Monday, July 30, 2012

சற்று இளைப்பாற தமிழ் நிழல் தேடிப் போவோம் வாங்க! பழமொழிகள் சில காண்போம்...
பழமொழிகள்

ச, சா, சி, சீ
சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால், பொன்பாளம் வந்தாலும் வரும்; மண்பாளம் வந்தாலும் வரும்!
சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?
சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா
சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் அளவு.
சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
சாண் ஏற முழம் சறுக்குகிறது.
சாது மிரண்டால் காடு கொள்ளாது.
சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.
சாகத்துணிந்தவனுக்கு வெள்ளம் தலை மேல் சாண் பொனாலென்ன? முழம் போனாலென்ன?
சித்திரை மாதத்து உழவு... பத்தரை மாற்றுத் தங்கம்
சித்திரையில் செல்வ மழை.
சிறுதுளி பெரு வெள்ளம்.
சிறுதுரும்பும் பல் குத்த உதவும்.
சிறுக சேர்த்து (கட்டி) பெருக வாழ்.
சு, சூ

சுக துக்கம் சுழல் சக்கரம்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
சுட்ட சட்டி அறியுமா சுவை.
சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.
சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே
சும்மா கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பதம் பார்த்தானாம்.
சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி. (சும்மா கிடக்குற சங்க ஊதி கெடுத்தானாம் பண்டாரி)
சும்மா மெல்லும் வாய்க்கு அவல் கிடைத்தாற் போல.......
சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.(வரம் கொடுக்க மாட்டான்)
சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.
சூடு மண்ட பூனை பாலை குடிக்காது.
சூதும் வாதும் வேதனை செய்யும்.
செ, சே, சை

செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?
செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
செத்த அன்றைக்கு வா என்றால் பத்து அன்றைக்கு வந்தானாம்.
செயவன திருந்தச் செய்.
செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
செருப்புக்கேற்றபடி காலை வெட்டுவரா?
செல்லமுத்துன வாழக்காய் புளியில்லாம அவிஞ்சுச்சாம்.
செல்லுமிடம் சினம் காக்க.
செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
செவிடன் காதில் சங்கு ஊதினால் போல!
செய்தவன் மனம் குன்றினால் ஐவினைப் பயனும் கெடும்.
சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
சேலையில் முள் விழுந்தாலும் முள்ளில் சேலை விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான்.
சேலை கட்டிய மாதரை நம்பாதே !
சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
சேற்றிலே செந்தாமரை போல.
சைகை அறியாதவன் சற்றும் அறியான்.
சொ, சோ

சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
சொல் அம்போ வில் அம்போ?
சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
சொல்வல்லவனை வெல்லல் அரிது.
சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..
சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.

Engr.Sulthan
__._,_.___

No comments: