எங்கே மீடியாக்கள்...?
படப்பிடிப்பின் போது பிரபல நடிகைக்கு கால் சுளுக்கு....
நாட்டின் ஜனாதிபதி, குடும்பத்துடன் கோவா பயணம்...
ஏழு ஆண்டுகளாக காவல் துறைக்கு உழைத்த நாய் மரணம்...
மழை வேண்டி கழுதையை மனம் முடித்த வாலிபர்...
அழகிப் போட்டிக்கு பங்கு பெற முடியாத நடிகை கதறல்...
இன்னும்... இன்னும்...
சொல்லிக் கொண்டே போகலாம்
இன்றைய சூடான செய்திகள்.
இதையெல்லாம் சொல்லும் மீடியாக்கள்
பல்லாயிரக்கணக்கானோர் பர்மாவில்
கொலை செய்யப்படும் கொடூரத்தை
சொல்ல மறுக்கிறது அல்லது மறைக்கிறது...?
எங்கே மீடியாக்கள்...?
கண்ணுக்கெதிரே தன்னுடைய பிஞ்சுக்
குழந்தைகளும், கணவனும்
கொலை செய்யப்படுகிறார்கள்...
எங்கே மீடியாக்கள்...?
தாயின் கரங்களையும் குழந்தையின்
கரங்களையும் ஒன்றாக கட்டி
கடலிலே வீசப்படுகிறார்கள்...!
எங்கே மீடியாக்கள்...?
நாய் வேட்டையில் கூட
இத்தனை உடல்கள் இருக்காது.
மனித வேட்டையில்
குவியல் குவியலாக
பல்லாயிரக்கணக்கானோர்...
எங்கே மீடியாக்கள்...?
மீடியாக்களே..!
நாங்கள் நோன்பை துறக்கும் செய்தியை
காட்ட வேண்டாம்.
பர்மாவில் உயிரை துறக்கும் செய்தியை
காட்டுங்களேன்...!
இறைவா...!
உன்னிடம் முறையிடாமல்
வேறு யாரிடம் முறையிடுவது?
அவர்களுக்கு உரிய பாதுகாப்பை
கொடுப்பாயாக...!
அவர்களுக்கு மன தைரியத்தை
கொடுப்பாயாக...!
அவர்களுக்கு மறுமையில் சுவனத்தை
கொடுப்பாயாக...! ஆமீன்.
Source: http://ping.fm/JC3fd
--
ஷம்சுத்தீன்.
اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
__._,_.___
No comments:
Post a Comment