவன்னா
ச் இச்சன்னா ச் + ஓ சோ சோவன்னா
ஞ் இஞ்ஞன்னா ஞ் + ஓ ஞோ ஞோவன்னா
ட் இட்டன்னா ட் + ஓ டோ டோவன்னா
ண் இண்ணன்னா ண் + ஓ ணோ ணோவன்னா
த் இத்தன்னா த் + ஓ தோ தோவன்னா
ந் இந்தன்னா ந் + ஓ நோ நோவயன்னா
ப் இப்பன்னா ப் + ஓ போ போவன்னா
ம் இம்மன்னா ம் + ஓ மோ மோவன்னா
ய் இய்யன்னா ய் + ஓ யோ யோவன்னா
ர் இர்ரன்னா ர் + ஓ ரோ ரோவன்னா
ல் இல்லன்னா ல் + ஓ லோ லோவன்னா
வ் இவ்வன்னா வ் + ஓ வோ வோவன்னா
ழ் இழ்ழன்னா ழ் + ஓ ழோ ழோவன்னா
ள் இள்ளன்னா ள் + ஓ ளோ ளோவன்னா
ற் இற்றன்னா ற் + ஓ றோ றோவன்னா
ன் இன்னன்னா ன் + ஓ னோ னோவன்னா
வரிவடிவம்
தமிழில் ஓகார ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் இப்போதுள்ளவாறே எப்போதும் இருந்ததில்லை. ஏறத்தாழ கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் ஓகாரத்தைக் குறிக்கப் பயன் பட்ட வரிவடிவங்கள் பற்றிய தகவல்கள் அவ்வக்காலத்துக் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கிமு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழை எழுதுவதற்கு தமிழ்ப் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துக்கள் பயன்பட்டுள்ளன.
தொல்காப்பியம் ஒகரத்தின் இயற்கை புள்ளி பெற்று நிற்றல் என்று கூறுவதால், ஒகரத்துக்கும் ஓகாரத்துக்கும் இருந்த வேறுபாடு ஒரு புள்ளியே என உணரலாம். இதனால் ஓகாரமே புள்ளியில்லாத அடிப்படைக் குறியீடாக அமைந்தது தெளிவு. இவ்வேறுபாடுகளைக் கல்வெட்டு எழுத்துக்களில் காணமுடியவில்லை. பிந்திய தமிழ் கல்வெட்டுக்களில் ஒகரமும், ஓகாரமும் வேறுபாடு இன்றி எழுதப்பட்டது தெரிகிறது. பிற்காலத்தில் வீரமாமுனிவரே ஓகாரத்தைக் குறிக்க அடியில் சிறிய சுழியொன்றைச் சேர்த்து அதனை ஒகரத்திலிருந்து வேறுபடுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
ஓகாரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஒரு ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் ஓகாரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், சிங்களம் முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் ஓகாரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன.
பிரெய்லியில் ஓகாரம்
கண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள "பாரதி பிரெய்லி" தமிழ் எழுத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஒரு எழுத்துக்கான இடம் ஒரு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு புள்ளிக்கான இடங்கள் உள்ளன. இதில் முதலாவது, மூன்றாவது வரிசைகளில் இடது பக்கப் புள்ளியும் இரண்டாவது வரிசையில் வலப்பக்கப் புள்ளியும் புடைத்து இருப்பின் அது ஓ வைக் குறிக்கும். இதை கீழே உள்ள படம் காட்டுகிறது.
பாரதி பிரெய்லியில் ஏகாரம்
ஔ தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இது பன்னிரண்டாவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ஔகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஔவன்னா" என்பது வழக்கம்.
"ஔ" வின் வகைப்பாடு
தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ஔ உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது நெட்டெழுத்து எனப்படுகின்றது. நெட்டெழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் இரண்டு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]
இனவெழுத்து
எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. இந்த அடிப்படைகளில், ஔ என்பது உ க்கு இன எழுத்தாகும் என்கிறது நன்னூல்[2].
சொல்லில் ஔகாரம் வரும் இடங்கள்
'ஔ' எழுதும் முறை
தனி ஔ சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் ஔ சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்[3]. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙௌ, சௌ, ஞௌ, டௌ, ணௌ, யௌ, ரௌ, லௌ, ழௌ, ளௌ றௌ, னௌ ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. ஆனால் நன்னூல் சகரத்துடனும், யகரத்துடனும் ஐகாரம் சொற்களுக்கு முதலில் வரும் என்கிறது. தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் ரௌ, லௌ போன்ற எழுத்துக்களும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். ரௌத்திரம், லௌகீகம் என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.
ஔகாரம் தனித்தோ, மெய்களோடு சேர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வருவதில்லை. ககர மெய்யுடனும், வகர மெய்யுடனும் மட்டுமே ஔகாரம் சொல்லுக்கு இறுதியில் வரும். ஔகாரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்.
ஆய்த எழுத்து
ஆய்த எழுத்து என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பெயர்களும் உண்டு.
ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.
('தொல்காப்பியம்', எழுத்திகாரம் ~ 500 B.C.)
இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.
எ.கா:
அஃது - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய்
இஃது - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய்
வரலாறும் இலக்கணமும்
உலகில் பேச்சுமொழி முதலில் தோன்றி, பின்னர் எழுத்துமொழி தோன்றியது. அதாவது, ஒலிவடிவ எழுத்து தோன்றிய பின்னரே வரிவடிவ எழுத்து தோன்றியது.
"அ" என்று எழுத்தொலியை எழுப்பினால் அஃது ஒலி வடிவ எழுத்து. "அ" என எழுதினால் அது வரிவடிவ எழுத்து.
காதால் கேட்பது ஒலிவடிவ எழுத்து. கண்ணால் காண்பது வரிவடிவ எழுத்து. வரிவடிவ எழுத்துகள் அறிஞர் பெருமக்களால் கால இடைவெளியில் உருமாற்றம் பெற்று வருகின்றன.
உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர்மெய் எழுத்தும் இல்லாமல் தனித்த நிலையைப் பெற்று, தனித்து நின்று, தனியொரு எழுத்தாக இருப்பதால் "தனிநிலை" எனப்படுகிறது.
இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளிகளாலான எழுத்தாக அமைந்துள்ளது. ஆதலால் இவ்வெழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப் பெயர் பெற்றுள்ளது.
ஓசையின் அடிப்படையில் அஃகேனம் என பெயர் பெற்றுள்ளது.
வழக்காற்றில் இதை "ஆய்த" எழுத்து என்றே கூறுவர். "ஆயுத" எழுத்து எனக்கூறுவது தவறு.
பத்துவகைச் சார்பெழுத்துகளில் ஒன்றாகவே ஆய்த எழுத்து கூறப்பட்டுள்ளது. இயல்பாக அரை மாத்திரை ஒலியளவுபெறும் ஆய்த எழுத்து, ஓசை குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும்பொழுது, "ஆய்தக்குறுக்கம்" என்ற சார்பெழுத்து ஆகிறது.
ஆய்த எழுத்து தனிக்குறிலை (தனிக்குற்றெழுத்தை) அடுத்தும், வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்பும் எஃகு, அஃது என்பன போன்று வரும்.
கஃறீது (கல்+தீது), முஃடீது (முள்+தீது) என ஆய்தக்குறுக்கமாகி, சார்பெழுத்தாக வரும்பொழுதும் தனிக்குறிலை அடுத்தும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்னருமே வரும்.
ஆய்தம் என்பது பொதுவாக, கருவி எனப் பொருள்படும். ஆயினும், போர்க் கருவிகளையே ஆய்தம் அல்லது ஆயுதம் என்றனர். போர்க் கருவிகளிலும் குறிப்பிட்ட ஒரு கருவியே ஆய்தம் எனப் பெயர்பெற்றது.
போர்வீரனின் கேடயம் இரும்பால் செய்யப்பட்டு, வட்ட வடிவ அமைப்பில் இருக்கும். அதில், பிடிப்பதற்கென ஒரு பக்கத்தில் கைப்பிடி இருக்கும். மறுபக்கம் மூன்று புள்ளிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இரும்புக் குமிழிகள் இருக்கும். இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கினால், அந்த மூன்று குமிழிகள் போன்ற வலிய பகுதிகள், பகைவன் மீது கொட்டுவதுபோல் இடித்துத் தாக்கும். அந்தக் குமிழிகள் மூன்றில் இரண்டு கீழேயும், ஒன்று மேலேயும் ஃ என்பதுபோல இருக்கும். அந்த ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால், இந்த எழுத்தும் அப்பெயரைப் பெற்றது.
போர் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய போர்கருவிகளில் சூலமும் ஒன்று. சூலம் கூரிய முனைகள் மூன்றைப் பெற்றிருக்கும். அந்த மூன்று முனைகளை மட்டுமே நோக்கினால் முப்புள்ளியாகத் தோன்றும். சூலத்தின் முனைகள் மூன்றிலும், எலு�
No comments:
Post a Comment