ஈரான் அணு விஞ்ஞானிகளை கொலைச்செய்தது மொஸாத்: நூலில் தகவல்!
டெஹ்ரான்:ஈரான் அணுசக்தி திட்டத்திற்கு தடைபோட இஸ்ரேலின் மொசாத் நான்கு ஈரானிய அணு விஞ்ஞானிகளை கொலைச் செய்த சம்பவம் சி.பி.எஸ் சேனல் ரிப்போர்டர் டான் ராவிவ், இஸ்ரேலிய பத்திரிகையாளர் யோஸி மெல்மான் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“Spies Against Armageddon: Inside Israel’sSecret Wars.”- என்ற நூலில் மெல்மானும், ராவிவும் ஈரான் அணு விஞ்ஞானிகளின் கொலைகள் இஸ்ரேலின் மொசாதுடைய சிறப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும் என கூறுகின்றனர்.
அணு விஞ்ஞானிகளை கொலைச்செய்ய ஈரானின் கிளர்ச்சியாளர்களின் உதவியை மொசாத் பெற்றிருக்கலாம் என்றாலும் மொசாதே இக்கொலைகளை நடத்த நேரடியாக தலைமை தாங்கியது என்று அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அணு விஞ்ஞானிகளான முஸ்தஃபா அஹ்மதி ரோஷன், தாரியுஷ் ரிஸாஇ நஜாத், பேராசிரியர் மாஜித் ஸஹரியாரி, பேராசிரியர் மஸூத் அலிமுஹம்மதி ஆகியோரின் கொலைகளின் பின்னணியில் மொசாத் செயல்பட்டுள்ளது என்று ஈரான் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதனை உறுதிச்செய்யும் வகையில் தற்பொழுது வெளியான புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
Source: http://ping.fm/5xViR
__._,_.___
No comments:
Post a Comment