Tuesday, February 14, 2012

ssalamu Alaikum Brs,

Now a days, our most of brothers drive very fast in the bike, Reason is, to reach correct time.............
This is very dangerous, Pls drive slow and safely.
Some of brothers drive fast with wife and children, Terrible

While driving with speaking mobile is very dangerous,
While driving seeing mobile, answering mobile, talking with friends, all are very dangerous.

Shahjahan
வேகம் விவேகமா?

அதிரை-நிருபர்-குழு
தம்பி, வேகம் குறை…
விரட்டுவதுவிதியாகக் கூட இருக்கலாம்

உன் பைக்கில்உருள்வது சக்கரங்களா ?
சாவின் கரங்களா ?
மழை நனைத்த சாலையும்மணல் நிறைந்த பாதையும்திறன் மிகுந்த யாரையும்புரட்டிவிடும் சருக்கியே



உலகாள்பவன் உனக்களித்த உடலுறுப்புகளை ஊனமாக்காதே
பேணிப் பாதுகாக்கும் புலண்களை ஊமையாக்காதே
காதில் கேட்பதற்காககை பேசியை கழுத்தில் வைக்கும்போது அதுஅலைபேசியல்ல
அன்பரே அரிவாளென்று அறிதீ சுடுமென்றோ
தீயவை கெடுக்குமென்றோசொல்லித் தெரிவதோ அறிவுவிபத்தின் விபரீதம்

விளங்காதா உனக்குமுழங்கைமூட்டு பிறழ்ந்தவன்
முழுக்கை யுடைந்தவன்முகத்தில் தழும்பு படைத்தவன்
நடை குலைந்தவன் நொண்டி நடப்பவன் என எத்தனை ஆதாரங்கள் போதாதென்று அகால மரணங்கள்....

பெற்ற தாயை பேதலிக்கவிட்டுப் போய்ச்சேர்ந்தவர்கட்டிய
மனைவியின் காத்திருப்பை நிரந்தரமாக்கி கண்மூடியவர்
நண்பர்களை விட்டோ சேர்ந்தோநீள் துயில் கொண்டவர்
பேர் வைத்தப் பிள்ளைகளைபாரில் தவிக்கவிட்டு -

இறுதிஊர் போய்ச் சேர்ந்தவர்தொலைதூரப் பயணத்தை
இரு சக்கரத்தில் கடந்தால் தமிழ்நாட்டுச் சாலைகள்
தண்டுவடத் தட்டுகளைமென்றுவிடும்
தம்பிவாழ்க்கையில் முந்துவளைவுகளில் முந்தாதேதொழிலில்
காட்டு தோரணையை தெருவில் காட்டாதே
விவேகத்தைக் காட்டுவேகத்தைக் கூட்டாதே

உனக்காகக் காத்திருப்பவைகளை உணராமல்
நீ காத்திருக்கும் மரணத்தைஎட்டிப் பிடிக்க
ஏன் இந்த வேகம்
வேகம் குறை
விரட்டுவது விதியாகக் கூட இருக்கலாம்

.-சபீர்
http://ping.fm/VmVVn

No comments: