இயந்திரமாக்கப்பட்ட இன்றையச் சூழலில் தொழுவதற்கு ? ? ? Busy, Busy, Busy, No Time No Time
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹீ)
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..
"(மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர் 3:104"
இயந்திரமயமாக்கப்பட்ட இவ்வுலக வாழ்வில் அல்லாஹ்வை தொழுவதற்கு நேரம் கிடைப்பதில்லை, என இறைவனை தொழாததற்கு இன்றையச் சூழலையும் தங்கள் வாழ்வாதாரச் சூழலையும் காரணம் காட்டி அதனால் அதைக் கொண்டு அல்லாஹ் குற்றம் பிடிக்கமாட்டான், என தமக்கு தாமே திருப்திப்பட்டுக் கொள்பவர்கள், இந்த வாழ்வாதாரங்களை தமக்கு அல்லாஹ் அளித்ததே அவனை வணங்குவதற்கே, அவனுக்கு நன்றி செலுதததுவதற்கே என்று ஏனோ அந்த அல்லாஹுக்கு நன்றி மறந்தவர்கள் ஆகி விடுகிறாரகள்.
உலக வாழ்வில் மட்டுமே ஈடுபட்டு கொண்டு, தாங்கள் தொழாததற்கு "காலம் ஒதுக்கும் கடமையில் தவறிவிடக்கூடிய சூழல் என்பது தவிர்க்கமுடியாத ஒன்று!!!" என தங்களின் இயலாமையை நியாயப்படுததும் வாதங்களில் ஈடுபட்டு மற்றவர்களையும் சலவை செய்யும் இவர்கள் இறைவசனங்களைக் கொண்டு சிந்திக்க மறுக்கிறார்கள்.
மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கம் என்ன என்பதை அறியாதவர்களில் ஒருவராகவும் ஆகி விடுகிறார்கள்.
அல்லாஹ் குர்ஆனில் இது குறித்து கூறுகிறான்:
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை 51:56
இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்; இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம். 5:58
மனித இயல் குற்றங்களுக்கு, தண்டனையை வரிசைப்படுத்திய இறைவன், இதற்கான தண்டணையை வரிசைபடுத்தவும் இல்லை!! எனச் கற்பனையிட்டுச் சொல்லும் இவ்வகை மனிதர்கள், அல்லாஹ் எச்சரித்து சொல்லியிருக்கும் வசனங்களைக் கொண்டு பொருள் பட மறுக்கறார்களா அல்லது அவ்வசனங்களையே மறைக்க முற்படுகிறார்களா. தொழுகை இல்லா குற்றவாளிகளின் தண்டணை குறித்து அல்லாஹ் கூறுகிறான்.-
சுவர்க்கச் சோலைகளில் இருப்பவர்கள் குற்றவாளிகளைக் குறித்து “உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை 74:41-43
மேலும் ஸஹர் எனும் நரகத்தை பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்:-
“ஸகர்” என்னவென்பதை உமக்கு எது விளக்கும்?அது (எவரையும்) மிச்சம் வைக்காது; விட்டு விடவும் செய்யாது.(அது சுட்டுக் கரித்து மனிதனின்) மேனியையே உருமாற்றி விடும்.அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.74:27-30
நபி (ஸல்) அவர்களை முதலில் கண்ணியப்படுத்துபவர்கள் நாங்கள் தான் என பெருமை பட்டுக் கொள்ளுபவர்கள், நபிகள் நாயகம் சொல்லிததந்த இத்தொழகைகளை முதலில் கடைபிடித்து அவர்கள் சொல்லித் தந்த தளத்தில் நின்று அல்லாஹ்வை வணங்க வேண்டும், நாங்களும் நபி (ஸல்) அவர்களின் சிறந்த உம்மத்துக்கள் என நிரூபிக்க வேண்டும்.
மூவருடைய தொழுகையை அல்லாஹ் அங்கீகரிக்கமாட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1. ஜமாஅத்தினரின் வெறுப்புக்குரிய இமாமின் தொழுகை.
2. சுதந்திர மானவனை அடிமையாக்கிக் கொண்டவரின் தொழுகை.
3. நேரம் தவறித் தொழுபவரின் தொழுகை.(அபூதாவூத், இப்னுமாஜா)
இன்னும், (கவனமற்ற) தொழுகை யாளிகளுக்குக் கேடுதான்.அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்..(107:4,5).
