Thursday, July 26, 2012

பாப்புலர் ஃப்ரண்டின் கல்வி உதவித்திட்டம்



புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கடந்த இருமாதங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற "பள்ளி செல்வோம்" பிரச்சாரத்தின் இறுதியாக பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் மாணவர்களுக்காக கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் தங்கள் மேற்படிப்பை தடையில்லாமல் தொடர்வதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இத்திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2012-2013 வருடத்தில் கல்லூரியில் இடம் பிடித்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேசிய அளவிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து இரண்டு வருடமாக பாப்புலர் ஃப்ரண்ட் செயல்படுத்தி வருகிறது.

வட்டியில்லாமல் கடன் உதவி வழங்கும் அடிப்படையில் இத்திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது படிப்பை முடித்து விட்டு பணிக்கு செல்லும் காலங்களில் சிறிய தவணை முறையில் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும். கல்வி உதவித்தொகையினை கடனாக கொடுப்பதின் காரணத்தால் சிலர் மட்டுமே பயனடைய முடியும். அதே சமயம் கடன் பெற்றவர்கள் தாங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்தும்போது பிறருக்கும் அதே போன்ற உதவியை செய்ய இயலும் என்ற அடிப்படையிலேயே உதவித்தொகைகள் கடனாக வழங்கப்படுகிறது.

பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கின்ற 10ஆம் வகுப்பு மற்றும் +2 படித்து முடித்த மாணவர்கள் மட்டுமே இதற்காக விண்ணப்பிக்க வேண்டும். இளநிலை கல்வி கற்கவும், தொழிற்துறை (டிப்ளமோ) கல்வி பயிலவும் இத்திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்கப்படும். முதுகலை (பிஜி) படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். கடன் உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து டவுண்லோடு செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த மாநில அலுவலகத்திற்கு வருகின்ற ஆகஸ்ட் 20ற்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Sl no.
State
Address
1
Rajasthan
256, Near PNB Muslim school, Moti Doongri Road, Jaipur, Rajasthan
2
West Bengal
Bhakuri village, PO Balaram pur , Bahrampur, dist. Murshidabad
3
Manipur
Lilong bazaar Arapti Lamkhai, Thoubal District, Manipur
4
Andhra Pradesh
8-4-120/A1,2nd Floor,Bandlaguda,Chandrrayangutta,Hyderabad-500 005
5
Karnataka
No. 5, SK Garden, Benson Town, Bangalore, Karnataka
6
Tamilnadu
New184/old 229,second floor Lingi chetty street, Mannadi, Chennai 600001
7
Kerala
Unity House, Rajaji Road, Calicut, Kerala
8
All other states and union territories
G-66,2nd floor ,Shaheen Bagh ,Kalindikunj,Noida Road ,New Delhi-110 025

விண்ணப்பங்களை டவுண்லோடு செய்ய கிளிக் செய்யவும்

http://ping.fm/xoqlP

விண்ணப்பங்களை மேலே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். சென்ற ஆண்டைவிட 4 மடங்காக இந்த முறை தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இது அதிகரிக்கும் என நம்புகிறோம்.

கே.எம். ஷரீஃப்
தேசிய பொதுச்செயலாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
புதுடெல்லி
__._,_.___

No comments: