http://ping.fm/Y3Cyh
அஹ்மதாபாத்: குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை, கொடூரமாக படுகொலைச் செய்வதற்காக, மோடி அரசு சதித்திட்டம் தீட்டி, நடைமுறைப்படுத்திய கோத்ரா ரெயில் தீ விபத்து நிகழ்ந்து, 10 ஆண்டுகள் நிறைவுறுகிறது.
அயோத்தியில் இருந்து வந்துகொண்டிருந்த, சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 5 மற்றும் 6 எண் பெட்டிகளில் பயணித்த 59 பயணிகள் 2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கோத்ராவில் தீவைத்து கொளுத்தப்பட்டு பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து, குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் போலீசின் துணையுடன், சங்க்பரிவார ஹிந்துத்துவா பயங்கரவாதிகள், இந்திய வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக கொலைச் செய்தனர். கோத்ரா சம்பவத்தின் பின்னணியில், மோடியும் அவருடைய அமைச்சரவை சகாக்களும்தான் காரணம் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்தன. கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு நடந்த, உயர் மட்ட கூட்டத்தில், ஹிந்துக்களை அவர்களிடன் கோபத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும், என்று மோடி கூறியதாக கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஐ.பி.எஸ், மூத்த அதிகாரி சஞ்சீவ் பட், உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.
ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொடூரமாக படுகொலைச் செய்யப்பட்ட, குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து, 10 ஆண்டுகள் கழிந்த பிறகு, ஒரு சில வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வெளியாகியுள்ளன. இனப் படுகொலை குறித்து விசாரணை நடத்த, குஜராத் அரசு நியமித்த நானாவதி கமிஷனின் அறிக்கை இதுவரை வெளியாகவில்லை. நரேந்திர மோடியின் அக்கிரமங்களை, அன்றைக்கு மத்தியில் பிரதமராக இருந்த அவரது கட்சியின், வாஜ்பேயி அவர்களும் கூட கண்டித்தார். நீங்கள் ஒரு முதலமைச்சர் என்ற முறையில், ராஜ தர்மத்துடன் நடந்து கொள்ளுங்கள் என்று கட்டளை பிறப்பித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மோடியை அன்றைக்கு "மரண வியாபாரி" என்றழைத்தார். இத்தனைக்கும் பிறகு, இன்று, அவரை காப்பாற்றும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. ஒன்று மட்டும் நிச்சயம், நரேந்திர மோடியை தண்டிக்க இந்திய சட்டங்கள் தவறினால்? அது எதிர்கால இந்தியாவிற்கு நன்மை பயக்காது.
http://ping.fm/ufgYC
--
No comments:
Post a Comment