''தொழுகையில் பாராமுகமாயிருக்கும்'' என்பதன் பொருளென்ன? என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, உரிய நேரத்தில் தொழாது பிற்படுத்துவதாகும்., இவர்களுக்குக் கொடிய வேதனைதரும் ''வைல்'' என்னும் நரகம்தான் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஸஅதிப்னு அபீவக்காஸ் அவர்கள் கூறுகிறார்கள்.
தொழுகை நேரத்தை பிற்படுத்துவோர்கள், மற்றும் கவனமற்ற தொழுகையாளிகளுக்கு கேடு எனும் இறைவசனங்கள் மற்றும் நபி மொழிகள் மனிதனை எச்சரிக்கை செய்து இறைவனை நேரத்துடன் வணங்குவதின் கட்டாயத்தை எடுத்துச் சொல்கிறது.
மரணத்தறுவாயில் இருக்கும் மனிதர்கள் கூட கண்ணசைவின் மூலம் தொழுது கொள்ளுங்கள் என தொழுகையின் மேன்மையை உணர்த்தித் தருகிறது,
யார் தொழுகையை, பாதுகாத்து (தொழுகின்றாரோ) அது அவருக்கு மறுமையில் ஒளியாகவும், அத்தாட்சியாகவும், பாதுகாப்பாகவும் ஆகிவிடும். யார் தொழுகையைப் பேணித் (தொழ வில்லையோ) அது அவருக்கு ஒளியாகவோ, அத்தாட்சியாகவோ, பாதுகாப்பாகவோ இருக்காது. இன்னும் அவர் மறுமையில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலஃப் போன்றவர்களோடு எழுப்பப்படுவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், தப்ரானி)
எவன் காரணமின்றி இரண்டு தொழுகையைச் சேர்த்து, தொழுதானோ அவன் பெரும் பாவங்களின் வாசலுக்கு வந்தவனாவான் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஹாகிம்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
'ஒருவன், முஅத்தின் தொழுகைக்காக விடுக்கும் அழைப்பினை செவியேற்றும் அதன்பக்கம் விரைந்து வருவதிலிருந்து தடுக்கும் காரணம் எதுவுமில்லையானால், தனித்து நின்று நிறைவேற்றப்படும் அவனின் தொழுகை (மறுமை நாளில்) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.'
அப்போது தோழர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் 'காரணம் என்று கூறினீர்களே அது என்ன?
எவை எவை காரணங்களாக அமையமுடியும்' என வினவ 'அச்சமும் நோயும் தாம்!' என்று பெருமானார் (ஸல்) விடை பகர்ந்தார்கள்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம்:அபூதாவூத்
1. நிச்சயமாக தொழுகை விசுவாசிகளின் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது. (4:103)
2. அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமான அமல் எது என்று நான் நபி(ஸல்) அவர்களிடம்; கேட்டேன், தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் - அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (புகாரி)
அல்லாஹ்வின் நேசத்தை விரும்பும் விசுவாசிகள் தொழுகையை முறைப்படி ருகூஹ் செய்வோருடன் ருகூஹ் செய்து, ஸுஜூது செய்வோருடன் ஸுஜூது செய்து தொழுகையை முறையாக கடைபிடிப்பார்கள்
மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக 9:112.
தொழுகையை தொழுவதன் மூலமும் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றியவனாகவும், நபிகள் நாயகம் கற்றுத் தந்த முறைப்படி அல்லாஹ்வை தொழுததின் மூலம் நபி (ஸல்) அவர்களை கண்ணியப் படுததுபவனாகவும் ஆகிறான். அதற்குறிய நற்கூலியையும் பெறுகிறான். அத்தகையோர் நபி (ஸல்) கற்றுததந்த வணக்க வழிகளில் மட்டுமே அலலாஹ்வை வணங்குவார்கள். நபி (ஸல்) அவர்கள் சொல்லித்தராத வேறு எந்த தளத்தையும் அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்
மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்)வாரிசுதாரர்கள்.இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள் (23: 9-11)
அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். திருக்குர்ஆன் 2.:3.
தொழுகையைக் கொண்ட இத்தகைய உண்மையாளர்கள் அல்லாஹ்வின் எச்சரிக்கைக்கு பயப்படுவார்கள், அவனின் சொல்லுக்கு கட்டுப்படுவார்கள். பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்
நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். 30:31
எங்களுக்கும், அவர்களுக்கும் (காஃபிர்களுக்கும்) இடையில் உள்ள உடன்படிக்கை தொழுகையாகும், எவன் தொழுகையை விட்டானோ அவன் காஃபிராகிவிட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உண்மையான விசிவாசிகள், தங்கள் அறிவைக்கொண்டு தாம் அறிந்து கொண்டவைகளை அழகிய முறையில் கடைபிடிப்பார்கள். பிறருக்கும் எடுத்துரைப்பார்கள்.
அல்லாஹ்வின் நேசத்தை விரும்பும் விசுவாசிகள் இறையச்சம் கொண்டு குறித்த நேரத்தில் கடமை யாக்கப்பட்ட தொழுகையை அதற்குறிய நேரத்தில் தொழுவார்கள் தொழுகைக்கு பிறரை ஏவும் உண்மையாளர்கள் முதலில் அல்லாஹ்வை தொழுவார்கள் பின்பு பிறரையும் தொழச்சொல்லி ஏவுவார்கள்.
மேலும் "நீங்கள் எங்களுக்கு நன்மையை ஏவினீர்களே இப்போது நரகில் கிடக்கின்றீர்களே..ஏன் என்று கேட்கப்படும் போது அவர்கள் ‘நாங்கள் உங்களுக்குத் தான் நன்மையை ஏவினோம் அதை நாங்கள் செய்யவில்லை அதனால் ஏற்பட்ட விளைவுதான் இது” என்று புலம்பி கதறுவார்கள் என்ற எச்சரிக்கையை நபி (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளதை மனதில் கொண்டு, தாங்களும் இறை வணக்கங்களை செயல்படுத்தி விட்டு பிறரை செயல் படுத்தவும் தூண்டுவார்கள்.
இத்தொழுகையாளிகளும் எங்களுடன் தான் இருந்தார்கள், தாங்கள் மட்டுமே தொழது கொண்டார்கள், எங்களை தொழச்சொல்லி ஏவாதிருந்தார்கள் என மறுமையில் குற்றம் சாட்டப்படுவோம் என்பதையும் நினைவில் கொண்டு, அவர்களை தொழுகைக்கு அழைப்பார்கள்
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள். செய்யாததை சொல்வது இறைவனிடம் வெறுப்புக்குரியதாகும்.” 61:2,3 எனும் இறைவசனத்திற்கேற்ப தாங்கள் கடைபிடிப்பதை, பிறரையும் கடைபிக்கச் சொல்வார்கள்
(“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!”14:40 என பிரார்த்தனையும் செய்வார்கள்
தொழுகைக்கு அழைப்பு விடப்படுகிறது. அழைப்பிற்கு பதில் கொடுத்துவிட்டு, நபி (ஸல்) அவர்களுக்கு வஸீலா பதவி வேண்டி துவா செய்ய சொல்லித் தரப்பட்டிருக்கிறது.
ஆனால் ஒருவர் தொலைக்காட்சியில், இசையில் மூழ்கியிருக்கிறார், தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பின்பும் அதிலே லயிததிருக்கிறார். அந்த இசை அல்லாஹ்வை நினைப்பதை விட்டும் அவரை மறக்கடிக்க செய்து விடுகிறது. மற்றொருவர் இன்றும் வேலைப்பழு எனும் காரணம் காட்டி கூட்டுத்தொழுகையை தள்ளி போடுகிறார். இவர்களை தொழுகைக்கு அழைக்கிறோம். பள்ளியில் தொழுகை முடிந்து திரும்பிய பின்பும் இசை ஓடிக்கொண்டே தான் இருக்கிறது.
அலுவலங்களுக்கு மேலாளர்களை திருப்திபடுத்த கோடியிட்ட அழகுமிக்க உடைகளை உடுத்திச் செல்லும் மற்றொருவர், சுத்தப்படுத்திக் கொள்ள உதவும் துணியை மேலே (தோளில்) அணிந்து கொண்டு (மேற்சட்டையில்லாமல்), கூப்பிடு தொலைவில் உள்ள இறையில்லத்திற்கு போகாமல், தாம் இருக்கும் இடத்திலேயே தொழுகிறார். தொல்லைக்காட்சிப் பெட்டியின் வால்யூம் சிறிதாக மற்றொருவரால் குறைக்கப்படுகிறது. முழுதுமாக அணைக்கப்பட வில்லை.
"நீங்கள் தொழுகையில் நிற்கும் போது அல்லாஹ் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறான், எனும் உள்ளச்சத்துடன் நில்லுங்கள் நீங்கள் தொழுங்காலும் உங்களை அழகு படுத்திக் கொள்ளுங்கள் என இஸ்லாம் வலியுருத்துகிறது.
மறுமையில் முதலாவதாக மனிதனிடம் தொழுகையைப் பற்றித்தான் கேள்வி கேட்கப்படும் தொழுகை ஒழுங்காக நிறைவேற்றப்பட்டிருந்தால் வெற்றியடைந்த நற்பாக்கியவானாவான். �
No comments:
Post a Comment