இறால் பக்கோடா
· தேவையான பொருட்கள்
இறால் - கால் கிலோ
கடலை மாவு – 2 கப்
அரிசிமாவு – 1 கப்
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
மிளகாத் தூள்- அரை டே.ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டே.ஸ்பூன்
சோம்பு - கால் டே.ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொறிப்பதற்கு
செய்முறை:
இறாலை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாய் வெட்டிக் கொள்ளவும்..
பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய இறால், பொடியாக நறுக்கிய ப.மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு இவைகளை ஒன்றாக கலந்து, கடலை மாவு, அரிசிமாவு, மிளகாத் தூள், மஞ்சள் தூள், உப்பு, சிறிது சூடாக்கப்பட்ட எண்ணெய் இவற்றை சேர்த்து, தேவையான அளவு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, மாவு உதிரியாக வரும் அளவுக்கு பிசறி வைக்கவும்.
சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பக்கோடாவை உதிர்த்து போட்டு, பிரட்டி பொன்நிறமாக வந்ததும் எடுக்கவும்.
ருசியான இறால் பக்கோடா ரெடி.
நோன்பு திறக்கும் போது வடைக்கு மாற்றாக இதை சாப்பிடலாம்.
குறிப்புகள்:மெஹர் சுல்தான்
No comments:
Post a Comment