Friday, July 20, 2012

நோக்கம்

தமிழில் கட்டற்ற கணிநுட்பம் தொடர்பான கருத்தாழம் மிக்க படைப்புகளை கொண்டு வருதல்

கட்டற்ற கணிநுட்பம் தொடர்பான கோட்பாடுகள் பரவிட வகை செய்தல்



தகுதி

கணிநுட்பத்தில் ஆர்வமுடைய எவருக்கும் வாய்ப்பு



கட்டுரையின் அமைப்பு

கட்டற்ற கணிநுட்பங்களை, தகுதரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும்

இருக்கும் நுட்பங்களின் அடுத்த பரிணாமமாய் அமைந்திருக்கலாம்

புதியதோர் கருத்தாக்கமாய் அமையலாம்



எதிர்பார்ப்புகள்

அனுப்பப்படும் படைப்புகளின் பதிப்புரிமம் கணியத்திற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். (கணியமானது http://ping.fm/HUUaD உரிமத்தின் கீழ் வெளியிடும்.)

கட்டுரையின் ஒரு பகுதியாக,

பதிப்புரிமம் அளிப்பு என்ற தலைப்பிட்டு கீழ்கண்ட உறுமொழிகள் அளிக்கப்பட வேண்டும.

கட்டுரை கணியத்திற்காக முதன் முதலில் படைக்கப்பட்டது என்று உறுதியளிக்கிறேன்

கட்டுரையை படைத்ததன் மூலம் எழும் பதிப்புரிமங்களை கணியத்திற்கு வழங்குகிறேன்



நெறிகள்

கட்டுரை 20 பக்கங்களுக்கு (A4) மிகாமல் .odt முறையில் அளிக்கப்படவேண்டும்.

மின்னெழுத்தின் அளவு 12 பயன்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15/08/2012

அனுப்பப்படவேண்டிய முகவரி: editor@kaniyam.com



கௌரவம்

சிறப்பான மூன்று கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு அக்ககட்டுரையாளருக்கு மென்விடுதலை நாளன்று (15/09/2012) கணியன் என்ற சிறப்புப் பட்டயமும் பரிசிலும் வழங்கப்படும்.

மேற்கொண்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வசதியாய் தேர்வு செய்யப்படும் ஏனைய கட்டுரைகளனைத்தும் கணியத்தில் வெளியிடப்பட்டு பராமரிக்கப்படும்.



ஆதரவாளர்கள்

இப்போட்டியை வெற்றிகரமாய் நடத்திட நேரமும் பொருளும் ஏனைய வசதிகளும் செய்து தர வல்ல ஆதரவாளர்கள் தேவைப் படுகிறார்கள்.

ஆர்வமிருக்கும் தனிநபர்பள் நிறுவனங்கள் nirvagi@kaniyam.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.




--
கணியத்திற்காக,
விக்னேஷ் நந்த குமார்
இணைய பரப்புரையாளர்

No comments: