சுய தொழில்கள் வரிசையில் அடுத்து நாம் பார்க்க இருப்பது ஈமு கோழி வளர்ப்பு பற்றியது. இதைப் பற்றி விரிவாக மூன்று பதிவுகளாக தருகிறேன்.
முழுவதுமாக படித்து விட்டு இத் தொழில் தொடங்கலாமா வேண்டாமா என்பதை பற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இது கொஞ்சம் ரிஸ்க ஆன தொழில் என்பது என் எண்ணம். இன்று தமிழகத்தில் கோழி வளர்ப்பு என்பது ரெம்பவும் பிரபலமானது போல் ஈமு கோழி வளர்ப்பு அவ்வளவு பிரபலமாகவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
இன்னும் அறிமுக நிலையிலேயே உள்ளது. இதை சந்தைபடுத்துவதும் அவ்வளவு எளிதான காரியமல்ல. தமிழ் நாடு வேளாண்மைக் கழகமும் இதைத் தான் உறுதி செய்கிறது. சுய தொழில்கள் பற்றிய எனது கணிப்பில்(Rank list) .இத் தொழிலுக்கு கடைசி இடந்தான் கொடுக்க முடிகிறது. இன்னும் நம் நாட்டில் நன்கு வளர வேண்டிய தொழில் இது.
Engr.Sulthan
பாகம்-1
ஈமு கோழி வளர்ப்பது எப்படி
ஈமு கோழிப்பண்ணை அமைக்க விருப்பமா?
ஈமு கோழிகள் ரேட்டைட் இனத்தைச் சேர்ந்தவை. இப்பற வைகள்அவற்றின் விலை மதிப்பு மிக்க இறை ச்சி, முட்டைகள், தோல், தோலி லிருந் து பெறப்படும் எண் ணெய் மற்றும் இறகுகள் போன்ற வற்றுக்காக வளர்க்க ப்படுகின்றன. இப்பறவைகள் எந்த தட்ப வெப்ப நிலை யையும் தாங்கி வளரக் கூடிய வை. ஈமு மற்றும் ஆஸ்டிரிச் பறவைகள் ஒரே சமயத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப் பட்டாலும் ஈமு வளர்ப்பே அதிகம் பிரபலமடைந்து வருகிறது.
ஈமு, ஆஸ்டிரிச், ரியா, கேசோவரி மற்றும் கிவி ஆகிய பறவைகள்
ரேட்டைட் இனத் தைச் சார்ந் தவை. இவற்றுள் ஈமு மற்றும் ஆஸ்டிரிச் கோழி கள் உலகத்தின் பல பகுதி களில் அவற்றின் இறை ச்சி, தோல், தோலிலிருந்து பெற ப்படும் எண்ணெய், இறகுகள் ஆகியவற்றுக்காக வணிக ரீதி யாக வளர்க்கப் படுகின்றன. இப் பறவைகள் வெப்பமான நாடுகளிலும், குளிர் பிரதேசங்களிலும் வளரக்கூடியன. இப்பற வைகள் திறந்தவெளியிலும், தீவிர முறை யிலும் வளர்க்கப் படுகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் ஈமு கோழி வளர்ப்பில் முதலிடம் வகிக்கின்றன.
ஈமு கோழிகளின் உடலமைப்பு: ஈமுக்கள் நீண்ட கழுத்து, சிறிய
தலையையும், கால்களில் மூன்று விரல் களையும் கொண்டதாக இருக்கும். மூன்று மாத வயது வரை ஈமுக்களின் உடலில் இறகுகள், நீண்ட கோடுகள் போன்று காண ப்படும். ஆனால் இந்த கோடுகள் 4-12 மாத வயதில் மறைந்து, பழுப்பு நிறமாக மாறி விடும். வளர்ந்த ஈமு பறவைகள் 6 அடி உயரமும் 45-60 கிலோ உடல் எடை உடையன வாகவும் இருக்கும். கால்கள் மிக நீண்டவையாக இருக்கும். அவற்றின் காலின் தோல் மிக மொத்தமாகவும், செதில் களுடனும் காணப்ப டுவதால் மிக உறுதியாக இருக்கும். ஈமுக்களின்இயற்கையான உணவு பூச்சிகள், செடிக ளின் இலைகள், பழங்கள் மற்றும் காய் கறிகளாகும். பெண் ஈமு பறவைகள் ஆண் பறவைக ளைவிட பெரியதாக இருக்கும். ஈமுக் கள் முப்பது வருடம் வரை வாழக் கூடியவை. ஈமுக்களை மந்தையாக வோ அல்லது ஆண், பெண் பறவை களாக ஜோடிகளாகவோ வளர்க்கலாம்.
ஈமுவிலிருந்து கிடைக்கும் பொருட்கள்: ஈமு கோழிக்கறி குறை ந்த கொழுப்புச்சத்து கொண்டது. மேலும் மேல் தோல் மென்மை யாகவும் உறுதியாகவும் இருக்கும். ஈமுக்களின் கால்தோல் சிறப்பானஅமைப்பினைக் கொண்டிருப் பதால் அதிக விலைமதிப்பு கொண்டது. ஈமுக்களின் கொழுப்பிலிருந்து எடுக்கப் படும் எண் ணெய் உணவுக் காகவும் மருந்தாகவும், அழகு சாதன பொருட் கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
ஈமு கோழிகளின் பண்ணைப் பொருளா தாரம்: ஈமு கோழிகளின் பண்ணைப் பொருளாதாரத்தினைப் பற் றி மேற்கொண்ட ஒரு ஆய்வின் மூலம் மூலதன செலவில் 68% கோழிகளை வாங்குவதற்கும், 13% பண்ணையை அமைப்பதற்கும், 19% குஞ்சு பொரிப்பகத்தினை அமைப்பதற்கும் செலவாகிறது என கணக் கிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு கருவுற்ற முட் டை யினை உருவாக்குவதற்கு ரூ.793 எனவும் ஒரு நாள் குஞ்சு ஒன்று உற்பத்தி செய்வதற்கு ரூ.1232 செலவாகிறது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
ஒரு ஜோடி ஈமு கோழி வருடத்திற்கு ஆகும் தீவனச்செலவு ரூ.3578. ஒரு நாள் வயதடைந்த ஈமு கோழிக்குஞ்சு ஒன்றின் விற் பனை விலை ரூ.2500 – 3000. எனவே, ஈமு கோழிப் பண்ணை யினை லாபகரமாக நடத்த முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 80 சதவீதத்திற்கு அதிகமாகவும் தீவனச்செலவு குறைவா கவும் குஞ்சு பருவத்தில் இறப்ப சதவீதம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவும் இருக்க வேண்டும்.
தொடர்புக்கு: ஆர்.ஜி.ரீஹானா, 268/77, ஓல்ட் ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர், தாராபுரம்-638 657.
-ஆர்.ஜி.ரீஹானா, எம்.எஸ்சி., எம்.பில்., அக்ரி கிளினிக்,8903757427.
ஈமு கோழி வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பண்ணை அமைத்து சிரத்தையுடன் தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று கூறுகிறார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை யில் ‘சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா’ நடத்திவரும் எம்ஜிஎஸ்.அவர் கூறியதாவது: நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். கல்லூரி படிப்பை முடித்தவுடன் தனியார் நிறுவனத்தில் மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைபார்த்து வந்தேன். விவசாயம் மற்றும் பண்ணைகள் பற்றிய தகவல்களை ஆர்வமுடன் தெரிந்து கொள்வேன். ஆந்திரா, புதுவை ஆகிய இடங்களில் உள்ள பண்ணைகளுக்கு சென்று ஈமு கோழி வளர்ப்பு குறித்து முழுமையாக அறிந்துகொண்டேன்.
2004ம் ஆண்டு 5 ஜோடி ஈமு கோழிகளுடன் பெருந்துறையில் பண்ணை துவங்கினேன். அவை முட்டையிட துவங்கியதும் வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து குஞ்சு பொரிக்க செய்து, அவற்றையும் சேர்த்து வளர்த் தேன். ஈமு வளர்ப்பையே முழு நேர தொழிலாக மேற் கொண்டேன். தமிழகத்தில் ஈமு எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த அடிப்படையில் ஈமுவை வளர்க்க விவசாயிகளிடம் ஆர்வத்தை உருவாக்கினேன். சிரமம் இல்லாத வளர்ப்பு முறை, அதனால் கிடைக்கும் வருமானத்தை பார்த்து இன்று தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையிலும், சொந்தமாகவும் ஆயிரக்கணக்கானோர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சந்தை வாய்ப்பு!
ஈமு இறைச்சி விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். அக்கம்பக்கத்தினர் வீட்டுத்தேவைக்கும், விசேஷங்களுக்கும் வாங்கிச் செல்வார்கள். ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் பிடித்து சப்ளை செய்யலாம்.
பயன்கள்: மற்ற பறவை, விலங்கி னங்களை ஒப்பிடும்போது ஈமுவில் கழிவு குறைவு. முட்டை, இறைச்சி, எண்ணெய் கிடைக்கிறது. ஈமு கோழிகளின் இறைச்சி மற்ற இறைச்சிகளை விட சுவையில் தனித்தன்மை வாய்ந்தவை. ஆடு, மாடு போன்ற கால்நடைகள்தான் சிவப்பு மாமிசம் கொடுக்கும். சிவப்பு மாமிசம் கொடுக்கும் பறவை இனம் ஈமு. ஈமு இறைச்சிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. 40 முதல் 45 கிலோ எடை கொண்ட ஈமுவை இறைச்சிக்காக வெட்டும்போது 10 முதல் 12 கிலோ கொழுப்பு தனியாக கிடைக்கும்.
கொழுப்பை காய்ச்சி எண்ணெய் எடுக்கப்படுகிறது. 5 முதல் 6 லிட்டர் ஈமு எண் ணெய் கிடைக்கும். சுத்திகரிப்பு செய்து வலி நிவாரணி, அழகு சாதன கிரீம்கள் தயாரிக்க பயன்படுத்தப்படு கிறது. ஒரு ஈமுவில் 6 சதுரஅடி தோல் கிடைக்கும். மிருதுவாகவும், அதிக வலுவாகவும் இருப்பதால் செருப்பு, கைப்பை, பர்ஸ்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
இதன் சிறகுகள் கம்ப்யூட்டர் போன்ற இயந்திரங்களை சுத்தம் செய்யும் பிரஷ்கள் தயாரிக்கவும், அழகான தொப்பிகள், ஆடைகளின் மேல் அழகு வேலை பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாஸ்து பொருளாகவும் ஈமு முட்டைகளை பயன்படுத்துகின்றனர். ஈமு முட்டைகளை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை.
கட்டமைப்பு
பண்ணை தொடங்க குறைந்தது 5 ஜோடி ஈமு குஞ்சுகள்(ரூ.75 ஆயிரம்) வேண்டும். 40 அடி நீளம், 35 அடி அகல இடம் வேண்டும். இடத்தை சுற்றி 5 அடி உயரம் கம்பி வேலி, தீவனம் மழையில் நனையாமல் இருக்க சிறிய ஆஸ்பெஸ்டாஸ் ஷெட், தீவனம் வைக்க 2 பாத்திரம், தண்ணீர் தொட்டி (இதற்கு செலவு ரூ.15 ஆயிரம்), முட்டைகளை பொரிக்க வைக்க இன்குபேட்டர் (ரூ.3 லட்சம்), சீரான மின் சப்ளைக்கு ஜெனரேட்டர் (ரூ.1 லட்சம்) போன்றவை வேண்டும்.
எங்கு வாங்கலாம்?
ஈமு குஞ்சுகள் மற்றும் தீவனங்களை தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் உள்ள ஈமு பண்ணைகளில் பெற்றுக் கொள்ளலாம். இன்குபேட்டர், ஹேச்சர் மெஷின் ஐதராபாத்தில் கிடைக்கும்.
குஞ்சுகள் தேர்வு
ஈமு குஞ்சுகளை வாங்கும்போது பார்வை, கேட்கும் திறன் சரியாக உள்ளதா, கால்களை வளைக்காமல் நடக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். 3 மாதத்துக்கு மேற்பட்ட குஞ்சுகளைதான் வாங்க வேண்டும். முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகளுக்கு 3 மாதம் வரை உடல் பகுதியில் வெள்ளை கோடுகள் இருக்கும். 3 மாதத்துக்கு பின் கோடுகள் மறைந்து இயல்பான நிறம் வரும். 3 மாத ஈமு, 4 முதல் 6 கிலோ எடை இருக்கும்.
வளர்ப்பு முறை
3 மாத குஞ்சுகளை வாங்கிவந்து 5 மாதம் வரை கூட்டமாக வளர்க்கலாம். ஆண், பெண் தெரிந்த பின் தனித்தனியாக பிரித்து வளர்க்க வேண்டும். பெண் ஈமுக்கள் 18வது மாதத்தில் முட்டையிடும் பருவத்துக்கு வரும். தொண்டையில் இருந்து தும்தும் என ஒலி எழுப்புவதை வைத்து இதை தெரிந்து கொள்ளலாம். 24வது மாதத்தில் இனச்சேர்க்கைக்கு விட்டால் அதிக முட்டை கிடைப்பதோடு தரமான குஞ்சுகளையும் பொரிக்க வைக்க முடியும்.
குஞ்சு பொரிப்பு
ஹேச்சர் மெஷினில் ஒரே நேரத்தில் 700 முட்டைகளை அடுக்கி வைத்து, 93 முதல் 96 டிகிரி வரை தொடர்ந்து 52 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும். பொரித்த குஞ்சுகளுக்கு கால்கள் வளையாமல் இருக்க 2 கால்களையும் சேர்த்து டேப் மூலம் ஒட்டி விடவேண்டும். 15 நாட்களுக்கு பின் டேப்பை பிரித்து இன்குபேட்டரில் 20 நாட்களுக்கு வைக்க வேண்டும். பின்னர் குஞ்சுகளுக்காக தனியாக ஷெட் அமைத்து ஒரு மாதம் வளர்க்க வேண்டும். 3 மாதத்துக்கு பின்னர் வளர்ந்த கோழியாக மாறும்.
வருமானம்
3 மாத வயதுள்ள 5 ஜோடி ஈமு வளர்த்தால் 16 மாதத்துக்குள் 30 கிலோ எடையுள்ள ஈமு கோழி கிடைக்கும். 5 ஜோடியும் சராசரியாக 30 கிலோ எடை இருந்தால் 300 கிலோ இறைச்சி கிடைக்கும். ஒரு கிலோ இறைச்சி குறைந்தபட்சம் ரூ.295க்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம் ரூ.88,500 கிடைக்கும். வெட்டப்படும் கோழிகளில் இருந்து 5 லிட்டர் எண்ணெய் வீதம் 5 ஜோடி ஈமுவுக்கு 50 லிட்டர் ஈமு எண்ணெய் கிடைக்கும். ஒரு லிட்டர் ரூ.1500க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.75 ஆயிரம் கிடைக்கும். இறைச்சி, கொழுப்பு மூலம் ஒரு ஆண்டில் ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 500 கிடைக்கும்.
இதற்கான செலவு 5 ஜோடி ஈமு கோழிகள் ரூ.75 ஆயிரம், 15 மாதத்திற்கு அதற்கான தீனி உள்பட மற்ற செலவுகள் ரூ.25 ஆயிரம். ஆண்டு முடிவில் 5 ஜோடிகளுக்கு மட்டும் ரூ.63,500 வருமானம் கிடைக்கும். 15 மாதத்தில் இறைச்சிக்காக ஈமுக்களை வெட்டாமல் இனவிருத்தி செய்து வளர்த்தால் பெண் ஈமுக்கள் 18வது மாதத்தில் பருவத்துக்கு வந்து ஆண்டுக்கு 20 முட்டைகள் தரும். 5 ஜோடி வளர்க்கும்போது 100 முட்டைகள் கிடைக்கும். இதன்மூலம் தரமான 60 குஞ்சுகள் கிடைத்தால் அவற்றை விற்று ரூ.4.5 லட்சம் சம்பாதிக்கலாம்.
D˜ ÚLÖ³ Y[Ÿப்“ CÚTÖ‰ TWYXÖL E·[‰. HÁ GÁÖ¥ ARÁ JªÙYÖ£ TÖL˜• TVÁT|•. D˜ ÚLÖ³ CÛop –L°• rÛYVÖL C£eh•. YÖÁÚLÖ³ CÛop ÚTÖX C£eh•. B]Ö¥ A‰ N¼¿ Y¨YÖL C£eh•. A‡L ÚSW• heL¡¥ ÛY†‰ NÛU†RÖ¥ G¸‡¥ ÙY‹‰ –£‰YÖf«|•.
D˜ ÚLÖ³ htrL· Y[Ÿப்TR¼h RtÛN A£ÚL E·[ “‰eÚLÖyÛP›¥ E·[ R–²SÖ| LÖ¥SÛP A½«V¥ T¥LÛXeLZL YyPÖW BWÖšop ÛUV†‡¥ «ÛXeh fÛPeh•. J£ D˜ ÚLÖ³ htr ÙTÖ½†R EPÁ ARÁ «ÛX ¤.1,500. ARÁ ‘Á]Ÿ J£ UÖR• YÛW E·[ htr «ÛX ¤.2 B›W†‰ 500. G¥XÖY¼Û• «P S¥X ÙNš‡ GÁ] ÙYÁÖ¥ D˜ ÚLÖ³›Á CÛop ÙLÖXÍyWÖ¥ C¥XÖR‰ Bh•. C‰ J£ fÚXÖ ¤.400-eh «¼LT|f‰.
D˜ ÚLÖ³LÛ[ Y[Ÿ†‰ S¥X XÖT• N•TÖ‡eLXÖ•.
இன்னும் தொடரும்.......
இணையத்தில் இருந்ததை உங்கள் இதயத்தில் இணைப்பவர்
Engr.Sulthan
No comments:
Post a Comment