அதிசய வேர்!
அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஒரு வேர் விறுவிறுப்பாக விற்பனையாகிறது. அதன் பெயர், ஜின்செங். இது சீனாவில் உற்பத்தியாகிறது.
இந்த வேரை அரைத்துக் குடிக்கிறார்கள். மாத்திரை, கேப்ஸ்யூல் ஆக்கி விழுங்கு
கிறார்கள். தேனீர், காபியில் கலந்து பருகுகிறார்கள். மதுபானத்தில் சேர்த்துக் குடிக்கிறார்கள். சோப்பிலும் சேர்த்து உடம்பில் தேய்த்துக் குளிக்கிறார்கள்.
காரணம், ஜின்செங் ஆண்மைக் குறைவைப் போக்குகிறது. மலேரியா, இஸ்மோரியா, தலைவலி, கேன்சர், சாதாரண ஜலதோஷம் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக உள்ளது.
ஜின்செங் செடி 5 ஆயிரம் ஆண்டுகளாக சீனாவில் வளர்க்கப்படுகிறது.
1948-ல் இளம் ரஷ்ய விஞ்ஞானி ஒருவர், ஜின்செங் வேரை ராணுவ வீரர்களுக்குக் கொடுத்துப் பார்த்தார். உடனே அவர்கள் அதிகமான சுறுசுறுப்பு அடைந்து வேலை செய்தார்கள். அதிலிருந்து ஐரோப்பாவில் ஜின்செங் வேர் பிரபலமாகிவிட்டது. சமீப ஆண்டுகளில் பல கோடி ரூபாய்க்கு ஜின்செங் வேர்களை அமெரிக்கா வாங்கியுள்ளது.
ஜின்செங்கின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஆராய பல சர்வதேச மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும் சீன, கொரிய டாக்டர்கள், ஜின்செங் வேரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று இப்போதே அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.
படிப்புத் திறனையும், நினைவாற்றலையும் ஜின்செங் அதிகப்படுத்தி இருப்பதை அவர்கள் சோதனைகள் மூலம் நிலைநாட்டியிருக்கிறார்கள்.
நன்றி:செந்தில்வயல்.wordpress
Engr.Sulthan
No comments:
Post a Comment