Sunday, July 15, 2012

2012 ஜூலை 9ல் வெளியான தினத்தந்தி நாளிதழில் 'பெயருக்கு இயங்கும் அரசு தலைமை ஆஸ்பத்திரி' எனும் தலைப்பில் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நிலவும் சீர்கேடுகள் குறித்து படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது. இச்செய்தியுடன் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அவர்களை தொடர்புபடுத்தி 'பேராசிரியர் பெரிய மனது வைப்பாரா' என்ற தலைப்பிட்டு இணையத்தில் ஒரு செய்தியை சிலர் பதிந்துள்ளனர். இது குறித்து இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்படும் இணையதள செய்திக்குறிப்பு:

சட்டமன்ற உறுப்பினரின் கண்காணிப்பு:

இராமநாதபுரம் அரசு மருத்துவமனை உட்பட மாவட்டத்தின் குறிப்பாக தொகுதியின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்,தாலுகா மருத்துவமனைகள், துணை சுகாதார நிலையங்கள் (கிராமம்) போன்ற அனைத்து பொது சுகாதார நிலையங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தொடர்ந்து கண்காணித்து வருகிறார். மேற்கண்ட மருத்துவ மைய்ங்கள் குறித்த புகார்கள் அவ்வப்போது தனிநபர்கள்,பொதுநல அமைப்புகள் மூலமாகவும் நாளிதழ் செய்திகள் மூலமும் சட்டமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு வரும்பொழுது எவ்வித தாமதமும் இன்றி துரித நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

உடனடி நடவடிக்கை:

சுகாதார குறைபாடு,மற்றும் விஷக்காய்ச்சல் பரவுதல் போன்றவற்றால் அதிகமான மக்கள் பாதிக்கப்படும் சமயங்களில் சட்டமன்ற உறுப்பினரும் அவரின் நேர்முகச் செயலாளரும் சுகாதாரதுறை உயர் அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகின்றனர். இதன் மூலம் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதை பார்க்க முடிகிறது. இவ்வாறான தொலைபேசி அறிவுறுத்தல்கள் மட்டும் நூறுக்கும் அதிகமான முறை இதுவரை செய்யப்பட்டுள்ளது.

ஆய்வுகள்:

இராமேஸ்வரம்; தாலுகா மருத்துவமனை, கீழக்கரை அரசு மருத்துவமனை, பெரியபட்டணம் அரசு மருத்துவமனை மற்றும் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மண்டபம் இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள அரசு மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வுகள் மேற்கொண்டார். அங்கு நிலவிய சீர்கேடுகள் சரிசெய்யப்பட வேண்டும் என மருத்துவமனை அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

தொகுதி நிதியில் மருத்துவமனை மேம்பாடு:

இராமேஸ்வரம் தாலுகா மருத்துவமனையில் மழைக்காலங்களில் மருத்துவமனையின் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு செல்லமுடியாத அளவு மழைநீர் தேங்கி நிற்கும் நிலையை நேரில் ஆய்வு செய்து மருத்துவமனை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க இரு கட்டடங்களை இணைக்க காங்க்ரீட் தளம் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் ஆணையிட்டார். இதற்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7- லட்சம் நிதி ஒதுக்கி தளம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

சட்டமன்றத்தில் மருத்துவ தரம் உயர கோரிக்கை:

தேவை மருத்துவ கல்லூரி: 2011-2012 நிதிநிலை அறிக்கையின்போது 2011 ஆகஸ்ட் 11ம் தேதி இராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சட்டமன்ற உறுப்பினரால் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது.

2012-2013 நிதிநிலை அறிக்கையின் போதும் 2012 ஏப்ரல் 3ம் தேதி மருத்துவ கல்லூரி தேவை என்ற கோரிக்கையை சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது.

உயிர்காக்கும் மருத்துவ பிரிவு தேவை:

ட்ராமா கேர் எனப்படும் தலைக்காய சிகிச்சைப்பிரிவு இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் சட்டமன்ற உறுப்பினர் 03.04.2012 அன்று சட்டமன்றத்தில் எழுப்பினார்.

நரம்பியல் நிபுணர் தேவை:

நியூரோ சர்ஜன் எனப்படும் நரம்பியல் நிபுணர் இராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் 03.0402012 அன்று சட்டமன்றத்தில் எழுப்பினார்.

ஸ்கேன் கருவி பழுது குறித்து:

இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பழுதுபட்ட நிலையிலுள்ள ஸ்கேன் கருவி குறித்து மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். சட்டமன்ற உறுப்பினரின் தொடர் நடவடிக்கை காரணமாக விரைவில் புதிய ஸ்கேன் கருவி பொருத்தப்படவுள்ளது.

மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு:

பல்வேறு நடவடிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சியரை சந்திக்கும் பொழுதெல்லாம் மருத்துவமனைகள் மேம்பாடு குறித்தும் ஆட்சியரிடம்
வலியுறுத்தி வருகிறார். சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை படி கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு பெண் மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

அதிகாரிகளுக்கு கடிதங்கள்:

இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் திறக்கப்படாத புதிய கட்டடங்கள் குறித்தும்
ஸ்கேன் கருவி பழுது குறித்தும்
ஸ்கேன் அறையில் ஏசி வசதி ஏற்படுத்தவும்
சட்டமன்ற உறுப்பினரால் உயர் அதிகாரிகளுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் இணைப்பில் உள்ளன.

மருத்துவ முகாம்கள்:

சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் தொகுதியில் கீழக்கரை,இராமேஸ்வரம்,இராமநாதபுரம்,திருப்புல்லாணி ஆகிய இடங்களில் த.மு.மு.க. சார்பில் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பலநூறு பேர் இதில் பயனடைந்துள்ளனர்.

இப்படிக்கு
செ.தாஹிர் சைபுதீன்
சட்டமன்ற உறுப்பினரின் நேர்முகச் செயலாளர்
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம,; டி-பிளாக்
இராமநாதபுரம்.

--
Imtheyaz Bukhari
+966560477730
Dammam - Saudi Arabia

No comments: