Monday, April 16, 2012

எனக்குத் தெரியும் தலைப்பைக் கண்டதும் பல கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் மட்டைகளுடன் என் இடத்தைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள் என்று அவர்கள் என்னதான் நொங்கு நொங்குன்னு நொங்கினாலும் நான் நல்லாத் தாங்குவேன், ஏனென்றால் உண்மையே சொல்பவனுக்கு மனதில் உறுதி இருப்பதால் உடம்பில் வலிக்காது. நான் ரொம்ப ”நல்லவேன்”ண்டு” நீங்கள் சொல்றது காதிலே விழுது. சில வீடுகளில் சாந்தியிழந்த விசயத்திற்கு வருவோம், இக்கட்டுரை யாரையும் புண்படுத்தும் நோக்கோடு எழுதப்படவில்லை, அப்படியே புண்பட்டாலும் நல்லதச் சொல்றதில எனக்கு சங்கடமில்லை. கிரிக்கெட்டை பார்க்காதவர்களில் நானும் ஒருவன் என்ற முழுத்தகுதியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன் (பார்க்காமல் என்னத்த எழுதப் போகிறே என்று கேட்பவர்கள் இருப்பின் இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு மீண்டும் கேளுங்களேன் இதே கேள்வியை).

கிரிக்கெட்

இன்று பல்லாரயிரக்கணக்கான மாணவர்களின், இளைஞர்களி்ன், ஏன் கூடிய விரைவில் வாழ்வின் நிறைவு கண்டு விசா ஸ்டாம்பிங்கை எதிர்பார்த்து காத்திருக்கும் வயதானவர்களின் வாழ்க்கையைக்கூட சுழல் காற்றுபோல் சுழற்றி சுழற்றி அடித்துக் கொண்டு இருக்கின்றது. கிரிக்கெட் பலரின் வாழ்க்கையைத் தரிகெட்டு போக வைத்திருக்கின்றது. உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியம் இல்லாத விளையாட்டு மட்டையை எடுத்து விளையாடும் மட்டமான விளையாட்டுதான். குளிர்காலங்களில் சிறிதேனும் கை கால்களை அசைக்க வேண்டி ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆனால் இன்று அனல் தெரிக்கும் வெயிலிலும் கழுதை உப்பளத்திற்குச் சென்ற கதையாக மண்டைகாய விளையாடப் பட்டுக்கொண்டு இருக்கின்றது.11 மடையர்கள் விளையாட அதனை 11 கோடி முட்டாள்கள் பார்த்துக்கொண்டிருக்கார்கள் என்று யாரோ ஒரு ஆங்கிலேய யாசிர் (!!?) சொன்னதாக படித்ததுண்டு. பெரும்பாலும் தீவிர கிரிக்கெட் (நான் சொல்வது தீவிர கிரிக்கெட ரசிகர்களை மட்டுமே) ரசிகனை பாருங்கள் அவன் அணி தோற்றுவிட்டால் ”ஜின்” அடித்த மாடுபோல் ஒரே பரபரப்பாகத் திரிவான். அந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மாயை இந்த கிரிக்கெட்டிற்கு உண்டு,

கிரிக்கெட் பைத்தியம் பிடித்த ஒருவனிடம் அவன் நண்பன் கவலையாகச் சொன்னானாம், என் வாழ்வில் ”விதி விளையாடிவிட்டது” அதற்கு அவன் “ எத்தனை ஸ்கோர்” என்று கேட்டானாம், நிச்சயம் இவன் கீழ்பாக்க மருத்துமனை அருகில் பிளாட் பிடித்து தங்க வேண்டியவன் தான்.

சூதாட்டம்

கிரிக்கெட் விளையாடுபவன் திரைக்கு முன்னால் பெயருக்காக கிரிக்கெட் விளையாடிவிட்டு,திரைக்குப்பின்னால் சூதாட்டம் எனப்படும்,கோடிக்கணக்கான பணம் புழங்கும் விளையாட்டில் புகுந்து ஆடுகின்றான். ரசிகர்களை முட்டாளாக்கி வேடிக்கை பார்க்கின்றான், நாட்டுப்பற்றை விட அவனுக்கு நோட்டுப்பற்று அதிகமதிகம் ஒரு சிலர் சாதனை செய்ய வேண்டும் என்பதற்காக தன் அணி சோதனையைச் சந்தித்தாலும் பரவாயில்லை தன் புகழ் ஓங்க வேண்டும் என்ற வக்கிர எண்ணம் கொண்டவர்களையும் கொண்டதுதான் இந்த கிரேட் கி(று)ரிக்கெட்டு.

ஐபிஎல்

இங்கிலாந்தில் புகழ்பெற்று, ஒரு விளையாட்டு எப்படி இருக்கவேண்டும் என்ற விதிமுறையுடன் பல நாட்டு கிரிக்கெட் வீரர்களையும் வரவழைத்து ஒரு நியாயமான தொகையைக் கொடுத்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டி ஆரம்பிக்கப்பட்டதுதான் ”கவுண்டி” மேட்ச்கள், அதனைக் காப்பியடித்து அதில் என்னென்ன சேர்த்தால் இந்திய ரசிகர்களைக் குஷிப்படுத்த முடியும் என்று ஆராய்ந்து (!) அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ஐ.பி.எல் (Indian Pathetic League???)

ஐ.பி.எல்-லின் லட்சணம் அதன் உரிமையாளர்களைப் பார்த்தாலே தெரியும், குடிகாரர்களும், கூத்தாடிகளும்தான் அதன் முதலாளிகள், அவனுங்ககிட்டேதானே பணம் பயங்கரமா பாதாளம் வரை புழங்குது. ஐபிஎல்-லை சிலர் பார்ப்பதே அங்கு அங்கங்கள் மட்டும் காட்டத்தெரிந்த டான்ஸ் என்றாலே என்னவென்று தெரியாத ”cheer ladies” என்ற குமரிகள்(!!?) போன்று மேக்கப் செய்யப்பட்ட கிழவிகள் துள்ளுவதைக் காணத்தான்.

அதுமட்டுமன்று ”பகலிலே ஆட்டம் இரவினில் கிறக்கம்” என்பதுபோல். கிரிக்கெட் வீரர்களும்,நடுவர்களும், அணி முதலாளிகளும் இன்னும் சில நாதாரிகளும் ஆட்டத்திற்குப் பிறகு இரவுப் பார்ட்டி என்ற பெயரில் போதையேற்றிய தண்ணிரை(!!!!!??????) முழுவதுமாக அடித்துவிட்டு தனக்குப் பிடித்த உற்சாகப் பெண்களையோ, நடிகைகளையோ அழைத்துக் கொண்டுபோய் அடுத்த மேட்ச்சுக்கு தயாராகும் கேலவமான செயல் நடை பெறுவதும் இந்த ஐ.பி.எல் மேட்சில்தான். இது Indian Premier League-க்கா அல்லது International Prostitution League-க்கா என்று என்று கேட்கும் அளவிற்கு மது/மாது-வை மட்டும் தலைமைப் போட்டியாளர்களாக களமிறக்கி விபச்சாரத்தையும் இன்ன பிற அநாச்சாரங்களையும் அரசின் ஆசிர்வாதத்துடன் மேடை போட்டு கோலாகலமாக நடத்திக் கொண்டு இருக்கின்றது இந்த ஐ.பி.எல். இதன் இன்னபிற திரைக்குப்பின் நடக்கும் விசயங்களை எழுத ஆரம்பித்தால்..தொடர்தான் போட வேண்டி வரும். ஆனால் அன்சாரி மாமாவின் தொடர்போல் இது அறிவிற்கு விருந்து தராத விசயம் என்பதால் இத்தோடு முடித்துக் கொள்வோம்

ஐ.பி.எல். இது உறங்குபவனை உசுப்பிவிட்டு ஊளையிட வைக்கிறது, படிப்பவனை பள்ளம் தோண்டி பாய்ந்திட வைக்கிறது, வேலைக்குச் சென்றவனை வேண்டியவன் போல் துரத்தி துரத்தி இழுக்கிறது.

இதில் மின்சாரம் பற்றாக் குறை !? இருளில் இந்திய குடிமக்கள் இரவு வெளிச்சத்தில் இந்த குடி மக்கள்.

விளக்கு புடிச்சுதான் விளையடனும்னு அப்படி என்னதாங்க தலையெழுத்து !?

இந்த விளையாட்டுக்கு செலவு செய்ததை பரீட்சை நேரத்தில் எத்தனை வீடுகளில் விளக்கு இல்லாமல் மாணவர்கள் தவித்தார்கள் அந்த வீடுகளுக்கு இப்படி இலவச மின்சாரம் கொடுத்திருந்தால் கல்விக்கு விளக்கு போட்ட புன்னியமாவது கிடைத்திருக்குமே !

இதனையெல்லாம் பார்க்கும்பொழுது இக்காலத் தலைமுறைக்கு இதுதான் நல்லது / கெட்டது என்று சொல்லிக் கொடுக்கத்தான் ஆளில்லை, ஆனால் கெட்டவிசயங்களை நல்லது போன்று காட்டும் செயல்களை ஊக்கபடுத்தாமல் இருப்பார்களா இந்த கயவர்கள்.

சிந்தனையும், ஆக்கமும்...

-முகமது யாசிர்

http://ping.fm/HXMNh --


ALAVUDEEN

No comments: