Thursday, July 26, 2012

இஸ்லாமிய வழிகாட்டி மையம் (IGC) யின் ரமளான் மாத சிறப்பு நிகழ்ச்சிகள் - 2012


எல்லாம் வல்ல ஏகனின் அளப்பெறும் கிருபையால், ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தால் ஏற்பாடு செய்யப்படக் கூடிய ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள் இந்த வருடமும் மங்காஃப் பகுதியில் உள்ள ஓர் உள் அரங்கில் ஏற்பாடு செய்யபட்டு இனிதே நடந்து வருகிறது . அல்ஹம்துலில்லாஹ் ..,

இஷா தொழுகைக்கு பாங்கு சொல்லி நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. தொழுகையில் குர்ஆன் ஓதுவது இனிமையான குரல் மற்றும் தஜ்வீத் அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கதில் எகிப்தை சேர்ந்த ஹாஃபிள்களை கொண்டு இஷா தொழுகை மற்றும் இரவுத் தொழுகை நடத்தபடுகிறது. நான்கு ஹாஃபிழ்கள் மாறி மாறி அவர்களுக்கே உரிய குரலில், தஜ்வீதுடன் குர்ஆனை ஒதும் போது, கேட்க கூடியவர்களுக்கு நிச்சயமாக ஈடுபாடுடன் கூடிய தொழுகை அமைவதற்க்கு ஒரு முக்கிய தூண்டுதலாக கிராஅத்கள் இருக்கிறது என்றாள் மிகையில்லை. அல்ஹம்துலில்லாஹ்

நேற்றைய முன்தினம் இந்தியாவிலிறிந்து வருகை தந்திருக்கும் மௌலவி அப்துல் காதர் மன்பயி அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பின் கீழ் ரத்தின சுருக்கமான ஓர் உரையை நிகழ்தினார்கள்.

இறையச்சம் தான் ஈமானின் அஸ்திவாரம் என்பதை விளக்கி !

இறையச்சத்தை அதிகரித்து கொள்ள என்ன செய்யவேண்டும் ?

தவறுகளிருந்து விடுபட நாம் செய்ய வேண்டியவைகள் என்ன ?

நம் குடும்பதினர்களை தவறுகளில் விழ வைக்க நாமே எப்படி சூழ்நிலையை அமைத்து தருகிறோம் !

சஹாபா பெருமக்கள் எப்படி தங்கள் இறையச்சதை வளர்த்து கொள்வதற்க்கு என்ன செய்தார்கள் !!


என்ற அடிப்படையில் அவர்களுடைய உரை, ஓர் வித்தியாசமான கோணத்தில் இருந்தது. உரை செவிமடுத்தவர்களின் கண்கள் கலங்க கூடிய வகையில், உள்ளத்தை தொட்டு விட கூடிய வகையில் அவர்களுடைய உரை அமைந்திருந்த்து. அல்ஹம்துலில்லாஹ்...


இன்ஷா அல்லாஹ் மௌலவி அப்துல் காதர் மன்பயிஅவர்களுடைய உரைகள் தொடர்ந்து நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு இறைவனின் அருளை பெற அன்புடன் இஸ்லாமிய வழி காட்டி மையம் அழைக்கிறது.

நிகழ்ச்சி நடக்கும் இடத்தை அறிய, தொடர்புக்கு :

65658461 / 69696783 / 66868270

மக்களை ஆர்வமூட்டுவதர்க்காக தான் இங்கு இவ்விசயங்கள் பகிர்ந்து கொள்ளபடுகிறது மாற்றமாக வேறு எந்த காரணமும் அல்ல. அல்லாஹ் நம் அனைவரையும் நன்மையின் பக்கம் செலுத்துவானாக ! ஆமீன் !

நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள் 31 :8

"(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைகாரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். 32 :15


--
With Best Regards,
Umar Farook

ஒரு மூஃமினை சபிப்பது அவனை கொலை செய்வதைப் போன்றதாகும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆபூஜைத் (ரலி) புகாரி, முஸ்லிம்

அதிகம் சபிப்பவர்கள் ‘மறுமை நாளில்” பரிந்துரை செய்பவர்களாகவோ ஷஹீத்களாகவோ இருக்கமாட்டார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ

‘ஒரு முஃமின் திட்டுபவனாகவோ: சபிப்பவனாகவோ: கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ



__._,_.___

No comments: