ஏகஇறைவனின் திருப்பெயரால்....
எங்க அப்பன் பாட்டன் காலத்திற்கு முந்தையது குஜராத் மதக்கலவரம். -மோடி
ஆடத் தெரியாதவளுக்கு முற்றம் கோணல்.
ஒருத் தொன்மை வாய்ந்த பாரம்பரியமிக்கக் கலாச்சாரத்தைப் பற்றிக் குறிப்பிடுவதைப்போல் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் தான் ஆட்சி செய்த பொழுது உலகமே காரி உமிழ்ந்த வரலாறு காணாத இனச் சுத்திகரிப்பை திட்டமிட்டு நடத்தப்பட்டப் படுகொலைகளை இதைப் போன்று எங்க அப்பன் பாட்டன் காலத்திற்கு முன்பிருந்தே நடந்து வருகிறது இது குஜராத்துக்கு புதிதல்ல அதனால் இது ஒரு மேட்டரே அல்ல என்று எஸ்.டி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவினரிடம் மோடிக் கூறி இருக்கிறார். 1714 லிருந்து இதுப் போன்ற சம்பவங்கள் நிறைய நடந்திருப்பதாகவும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
1714 லிருந்தே...
இவர் குறிப்பிட்டுள்ள 17ம் நூற்றாண்டு காலம் 1707 வரை காபூலிலிருந்து தென்னிந்தியா வரை மதசார்பற்ற சிறந்த நிர்வாகத்தை ஒளரங்கசேப் நடத்திக் காட்டினார். அதைப்பொறுக்காத மராத்திய மத வெறியர்கள் சதி திட்டம் தீட்டி அவரை தீர்த்துக் கட்டி அவருடன் சேர்த்தே மதசார்பற்ற ஆட்சியையும் குழி தோண்டிப் புதைத்து விட்டு 1808 வரை மாறி மாறி மராத்திய மதவெறியர்களே ஆட்சி செய்தனர்.
1808 ல் கிழக்கிந்திய பிரித்தானிய கம்பெனிகளிடம் இந்தியா வீழ்ந்தப் பின்னர் பிரிட்டிஷாரின் ஆட்சிக்குட்பட்டக் காலத்தில் தேசப்பற்றுள்ள ஹிந்துக்கள் தவிற மதவெறிப்பிடித்த மோடி வகையறாக்கள் அனைவரும் பிரிட்டிஷாரிடம் இரகசியமாகச் சென்று உங்களுடைய எதிரிகளாகிய முகலாயர்கள் எங்களுக்கும் எதிரிகள் என்பதால் நாங்கள் உங்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்கிறோம் என்றுக்கூறி முகலாய சக்கரவர்த்திகளை காட்டிக்கொடுத்து அரச பதவிகளை அடைந்து கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொண்டு அப்போதிருந்தே முஸ்லீம் இனச்சுத்திகரிப்பு வேலையை செய்யத் தொடங்கி விட்டனர். அதைத்தான் இப்பொழுது மோடி சுட்டிக்காட்டுகிறார் என்னைப் போன்ற அவர்களை எல்லாம் விட்டு விட்டு என்னை மட்டும் பிடிப்பது நியாயமாகுமா ? என்று கேட்கிறார்.
இந்தியா சுதந்திரமடைந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட பொழுது இந்திய தேசத்தை நேசித்து இங்கேயே தங்கிக் கொள்ளும் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அப்போதைய பாரதப் பிரதமர் நேரு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் முஸ்லீம்கள் இந்தியாவில் தங்கி விட்டனர்.
இந்திய அரசியல் சாசன சட்டத்திலும் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தௌ;ளத் தெளிவாக சட்டம் வரையறுக்கப்பட்டு விட்டதால் அதனடிப்பiயில் ஆட்சி செய்வேன் என்று சத்திய பிரமானம் செய்தே ஆட்சிக்கு வந்தவர் மோடி என்பதால் சுதந்திரத்திற்கு முன் உள்ள நிலையை சுட்டிக்காட்டி தப்பிக்க நினைக்க முடியாது என்று மோடிக்கு பதவி பிரமானம் செய்து வைத்தவர்கள் விளக்க வேண்டும்.
சுதந்திரத்திற்குப் பிறகும்...
சுதந்திரமடைந்தப் பிறகும் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று சட்டம் வரையறுக்கப்பட்டப் பிறகும் இந்தியாவில் பல மாநிலங்களில் எதிர்பாராமலும் அல்லது திட்டமிட்டும் பல கட்டங்களில் மதவெறியர்களால் முஸ்லீம் இனச் சுத்திகரிப்பு நடந்திருக்கின்றன அதில் ஏராளமான உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளன அதை மறுப்பதற்கில்லை ஆனால் அப்போதைய ஆட்சியாளர்களால் இவரைப் போன்று ஒரு சாராருக்கு ஆதரவளித்து அவர்களைத் தூண்டிவிட்டு அதற்கு தேவையான உதவிகளும் பரிசுகளும் வெளிப்படையாக வழங்கப்படவில்லை.
ஆடத் தெரியாதவள் முற்றத்தை குறை கூறியதைப் போல் தான் இவருடைய பதில்கள் 2002 லிருந்து இதுவரை இருந்து வருவதை நடுநிலையாளர்கள் பார்த்து வருகின்றனர்.
தேசப்பற்றற்றவர்கள்.
பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை எப்படி ஆட்சி செய்வது என்ற அடிப்படை அறிவு அறவே இல்லாமலும்> இந்திய தேசத்தின் தொன்மை வாய்ந்த வரலாறு மற்றும் இந்திய அரசியல் சாசன சட்ட விதிமுறைகள் அறவேத் தெரியாமலும் ஆட்சி செய்யப் புறப்படுபவர்கள் தான் மதவெறிப் பிடித்த மோடி வகையறாக்கள் என்பதற்கு மேற்காணும் மோடியின் கூற்று சான்றாக உள்ளது.
ஆங்கிலேயர்களின் ஆட்சி காலம் தான் இந்தியாவின் பொற்காலம் என்று சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகத்ராஜ் என்பவர் கூறியது அடுத்த சான்று. அதற்கு முந்தைய சான்றுகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.
தார்மீக பொறுப்பேற்று...
எதிர் பாராத விபத்து ஒன்று நடந்து அதில் சில உயிர்கள் பலியாகி விட்டாலே சம்மந்தப்பட்ட அந்த இலாக்காவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் ( அதற்கு அவர் காரணமாக இல்லை என்றாலும் ) அதற்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகுவதாக அறிவித்ததையும் விலகியதையும் பார்த்திருக்கிறோம்.
2002ல் நடந்த வரலாறு காணாத முஸ்லீம் இனப்படுகொலைகளை உலகளாவிய ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் வன்மையாக கண்டித்திருக்கின்றன.
கலவர வழக்குகளை விசாரித்த உச்சநீதி மன்றம் மோடியை 'நவீன நீரோ' என கடுமையாக விமர்சித்திருந்தது.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் கடுமையாக மோடி அரசை விமர்சித்தன.
அந்தளவுக்கு கடுமையான கண்டனக் கனைகள் கையாளாகாத மோடியை நோக்கிப் பாயந்தப் பின்னரும் ஒரு வார்த்தைக் கூட இதற்கு பொறுப்பேற்று நான் பதவி விலகுகிறேன் என்று இதுவரை இந்த சொரனைக் கெட்ட ஜென்மம் சொன்னதே கிடையாது. அந்தளவுக்கு பதவி வெறியும்> மத வெறியும் பிடித்த மனித மிருகம் தான் மோடி.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் முடிந்த அடுத்த நாள் பந்த்'துக்கு மோடியே சங்பரிவாரங்களை வெளிப்படையாக கூவி அழைத்தது ஒன்றுப் போதும் மோடியை கைது செய்து உள்ளேத் தள்ளுவதற்கு ஆனால் எதற்கும் கையாளாகாத காங்கிரஸ் அரசு இதையும் செய்யாது.
ரயில் எரிப்பை கண்டித்து போராட்டக்காரர்கள் கடையடைப்பு அறிவிக்க வேண்டும் அதை அரசு தடுக்க வேண்டும் இது தான் நடைமுறை ஆனால் அரசே முழு அடைப்புக்கு அறிவித்து விட்டு போராட்டக்காரர்களைத் தூண்டுகிறது என்றால் இதுப்போதாதா ?
இதற்காக விசாரனை என்றப்பெயரில் ஒருத் தொகையை வீணடித்துக்கொண்டு இருப்பதை இந்திய அரசாங்கம் நிருத்திக் கொண்டு இவரை கைது செய்து அதிரடி நடிவடிக்கை எடுத்து இவரால் மதசார்பற்ற இந்தியாவிற்கு உலக அரங்கில் ஏற்பட்ட கலங்கத்தை> தலைக் குணிவை நிவர்த்தி செய்ய முன் வர வேண்டும்.
காங்கிரஸ் அரசு முன் வருமா ? வரவே வராது !! பாம்புக்கு வாலும்> மீனுக்குத் தலையும் ஆட்டும் பாவலா காட்டும் ஸ்டைலை காங்கிரஸ் கை விடாது.
No comments:
Post a Comment