Wednesday, July 18, 2012

அன்புள்ளங்கொண்ட சகோதர சகோதரிகளுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும்!

பூமியெங்கும் வசந்த காலம் வந்து கொண்டிருக்கிறது. இதோ நம்மை நெருங்கியும் விட்டது. ஆம் ரமலான் எனும் வசந்த காலம் தான். இனி பூமி பூ பூக்கும். நோன்பு என்ற பூக்கள் மலரத் தொடங்கும்.அந்த வசந்த கால ரமலானின் வாசலில் காத்திருக்கும் அனைவர்களுக்கும் எனது ரமலான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி தினமும் நாம் சந்தித்து மகிழ்வோம் இணையம் வாயிலாக…குழுமங்கள் வாயிலாக. மின்னஞ்சல்கள் மூலமாக.

இந்த ரமலானில் “அருள் பொழியும் ரமலான்” எனும் நூல் ஒன்றை வெளியிட முயற்சி செய்து, இறைவன் அருளால் தற்போது அச்சகத்தில் அச்சிடும் பணியில் இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் ரமலான் 10க்குள் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். துவா செய்யுங்கள்.

எனது சொந்த பொறுப்பினில் ஸதக்கத்துல் ஜாரியா என்ற நிரந்தர நன்மையை நாடி இப் பணியினை செய்கிறேன். நண்பர்கள் அனைவரும் இந்த நிரந்தர நன்மையில் பங்கு கொள்ள வேண்டி ஒரு வேண்டுகோளினை உங்கள் முன் வைக்கிறேன்.

நோன்பின் காலங்களில் பலரும் பொதுவாக பள்ளி வாசல்களில் பல விதமாக ஹதியா செய்வதை வழக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் அப்படி ஹதியா செய்ய நாட்டமுள்ளவர்கள், இந்த நூலினை குறைந்தது 50,100 என மொத்தமாக வாங்கி பள்ளி வாசல்களில் விநியோகம் செய்யலாம். இதில் உண்மையில் நான் வேண்டுவது நம்மில் பலரும் இது போன்ற நிரந்தர நன்மையை இறைவனிடம் பெற வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே! பணத்திற்காகவோ எந்த லாப நோக்கம் கருதியோ அல்ல. 5,6 வருடங்களாக இறை நன்மையைத் தவிர வேறு எந்த சுய லாபம் கருதியோ நான் தாவாப் பணியினை செய்யவில்லை என்பது நம் சகோதரர்கள் பலருக்கும் தெரியும்.

ஆகவே இச்சேவையில் நாட்டமுள்ளவர்கள் தங்களுக்கு எவ்வளவு புத்தகங்கள் தேவைப்படுகிறதோ அதை குறிப்பிட்டு எங்கு அனுப்ப வேண்டும் (குறிப்பாக வெளிநாடு வாழ் சகோதரர்கள்) என்று முன்கூட்டியே தெரிவித்தால் அந்த அந்த முகவரிக்கு அனுப்பி விடுகிறேன். புத்தகங்களுக்கு உரிய பணத்தை கீழ்கண்ட எனது வங்கி கணக்குக்கு அனுப்பிவிட்டு எனக்கு தெரிவிக்கவும். புத்தகத்தின் விலை(ஹதியா) ரூ.30 மட்டுமே. (எந்த லாபமும் இன்றி) மேலும், இந்நூலில் உள்ள விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் ஏழை இஸ்லாமிய மாணவர்கள்( இதில் 2 இன்ஜீனியரிங் படிக்க போகும் மாணவிகளும் அடக்கம்) கல்வி செலவுக்காக கொடுக்க உத்தேசித்துள்ளேன்.

தொலைபேசி வாயிலாக இவ்விஷயம் அறிந்த ஒரு சில நெருங்கிய நண்பர்கள் இது வரை 400 புத்தகங்களுக்கு ஆர்டர் தந்திருக்கிறார்கள்(எல்லாப் புகழும் அவன் ஒருவனுக்கே) ஆகவே சகோதரர்கள் முன்கூட்டியே தங்களின் தேவைகளை தெரியப் படுத்தினால் அச்சிடும் இப்போதே தேவையான கூடுதல் பிரதிகள் அச்சிட ஏதுவாக இருக்கும்.

வரும் ரமலானில் அனைத்து சகோதரர்களும் இது போன்ற ஸதக்கத்துல் ஜாரியா போன்ற நன்மைகளைப் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டியவனாக,

உங்கள் சகோதரன்,

Engr.Sulthan

எனது செல்: 0091-9962060353

புத்தக விவரம்:

132 பக்கங்கள்(அட்டையுடன்)

18 கட்டுரைகள்.

வெளியிடுபவர்:குலசை சுல்தான்(Engr.Sulthan)

இளையநிலா பதிப்பகம் வாயிலாக.

வடிவமைப்பு(Dtp works) முகம்மது சாதிக், ஒட்டன் சத்திரம்

அச்சிடுவோர்: அன்றில் பதிப்பகம்,சென்னை

வங்கி விபரம்:

H.Mehar Sultan

Indian Bank,Harris Road Br, Chennai

SB.A/c No. 414362020

No comments: