ரமலான் மாதத்தில் உங்களுடைய நாள்..?
இஸ்லாம்— 10 July 2012 | 15 Views
Share
email
print
Digg Digg
புனித ரமளான் மாதத்தைப் பயனுள்ள வகையில்
கழிக்கவேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர்.
மற்ற நாட்களைமாற்றமான வழியில் கழிப்பவர்கள்கூட,
நோன்பு நாட்களைக்கண்ணியமான முறையில்
செலவிட வேண்டும் என்றுஎண்ணுகின்றனர்.
ரமளான் மாதத்தின் பகல்பொழுதையும்
இரவுநேரத்தையும் வணக்கவழிபாடுகளில்
செலவழிக்கவேண்டும் என்பது மட்டும்எல்லாருக்கும் தெரியும்.
எந்த வழிபாடுகள்என்பதோ, அந்தவழிபாடுகளை
எந்தநேரத்தில், எந்தவரிசைப்படி
நிறைவேற்றவேண்டும் என்பதோ
பெரும்பாலோருக்குத்தெரிவதில்லை.
எனவே, ரமளான் மாதத்திற்கு ஒரு கால
அட்டவணை இருந்தால்கடைப்பிடிக்க
இலகுவாக இருக்கும் என்பது பலரது எதிர்பார்ப்பு.
அந்தஅட்டவணை ஏன் கீழ்க்கண்டவாறு
இருக்கக் கூடாது?
சிந்தியுங்கள்!செயல்படுங்கள்!
புனித ரமளான் வழிபாடுகளில் உண்ணா நோன்பு முதலிடத்தைப்பெறுகிறது. அடுத்து தொழுகை.
தொழுகையில் கடமையானதொழுகையும் உண்டு;
கூடுதல் தொழுகையும் உண்டு. அடுத்து குர்ஆன் ஓதுதல்,
திக்ர் செய்தல், துஆ, தானதர்மங்கள் (ஸதகா) என வழிபாடுகள் அணிவகுக்கின்றன.
நள்ளிரவு வழிபாடு
நோன்பாளிகள் சஹர் உணவு உட்கொள்வதற்காகப் பின்னிரவில் உறக்கத்திலிருந்து விழிப்பது வழக்கம்.சற்று முன்கூட்டியே எழுந்தால்,அபரிமிதமான நன்மைகளைப் பெற்றுத்தரும்
வழிபாடுகளை மேற்கொள்ளலாம். தமிழகத்தைப்
பொருத்தவரையில் நள்ளிரவு 2 மணிக்கு எழுவது பொருத்தமாயிருக்கும்.
தஹஜ்ஜுத்
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது
மக்களுக்குச் சொன்ன முதலாவது அறிவுரை இதுதான்:
மக்களே!சலாம் எனும் முகமனைப் பரப்புங்கள்!
பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்!மக்களெல்லாம்
உறங்கும்போது (நீங்கள்விழித்திருந்து) தொழுங்கள்! சொர்க்கத்தில்சுகமாக நுழைவீர்கள். (திர்மிதீ)
எனவே, நள்ளிரவு இரண்டு மணிக்கு எழுந்து அங்கத் தூய்மை (உளூ)செய்து ‘தஹஜ்ஜுத்’ எனும்
இரவுத் தொழுகை தொழ வேண்டும்.
இரண்டிரண்டு ரக்அத்களாக எட்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.அவரவருக்குத் தெரிந்த
குர்ஆன் அத்தியாயங்களை ஓதித் தொழலாம்.
எனினும், ருகூஉவில் வழக்கமாக
ஓதும் தஸ்பீஹுடன் பின்வரும்தஸ்பீஹையும்
சேர்த்து ஓதுவது நல்லது.
سُبْحَانَكَ اللّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ ، اَللّهُمَّ اغْفِرْ لِيْ.
சுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக்க அல்லாஹும்மஃக்ஃபிர் லீ.
பொருள்: இறைவனே! எங்கள் அதிபதியே! உன்னைப்
போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக.(ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 60, தஸ்பீஹ் எண் - 34)
அவ்வாறே, ருகூஉவிலிருந்து எழும்போது வழக்கமாகச்
சொல்லும்سَمِعَ الله لِمَنْ حَمِدَهْஉடன்
رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ، حَمْداً كَثِيْراً طَيِّباً مُّبَارَكاً فِيْهِ.
ரப்பனா வ லக்கல் ஹம்து, ஹம்தன் கஸீரன் தய்யிபன்
முபாரகன் ஃபீஹி.
எனும் புகழ்மாலையையும் சேர்த்து ஓத வேண்டும்.
பொருள்: எங்கள் இறைவா! தூய்மையும் வளமும் வாய்ந்த
அதிகமான புகழனைத்தும் உனக்கே உரியவை. (ஹிஸ்னுல் முஸ்லிம்,பக்கம் – 62, துஆ எண் - 39)
அவ்வாறே, சஜ்தாவில் வழக்கமான தஸ்பீஹ் ஓதியபின்…
سُبْحَانَكَ اللّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ ، اَللّهُمَّ اغْفِرْ لِيْ.
சுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக்க அல்லாஹும்மஃக்ஃபிர் லீ.
பொருள்: எங்கள் இறைவா! தூய்மையும் வளமும் வாய்ந்த
அதிகமான புகழனைத்தும் உனக்கே உரியவை. (ஹிஸ்னுல் முஸ்லிம்,பக்கம் – 64, தஸ்பீஹ் எண் - 42)
இரு சஜ்தாக்களுக்கிடையே…
اَللّهُمَّ اغْفِرْ لِيْ ، وَارْحَمْنِيْ ،وَاهْدِنِيْ ، وَاجْبُرْنِيْ، وَعَافِنِيْ ، وَارْزُقْنِيْ ، وَارْفَعْنِيْ.
அல்லாஹும்மஃக்ஃபிர் லீ, வர்ஹம்னீ, வஹ்தினீ, வஜ்புர்னீ, வ ஆஃபினீ, வர்ஸுக்னீ, வர்ஃபஉனீ.
பொருள்: இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக. எனக்கு அருள் புரிவாயாக. என்னை நல்வழியில் செலுத்துவாயாக. எனக்கு ஏற்படுகின்ற சோதனைகளை நிவர்த்திப்பாயாக.
எனக்கு விமோசனம் வழங்குவாயாக. எனக்கு வாழ்வாதாரம் வழங்குவாயாக. என்னை மேலோங்கச் செய்வாயாக.
(ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 67, துஆ எண் - 49)
தொழுகை அமர்வில், அத்தஹிய்யாத், வழக்கமான
ஸலவாத் ஆகியவற்றை ஓதியபின் பின்வரும்
துஆக்கள் ஓதுவது கூடுதல் பலன்தரும்:
اَللّهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْماً كَثِيْراً ، وَّلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ ،
فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيْمُ.
அல்லாஹும்ம இன்னீ ளலம்த்து நஃப்சீ ளுல்மன் கஸீரா,
வ லா யஃக்ஃபிருத் துனூப
இல்லா அன்த்த, ஃபஃக்ஃபிர் லீ மஃக்ஃபிரத்தம் மின் இன்திக்க வர்ஹம்னீ
இன்னக்க அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம்.
பொருள்: இறைவா! எனக்கு நானே வெகுவாக அநீதி இழைத்துக்கொண்டேன். உன்னைத் தவிர வேறு யாரும்
பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே, உன் தரப்பிலிருந்து
எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக. எனக்கு அருள் புரிவாயாக. நிச்சயமாக நீயே மிகவும் மன்னிப்போனும் மிகுந்த
கருணையாளனும் ஆவாய்.
(ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 73, துஆ எண் - 57)
اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ،
وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ، اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ.
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி,
வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மசீஹித் தஜ்ஜால்,
வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்தி, அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் மஅஸமி வல்மஃக்ரம்.
பொருள்: இறைவா! அடக்கத் தலத்தின் (கப்றின்)
வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். (மாபெரும் குழப்பவாதியான) மசீஹுத் தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோரு கிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் நான்
பாதுகாப்புக் கோருகிறேன்.
(ஹிஸ்னுல்முஸ்லிம், பக்கம் – 72, துஆ எண் - 56)
اَللّهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ
وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لاَ إِلهِ إِلاَّ أَنْتَ.
அல்லாஹும்மஃக்ஃபிர் லீ மா கத்தம்த்து, வ மா அக்கர்த்து,
வ மா அஸ்ரர்த்து,
வ மா அஅலன்த்து, வ மா அஸ்ரஃப்த்து, வ மா அன்த்த
அஅலமு பிஹி மின்னீ,
அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு, லா இலாஹ
இல்லா அன்த்த.
பொருள்: இறைவா! நான் முந்திச் செய்த, பிந்திச்
செய்(ய இருக்)கிற, இரகசியமாகச் செய்த,பகிரங்கமாகச் செய்த,
வரம்பு மீறிச் செய்த, என்னைவிட நீ அறிந்துள்ள (இன்ன பிற)
பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக.
நீயே முன்னேறச் செய்பவன்.
நீயே பின்னடைவைத் தருபவன்.
உன்னைத் தவிர வேறு யாரும் இறைவன் இல்லை.
(ஹிஸ்னுல் முஸ்லிம்,பக்கம் – 74, துஆ எண் - 58)
திக்ர்
அடுத்து திக்ர் மற்றும் தஸ்பீஹ் ஓத வேண்டும். “அல்லாஹ்வை
திக்ர் செய்வதால் உள்ளங்கள் அமைதியடைகின்றன”
(13:28) என்கிறது திருக்குர்ஆன். உங்களுக்குத் தெரிந்த
திக்ருகளை ஓதலாம்; இருந்தாலும், நபிமொழிகளில்
இடம்பெற்றுள்ள திக்ருகளே சிறப்புக்குரியவை ஆகும்.
பின்வரும் திக்ருகள் நபிமொழிகளில் இடம்பெற்றவையாக
இருப்பதால் இவற்றை ஓதிவாருங்கள்:
سُبْحَانَ الله(33) சுப்ஹானல்லாஹ் (33) - அல்லாஹ் தூயவன்
وَالْحَمْدُ لله(33) அல்ஹம்து லில்லாஹ் (33) - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
وَالله أَكْبَرُ (33) அல்லாஹு அக்பர் (33) - அல்லாஹ் மிகப் பெரியவன்.
أَسْتَغْفِرُ الله (100) அஸ்தஃக்ஃபிருல்லாஹ் (100) - அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்.
لاَ إِلهَ إِلاَّ الله وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ ،
لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْر.
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு,லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து,
வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.
பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. அவன் ஏகன். அவனுக்கு இணையானவன் யாருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியன. அவன் அனைத்துப் பொருட்கள்மீதும் ஆற்றல் உள்ளவன்.
(ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 84, துஆ எண் - 69)
اَللّهُمَّ أَنْتَ رَبِّيْ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ
وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ
عَليَّ وَأَبُوْءُ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ.
அல்லாஹும்ம அன்த்த ரப்பீ லா இலாஹ இல்லா அன்த்த,கலக்த்தனீ வ அன அப்துக்க,
வ அன அலா அஹ்திக்க வ வஅதிக்க மஸ்த்ததஅத்து, அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஉத்து
தொகுப்பு: மௌலவி அ. முஹம்மது கான் பாகவி, மேலாய்வாளார், ரஹ்மத் அறக்கட்டளை, சென்னை.
No comments:
Post a Comment