Monday, July 30, 2012

சூப்பர் பாயா

(படம்: நன்றி என் இனிய இல்லம்)

தேவையான பொருட்கள்

• ஆட்டுக்கால் – 4

• வெங்காயம் - 2 (பெரியது)

• தக்காளி - 2 (பெரியது)

• இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

• கரம் மசாலா - கால் தேக்கரண்டி

• மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி

• சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி

• மல்லித்தூள் - 3 தேக்கரண்டி

• மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி

• மிளகாத் தூள் - ஒரு தேக்கரண்டி

• பச்சை மிளகாய் - 2

• கொத்தமல்லி,கறிவேப்பிலை - கொஞ்சம்

• துறுவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி

• முந்திரி பருப்பு - கொஞ்சம்

• மைதா மாவு - 2 மேசைக்கரண்டி

• எண்ணெய்,உப்பு – தேவைக்கு

செய்முறை:

வெங்காயம், தக்காளி, கொத்த மல்லியை நறுக்கி கொள்ளவும். தேங்காய் மற்றும் முந்திரிப்பருப்பை நன்றாக விழுதாக அரைத்து வைக்கவும்.
துண்டுகளாக நறுக்கிய (ஒரு காலை மூன்றாக வெட்டலாம்.கடைக் காரரே வெட்டிக் கொடுப்பார்) ஆட்டுக்காலை கழுவி குக்கரில் போட்டு நறுக்கின வெங்காயம், தக்காளி, மல்லிக்கீரை, மசாலாத்தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதி வந்த பின்பு குக்கரை மூடி வெயிட் போட்டு 4-5 விசில் வந்த பின்பு அடுப்பை குறைத்து வைக்கவும். குறைந்தது அரை மணி நேரமாவது வேக விட வேண்டும்.கால் நன்கு வெந்ததும் அதனுடன் அரைத்த தேங்காய், முந்திரிபருப்பு விழுதை சேர்க்கவும்.
சிம்மில் வைத்து கால் மணி நேரம் கொதிக்க விடவும்.தேங்காயின் பச்சை வாடை போனதும் குழம்பு கொஞ்சம் கெட்டியாக கொழ கொழ பருவத்தில் இருக்கும்.
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலையை வதக்கி கொட்டவும்
சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி.
இதை இடியாப்பம், ஆப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆஹா அமிர்தமாக சுவைக்கும். நோன்பு காலங்களில் இடியாப்பம்,ஆப்பம் போன்றவைகளை வீட்டில் செய்வது சற்று சிரமமாகத் தோன்றும். தரமான ரெடிமேட் இடியாப்பம் இப்போது எல்லா இடங்களிலும் கிடைக்கிரது. அதனை வாங்கி உபயோகித்துக் கொள்ளலாம்.
குறிப்புகள்: மெஹர் சுல்தான்

Engr.Sulthan

No comments: